மமதாவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன்! திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்!

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடம்பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச் 25) கொல்கத்தா சென்ற கமல்ஹாசன் முதல்வர் மமதா பானர்ஜியைச் சந்தித்தார், சுமார் 1 மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.

மமதா பானர்ஜி பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது. அந்தமான் நிக்கோபர் தீவில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கிறது. கமல்ஹாசனின் கட்சி அங்கு எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கிறது என கூறியுள்ளார்.

மமதாவை சந்தித்த கமல்ஹாசன்

மமதாவை சந்தித்த கமல்ஹாசன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ’இன்றைய ஆலோசனை மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்தமான் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடம்பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவு மேலும் பலப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த பிஷ்னு படா ராய் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

×Close
×Close