Advertisment

மு.க.அழகிரி எனது அண்ணன்; எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன்: கனிமொழி Exclusive

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தூத்துக்குடி எம்.பி.யும் திமுகவின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

author-image
WebDesk
New Update
dmk mp kanimozhi, kanimozhi mp, kanimozhi interview, kanimozhi exclusive interview, திமுக, கனிமொழி, கனிமொழி நேர்காணல், எனது அண்ணன் முக அழகிரி, அதிமுக, திமுக, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், kanimozhi says MK Alagiri will always remain my brother, mk stalin, dmk, tamil nadu assembly election, aiadmk, dmk vs aiadmk

மனோஜ் சி ஜி

Advertisment

கேள்வி: தமிழகத்தில் இந்த தேர்தல் எப்படி உருவாகியிருக்கிறது?

இந்த தேர்தல் திமுகவுக்கும் திமுக கூட்டணிக்கும் சாதகமாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கிறது. நிச்சயமாக இது உறுதியான வெற்றி என்று நான் நினைக்கிறேன். நான் மாநிலம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்தேன். அவர்கள் தற்போதைய அரசின் மீது மிகவும் வருத்தமும் கோபமும் கொண்டுள்ளனர். அவர்கள் நிச்சயமாக மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் திமுக என்று மக்கள் நம்புகிறார்கள். பரவலாக பெரிய அளவில் வேலையின்மை நிலவுவதால் அவர்கள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மாநிலத்தில் எந்த முதலீடும் இல்லை. அடிப்படை உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் எதுவுமே செய்யப்படவில்லை. இந்த அரசாங்கம் யாருமே எதிர்த்து போராட முடியாத ஒரு அரசாங்கமாக மாறி வருகிறது. யாரும் கேள்வி கேட்க முடியாத மிகவும் சர்வாதிகாரமாக மாறிவருகிறது.



கேள்வி: இந்த தேர்தல் முடிவு தேசிய மற்றும் மாநில அரசியலுக்கு எதைக் குறிக்கும்?



இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை, அது சரியான பாதையில் திரும்புவதையும் வளர்ச்சியையும் குறிக்கும். தமிழகம் எப்போதும் முன்னணியில் உள்ளது. ஆனால், இன்று நாம் அனைத்து மனித வளர்ச்சி குறியீட்டிலும் சறுக்கி வருகிறோம். நாம் அதை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். தேசிய அரசியலைப் பொருத்தவரை, வேறுபட்ட கருத்துள்ள மாநிலங்களும் உள்ளன என்பதை இது காட்டும்.



கேள்வி: தமிழ்நாட்டில் ஒரு பெரிய போட்டியாளராகக்கூட இல்லாத, 20 இடங்களில் மட்டுமே போட்டியிடும் பாஜக மீது திமுக ஏன் அதிக கவனம் செலுத்துகிறது?



பாஜக ஒரு பெரிய போட்டி கட்சி அல்ல. ஆனால் தமிழகத்தில் பாஜகவால் நடத்துகிற பினாமி அரசாங்கம் உள்ளது. இது ஒரு அதிமுக அரசு, ஆனால் டெல்லியில் இருந்து இயக்கப்படுகின்றது. எனவே, அரசாங்கத்தின் உண்மையான உரிமையாளர்களைத் தாக்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த அரசாங்கம் டெல்லியில் இருந்து நடத்தப்படுகிறது.



கேள்வி: இந்த விஷயத்தை மாநில மக்கள் புரிந்துக்கொண்டு நம்புகிறார்களா?



நான் மக்கள் அதை புரிந்துகொண்டுள்ளார்கள் என்று நம்புகிறேன். ஏன் இந்த அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களை ஆதரித்தது, இப்போது, ​​தேர்தல்களுக்கு முன்னதாக, இந்த சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று ஏன் கூறுகிறார்கள்? கட்டுப்பாடுகளும் உத்தரவுகளும் அங்கிருந்து வருகிறது. அவர்கள் அதை இல்லை என்று சொல்ல முடியவில்லை. ஆனால், இன்று தேர்தல் காரணமாக்… இதைச் சொல்ல அவர்கள் வெளிப்படையாக அனுமதி வாங்கி வருகின்றனர்.

கேள்வி: ஒரு திமுக தலைவராக நீங்கள் அதிமுக-பாஜக உறவை எப்படி பார்க்கிறீர்கள்?

அவர்கள் (அதிமுக) நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் தலைவர் ஜெயலலிதா இருக்கும் வரை வேறு எவரும் கட்டுப்படுத்தி இயக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவருடன் எங்களுக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இங்கே வேறு யாரும் முடிவுகளை எடுக்கவில்லை. இப்போது, ​​அவர்களுடைய கட்சி முடிவுகள்கூட டெல்லியில் எடுக்கப்படுகின்றன. அவர்கள் கட்சி உடைந்துவிடும் என்று மிகவும் பயப்படுகிறார்கள் அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்பதால் இந்த அரசாங்கம் அவர்களின் தயவில் இருப்பதாக நான் நினைக்கிறேன்… மத்திய அரசாங்கம் இதை முன்னெடுத்துச் செல்லக்கூடும். இந்த அரசாங்கத்தில் கிட்டத்தட்ட அனைவரின் மீதும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. மேலும், இந்த அரசாங்கம் அவர்களுக்கு எதிராக செல்லக்கூடும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

கேள்வி: வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்று திமுகவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள். உங்களுடைய சகோதரர்கள் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியும் இருக்கிறார்கள். இப்போது இந்த தேர்தலில் உங்கள் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு நபராக உதயநிதி நுழைந்துள்ளதை நாங்கள் பார்க்கிறோம்.

இது எனக்கு புரியவில்லை. எல்லா கட்சியிலும் மகன்களும் மகள்களும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் எப்போதும் திமுகவை சுட்டிக்காட்டுகிறார்கள்? பாஜகவிலும் ஏராளமான மகன்களும் மகள்களும் அரசியலில் உள்ளனர். அதை யாரும் குறிப்பிடுவதில்லை. மாநில கட்சிகளும் வேறு சில கட்சிகளும் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவது ஏன்? அரசியல் களம் எல்லோருக்கும் திறந்திருக்கும். ஆம், உங்கள் குடும்பம் அரசியலில் இருந்தால் உங்களுக்கு எளிதாக தளம் கிடைக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் உண்மையை மறுக்கவில்லை. ஆனால், உங்களை தக்கவைத்துக்கொள்ள ஏற்றுக்கொள்ள நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அரசியலில் வந்து தோல்வியுற்ற மகன்களும் மகள்களும் நிறைய உள்ளனர். எனவே, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: அதிமுகவால் அடிக்கடி இந்த குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அரசியலில் ஜெயலலிதாவின் குடும்பத்தினர் ஒருவரும் இல்லை.

துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக நீங்கள் எப்படி கூறினாலும் அவருக்கு என்று ஒரு குடும்பம் இல்லை. இப்போது துணை முதல்வராக இருக்கின்ற ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் இன்று எம்.பி.யாக இருக்கிறார். அரசியலில் அவருக்கு நீண்ட வரலாறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதே கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

கேள்வி: திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது ஒழுங்கில் அதிக இடையூறு ஏற்படும் என்று மற்றொரு கருத்தும் உள்ளது.

எல்லா குற்றச்சாட்டுகளும் பொய்த்துப்போனபின், இது அதிமுகவின் கடைசி குற்றச்சாட்டு. கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக அரசாங்கம் செய்து வரும் அரசாங்கமே செய்துவரும் வன்முறை ரௌடிசம் அதைவிட அதிகமாக இருக்கலாம். எனது தொகுதியான தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாத்தான்குளத்தில் ஒரு தந்தையும் மகனும் போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்டனர். அவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்தனர் என்று முதல்வர் கூறினார். சென்னை - சேலம் நெடுஞ்சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் அனைவரும் தாக்கப்பட்டனர். சி.ஏ.ஏ-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு என்ன நடந்தது? இது அரசாங்கத்தால் நடத்தபட்ட வன்முறை. தங்களுக்கு எதிராக எழுதிய பத்திரிகையாளர்களுக்கு எதிராக பல அமைச்சர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது அரசாங்கமே இல்லை… இந்த அரசாங்கம் வெளிப்படையாக மிகவும் வன்முறையானது என்பதை நீங்கள் காணலாம்… இந்த அரசாங்கத்தால் கருத்துவேறுபாட்டின் குரலை பொறுத்துக்கொள்ள முடியாது… இது அவர்களின் கடைசி குற்றச்சாட்டு… திமுக அரசாங்கம் வரும்போது நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்… அமைதி, நல்லிணக்கம் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கு இருக்கும். இதைத் தாண்டி திமுக அரசாங்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்

இது ஒரு புனைவு. திமுக அரசாங்கத்தில் வன்முறை மற்றும் ரவுடிசம் இருந்தது என்று கூறி அவர்கள் இப்போது உருவாக்க முயற்சிக்கும் ஒரு கட்டுக்கதை.

கேள்வி: இந்தத் தேர்தலில் ஏராளமான போட்டியாளர்கள் உள்ளனர். கமல்ஹாசன், விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் டி.டி.வி தினகரன், பின்னர் நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் தோல்வியை உருவாக்கும் போட்டியாளர்களாக இருப்பார்களா, அரசாங்க எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பார்களா? அவர்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் அப்படி நினைக்கவில்லை. அவர்களில் சிலர் ஆளும் அதிமுகவுக்கு உதவ களத்தில் இருக்கலாம். என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள், அவர்கள் அதிமுக-பாஜக கூட்டணியால் நிதியுதவி செய்யப்படுகிறார்கள். ஆனால், அதற்கும் மேலாக, இந்தத் தேர்தல் திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையேயானது. இந்தத் தேர்தலில் வேறு எவரும் குறிப்பிடத்தக்க போட்டியாளர் என்று நான் நினைக்கவில்லை. என்னால் எதிர்காலத்தை கணிக்க முடியாது.

கேள்வி: மேற்கு வங்கத்தில் பாஜக ஒரு தீவிரமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அது அசாமில் ஆளும் கட்சியாக இருக்கிறது. அது இங்குள்ள ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கிறது. திமுக வெற்றி பெற்றால், அது பிரதமர் நரேந்திர மோடிக்கு என்ன செய்தியை அனுப்பும்?

நமக்கு சுய மரியாதை முக்கியம். நமக்கு சமூக நீதி முக்கியம். மாநிலத்தின் உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி எங்களுக்கு முக்கியம். யாராக இருந்தாலும், எந்த அரசாங்கம் மத்தியில் இருந்தாலும் … அவர்கள் அதைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும். திரு மோடி பேசுவது இதுதான், கூட்டுறவு கூட்டாட்சி, அது மிகவும் முக்கியமானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: உங்கள் சகோதரர் மு.க.அழகிரியின் மௌனம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் அவர் தனது ஆதரவு இல்லாமல் திரு ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று கூறினார். இது ஒரு குடும்ப பிரச்சினை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது ஒரு குடும்ப பிரச்சினை இல்லை. அவர் இப்போது திமுகவில் இல்லை. எனவே இதைப் பற்றி கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. அவர் அமைதியாக இருக்கிறார், அதைக் குறிப்பிடுவதில் என்ன இருக்கிறது? … அதைப் பற்றி பேசத் தேவையில்லை.

கேள்வி: நீங்கள் மதுரையில் இருந்தால், இன்னும் நீங்கள் போய் அவரைச் சந்திக்கிறீர்களா?

அவர் என்னை சந்திக்க தயாராக இருந்தால், நான் எப்போதும் அவரை சந்திப்பேன். அரசியல் வேறு. அவர் எப்போதும் என் அண்ணனாகவே இருப்பார்.

Dmk Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment