Advertisment

தேர்தல் 2021: சிறு கட்சிகளுக்கு மரியாதை குறைந்து போனது ஏன்?

Tamilnadu Assembly Election 2021 : தேர்தல் தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், தேர்தல் பிரச்சாரங்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
தேர்தல் 2021: சிறு கட்சிகளுக்கு மரியாதை குறைந்து போனது ஏன்?

Tamilnadu Assembly Election 2021 : வருடப்பிறப்பு, பொங்கல் பண்டிகை என 2021-ம் ஆண்டு தொடக்கம் முதலே திருவிழாவாக காட்சியளித்து வரும் தமிழகம் அடுத்து தேர்தல் திருவிழாவுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் அதிமுக தலைமையிலான ஆட்சிகாலம் வரும் மே மாத இறுதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் கடைசி வாரம், அல்லது மே முதல் வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், தேர்தல் பிரச்சாரங்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.

Advertisment

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரிலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிநடைபோடும் தமிழகம் என்ற பெயரிலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை சீராமைப்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தமிழகத்தின் முன்னணி கட்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு சிறிய கட்சிகளுக்கு கிடைப்பதில்லை என்ற கருத்து பரவலாகி பேசப்பட்டு வருகிறது.

publive-image

தொடக்கத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த தமிழகத்தில் அதற்கு மாற்றுக்கட்சியாக உருவெடுத்த திராவிட முன்னேற்றகழகம் கடந்த 1969-  ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து திமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக பிரிந்து சென்ற எம்ஜிஆர் திமுகவுக்கு மாற்று கட்சியாக அதிமுகவை தொடங்கி 1980-ம் ஆண்டு ஆட்சியையும் கைப்பற்றினார். அதன்பிறகு தமிழகத்தில் பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட பல கட்சிகள் தொடங்கினாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே முதன்மை கட்சிகளாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும், தேசிய கட்சிகள் முதல் மற்ற சிறு கட்சிகள் வரை அனைவரும் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே தேர்தலை சந்தித்துள்ளனர்.  இனால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் தேசிய கட்சிகளின்ஆட்சி நடைபெற்று வந்தாலும், தமிழகத்தில், 1969- முதல் திமுக, அதிமுக கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனா.  ஆனால் சிறு கட்சிகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும், தேர்தல் என்று வரும்போது குறிப்பிட்ட தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு வாக்கு வங்கிகள் உள்ளது. இதனால் தேர்தல் என்று வரும்போது பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுக்கு ஆதராவாகவே செயல்பட்டு வந்தன.

publive-image

ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் சிறு கட்சிகளின் மரியாதை குறைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கடந்த  2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற அதிமுக 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதற்கு முன்பு 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளில் 150 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக, 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 15 தொகுதிகள் குறைந்து 135 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும் ஆட்சியை கைப்பற்றிது. இதில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் வெற்றி விகிதம் 1% சதவீதம் மட்டுமே.  இந்த வெற்றிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வியூகமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

2011 தேர்தலில் நடைபெற்ற தேர்தலில் 165 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  ஆனால் 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிரடி முடிவெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்தாலும், அக்கட்சியில் வேட்பாளர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்திய தேர்தல் வரலாற்றில், கூட்டணி கட்சிகள் தலைமை கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது இதுவே முதல்முறை.

publive-image

ஜெயலலிதாவின் இந்த தேர்தல் வியூகம் அவர் 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பெரிதும் உதவியாக இருந்தது.  அதிமுகவிற்கு இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தாலும் சிறு கட்சிகளுக்கு இந்த தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், அதுவரை கூட்டணியில் இருந்தாலும், தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வந்த சிறு கட்சிகள், ஜெயலலிதாவின், முடிவுக்கு கட்டுப்பட்டு 2016- சட்டசபை தேர்தலில் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டதால், சிறுகட்சிகள் மீது பெரிய கட்சிகள் வைத்திருந்த மரியாதை பறிபோனது.

தற்போது 2021-சட்டசபை தேர்தல் நெருங்கிட்ட நிலையில், பெரிய கட்சிகளான அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும், கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் பாணியையே கடைபிடித்து வருகின்றனர். இதனால் வரும் தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளும், அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இந்த முடிவு சிறு கட்சிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுடன தற்போதுவரை அதிமுக கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டணி குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பகிரங்கமாக தெரிவித்தும் கூட அதிமுக தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

publive-image

இதே கூட்டணியில் உள்ள பாமகவில் கூட்டணி தொடர்பாக அதிமுக பேச்சுவார்த்தை நடத்தினாலும், அவர்கள் கோரிக்கையான வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனாலும் பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது.  இதற்கு முக்கிய காரணம், பாமக, தேமுதிக, இரு கட்சிகளும் இனிமேல் வேறு கூட்டணிக்கு செல்வது சாத்தியமில்லாத ஒன்று. திமுக கூட்டணியில் சேர்ந்தாலும், அங்கு ஏற்கனவே கூட்டணி கட்சிகள் நிரம்பி வழிவதால், போட்டியிட தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகமே. தேமுதிகவுக்கும் இதேநிலைதான். இதில் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தாலும், அது 3-வது அணியை உருவாக்கும் அளவிற்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான். இதனால் தேமுதிக, பாமக இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா கடைபிடித்த அதே பாணியை கடைபிடித்து வரும் திமுக வரும் தேர்தலில் 180 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தேர்தல்ஆலோசகரான பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி தேர்தல் வியூகங்களை வகுத்துவரும் திமுக வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் என்று நம்பிக்கையில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

publive-image

மேலும் தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஒற்றை இலக்க தொகுதிகளே கிடைக்கும் என்று தகவல் வெளியாகியள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளே கிடைக்கும் என்று வெளிப்படையாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.  இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட்டணி தொடர்பாக எந்த கருத்தும் இதுவரை வெளியிடவில்லை.

தற்போது திமுக கூட்டணியில், வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப வரவேற்க்கப்படும் நிலையில், கூட்டணி கட்சிகள் இது தொடர்பாக என்ன முடிவெடுப்பது என்பது குறித்து செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். ஆனால் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக தரப்பில் எந்த நிர்பந்தமும் வைக்கவில்லை. ஆனாலும் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளின்நிலை கவலைக்கிடமாக உள்ளது.  தொடக்கத்தில் சிறு கட்சிகளுக்கு கூட்டணியில் நல்ல மரியாதை இருந்து வந்த நிலையில், 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வியூகம் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதே மறுக்கமுடியாத உண்மை

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamilnadu Assembly Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment