Advertisment

Check Your Name in Voter List Online: உங்கள் பெயர் ஓட்டு லிஸ்டில் இருக்கா? வீட்டில் இருந்தப்படியே உங்களால் பார்க்க முடியும்.

How to Check Name in Voter List in Tamil Nadu: இரண்டு வழிகளில் உங்கள் பெயர் குறித்து சோதனை செய்யலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Check Name in Voter List

How to Check Your Name in Voter List through SMS: வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், திருவிழாவை முன்னிட்டு மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக, அதாவது காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வாக்குப்பதிவுக்காக, பேருந்து, ரயில் என மக்கள் அடித்துப் பிடித்து சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் கூட, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற விடுமுறை எடுத்துச் செல்வதையும் நாம் காண முடிகிறது.

மேலும் படிக்க - அட... வீடியோவே போட்டுட்டாங்க... இ.வி.எம். மெஷினில் வாக்களிப்பது இப்படித்தான்!

ஆனால், ஊருக்கு கிளம்புவதற்கு முன் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கின்றதா என ஒருமுறை சோதித்துவிட்டு கிளம்பினால் நல்லது.

பதற வேண்டாம்... இதற்காக நீங்கள் பிரயாசப்படத் தேவையில்லை. ஜஸ்ட் இன்டர்நெட் போங்க... அங்க நாங்க சொல்ற வழிமுறைகளை ஃபாலோ பண்ணுங்க... 3 நிமிடத்தில் உங்கள் பெயரை காணலாம்,

http://www.elections.tn.gov.in எனும் தளத்திற்கு போங்க.

அதில் Search Voters List எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

NATIONAL VOTERS SERVICE PORTAL என்ற வேறு ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும்

அதில், இரண்டு வழிகளில் உங்கள் பெயர் குறித்து சோதனை செய்யலாம்

Search by Details

Search by EPIC No.

இதில், முதலாம் ஆப்ஷனான Search by Details-ல் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களை அதில் பதிவிட வேண்டும். பின் Search என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், Search கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

அப்படியில்லை எனில்,

இரண்டாவது ஆப்ஷனான Search by EPIC No. மூலம் உங்கள் பெயரை பார்க்கலாம். அதாவது, உங்கள் வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணை பதிவு செய்து, உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க - பதற்றம், குழப்பம் வேண்டாம்.. முதன் முறையாக ஓட்டு போடுபவர்கள் இதை தெரிந்துக் கொண்டு செல்லுங்கள்

EPIC எண்ணை அந்த கட்டத்தில் பதிவு செய்த பின், மாநிலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் Search க்ளிக் செய்தால், உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், Search கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

மேலும் படிக்க - Tamil Nadu Lok sabha Election 2019 Polling Live: தமிழக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு லைவ் அப்டேட்ஸ்

தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை எஸ்.எம்.எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கு Election Commission's page பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்துச் சென்றால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிந்து கொள்ளும் முறை இருக்கும்.

Tamil Nadu Assembly By Election 2019 Polling Live: 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்… பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு

ஸோ, ஒரு 5 நிமிடம் ஒதுக்கி செக் செய்திட்டு ஊருக்கு கிளம்புங்க மக்கா!!

General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment