Advertisment

திமுக - காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வரும் வரை, எந்த விதமான வரவேற்பும் வழங்கப்படவில்லை. இது மிகவும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது

author-image
WebDesk
New Update
Signs of progress in seat-sharing negotiations between DMK, Congress

 Arun Janardhanan

Advertisment

Signs of progress in seat-sharing negotiations between DMK, Congress : திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறி முடிவுக்கு வர இருப்பது போன்ற நிலை உருவாகியுள்ளதாக வியாழக்கிழமை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்திக்கு இடையிலான டெலிஃபோன் உரையாடலுக்கு பிறகு இறுதி முடிவு எட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தங்களின் எதிர்பார்ப்பில் இருந்து இறங்கி வந்துள்ளனர். காங்கிரஸ் தரப்பு 34 இடங்களில் போட்டியிட இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் 18 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்புகள் இல்லை என்று திமுக கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி 30 இடங்கள் கேட்டதாகவும், திமுக 20 இடங்கள் மட்டுமே தர முன் வந்ததாகவும் கூறப்படுகிறது. முக்கியமான புள்ளியை கடந்து முன்னேறிவிட்டோம். 24 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் கூறினார்.

மேலும் படிக்க : சட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு!

மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நடத்திய காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சில உணர்ச்சிகரமான சம்பவங்களும் அரங்கேறியது. முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான தொகுதி பங்கீட்டு ஆலோசனை கூட்டத்தின் முதல் சுற்றில், காங்கிரஸ் கட்சியினர் சரியாக நடத்தப்படவில்லை என்ற புகாரை முன் வைத்தார்.

தொகுதி ஒதுக்கீடு கூட அவ்வளவு வருத்தம் தரவில்லை. ஆனால் அவர்கள் எங்களை நடத்திய விதம் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று அவர் கூறியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன. கட்சி உறுப்பினர்கள் என்ன முடிவு மேற்கொள்கின்றார்களோ அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று கே.எஸ். அழகிரி கூறியதாக கூறப்பட்டுள்ளது. அறிவாயலத்திற்கு தொகுதி பங்கீடு தொடர்பாக பேச செல்லும் போது எப்போதும் வரவேற்பு இருக்கும். ஆனால் இம்முறை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வரும் வரை, எந்த விதமான வரவேற்பும் வழங்கப்படவில்லை என்றும் இது மிகவும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் கூறினார்.

மேலும் படிக்க : விசிக, சிபிஐக்கு தலா 6 தொகுதிகள்: மார்க்சிஸ்ட் இன்று ஒப்பந்தம்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிகவிற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இடங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும், தற்போது நாட்டில் இருக்கும் நிலவரத்தை கருத்தில் கொண்டு, மதசார்பற்ற கூட்டணியை வலுப்படுத்த விசிக விரும்புகிறது என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment