Advertisment

இந்துத்துவா கொள்கைகளை எதிர்த்து இயங்கும் ஒரு இந்து அமைப்பு... என்ன நடக்கிறது கன்னியாகுமரியில்?

அவர், ஆர்ய தர்மத்தை உடைத்து புதிய நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் உருவாக்கியவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
General Election 2019 Kanyakumari Constituency

General Election 2019 Kanyakumari Constituency

General Election 2019 Kanyakumari Constituency :  கன்னியாகுமரியின் தென் முனையில் அமைந்துள்ளது சாமித்தோப்பு. அய்யாவழி என்ற சமய மார்க்கத்தை பின்பற்றும் மக்கள் அங்கு அதிகமாகவாழ்ந்து வருகின்றனர். சாமித்தோப்பு என்பது அய்யாவழியின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறாது. அய்யா வைகுண்ட ஸ்வாமிகள் 19ம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்ட சமய மார்க்கம் இதுவாகும்.

Advertisment

இந்த மார்க்கத்தின் தற்போதைய தலைவர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மீது கடுமையான கோபத்தில் உள்ளார். அதிமுகவும், பாஜகவும் இணைந்து அய்யா வழி மார்க்கத்தினை இந்து அமைப்பிற்குள் கொண்டு வந்து, சாமித்தோப்பில் அமைந்திருக்கும் கோவிலை தங்கள் வசம் கொண்டு வர முயல்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பிரச்சனை தான் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பெரிய அளவில் வருத்தம் தருவதாக அமைந்துள்ளது. பாஜக தலைவர் மற்றும் மத்திய கப்பல் மற்றும் நிதித்துறையின் இணை அமைச்சராக பதவி வகித்து வரும் இவர், கன்னியாகுமரியில் மீண்டும் போட்டியிடுகிறார். அய்யாவழியின் தலைவர் அடிகளார் “சாமித்தோப்பில் அமைந்திருக்கும் அய்யாவழி கோவிலில் இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் தான் காரணம்” என்று கூறியுள்ளார்.

அய்யாவழியை பின்பற்றும் 10 லட்சம் மக்கள்

அய்யாவழியை மட்டும் சுமார் 10 லட்சம் மக்கள் பின் தொடருகின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் இந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மிக அதிகமாக உள்ளனர். பொன்.ராதாகிருஷ்ணன் நாடார் சமூகத்தை சேர்ந்தவர், அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் தொழிலதிபர் எச்.வசந்தகுமாரும் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் தான். சாமித்தோப்பிற்கு மிக அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். வசந்த் டிவியில் தினமும் வைகுண்ட சுவாமிகள் குறித்த சிறப்பு காணொளி ஒளிபரப்பப்படுகிறாது குறிப்பிடத்தக்க்கது.

அடிகளாரின் புகார் குறித்து பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, அந்த புகார்களை அவர் மறுத்துவிட்டார். ஆனால் சாமித்தோப்பு வளர்ச்சியடைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.  வைகுண்ட ஸ்வாமிகள் இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்கு மட்டு உழைத்தவர் இல்லை. அவர், ஆர்ய தர்மத்தை உடைத்து புதிய நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் உருவாக்கியவர்.

வைகுண்ட ஸ்வாமிகள்

வைகுண்ட ஸ்வாமிகள், திருவிதாங்கூரில் ஒரு இசைக் கலைஞராக தன் வாழ்நாளை வாழ்ந்து வந்தவர். சாதி அடிப்படையில் தீண்டாமைகளை சந்தித்து வந்த அவர், தன்னுடைய சொந்த முயற்சியில் இந்து புராணங்களையும், திருக்குறளையும் கற்றுத் தேர்ந்தவர். சுயமரியாதை, சமத்துவம், கொடை, உண்மை, கருணை, மற்றும் அன்பும் கொண்ட ஒரு தர்மத்தினை உருவாக்கினார். உயர்சாதியினர் வரும் பாதையில் தலைப்பாகை அணிந்து சமமாய் நடந்து போகச் சொன்னவர். சமத்துவம் சமஜம் என்பதை நிறுவி, சாதி மதங்கள் கடந்து சமபந்தி போஜனம் நடத்தியவர். நிழல் தாங்கல்கள் அமைத்து, மக்களுக்கு தங்க இடமும், உண்ண உணவும் அளித்தார். அங்கு தான் ஸ்வாமிகள் தங்களின் சமய கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

ஏ.கே. பெருமாள் கூறுகையில் “அடிகளாரை நல்ல மதத்தலைவராகவும், அய்யா வழியை, இந்து சமயத்திற்குள் இருக்கும் மறுமலர்ச்சி பெற்ற கிளைச் சமயமாகவும் பார்க்கின்றேன்” என்று குறிப்பிடுகிறார். லிங்காயத்துகளை போல் தனி மத அந்தஸ்த்து வேண்டும் என்று இவர்கள் கேட்பதைப் பற்றியும் தன்னுடைய ஆட்சேபத்தை தெரிவித்தார்.

வைகுண்ட ஸ்வாமிகள் வாழ்ந்த இடம் தான் தற்போது சாமித்தோப்பில் மிகப்பெரிய ஆலயமாக செயல்பட்டு வருகிறது. அங்கு வரும் பக்தர்கள், தலைப்பாகை அணிந்து வரவும், தன்னுடைய உணவையும், குடிநீரையும் சக பக்தருக்கு வழங்குவதையும் உறுதி செய்துள்ளது அந்த கோவில். ஸ்வாமிகள் வாழ்ந்த காலத்தில் இருந்தே, அருகில் இருக்கும் சுசீந்திரம் கோவிலுக்கு மாற்று வழிபாட்டுத் தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது.

தன்னுடைய சிறிய வீட்டில் இருக்கும் அடிகளார் இது குறித்து பேசுகையில் “ஜெயலலிதா இருந்த காலத்தில், தனித்துவம் கொண்ட மத வழிபாடுகள் மதிக்கப்படும் என்று சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் தற்போது இருக்கும் மாநில அரசோ மத்திய அரசின் அடிமையாக செயல்பட்டு வருகிறது. அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்பவர்கள் அனைவரும் சும்மா. மீண்டும் இவர்களின் தலைமையில் ஆட்சி அமைந்தால் வைகுண்ட ஸ்வாமிகள் மற்றும் அய்யாவழியின் நெறியும் காணாமல் போய்விடும்.

1980ம் ஆண்டு இங்கு நடைபெற்ற கலவரத்திற்கு பின்பு, அடிகளார், கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருக்கும் இந்து மற்றும் கிறித்துவ மக்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தியவர்.

அடிகளார் மற்றும் அவருடைய நான்கு சகோதரர்களும், இங்கு வரும் பக்தர்கள் அளிக்கும் கொடையை வைத்து சாமித்தோப்பு கோவிலை கவனித்து வருகின்றனர். இந்த கோவிலேயே தங்கிவிடும் நபர்களுக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் மூன்று நேரம் உணவளிக்கப்படுகிறது. இதனை நடத்த மாநில அரசிடம் இருந்து எந்தவிதமான நிதிகளையும் இவர்கள் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : யோகிக்கு எங்களின் வளர்ச்சி மீது பொறாமை – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்

General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment