Advertisment

சில நூறு வாக்குகளில் இழுபறி: விஐபி-க்களை அல்லாட வைத்த வாக்கு எண்ணிக்கை

Tamilnadu Election : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடும் இழுபறி நீடித்தது.

author-image
WebDesk
New Update
சில நூறு வாக்குகளில் இழுபறி: விஐபி-க்களை அல்லாட வைத்த வாக்கு எண்ணிக்கை

தமிழக சட்டசபைதேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னணி தலைவர்கள் சிலர் போட்டியிட்ட தொகுதிகளில் சொற்ப எண்ணிக்கைகளில் இழுப்பறி நீடித்து வருகிறது.

Advertisment

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொடர்ந்து இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர். தற்போதுவரை அது நிலை தொடர்ந்து வரும் நிலையில், பல தொகுதிகளில் அதிமுக திமுக இடையே கடுமையான போட்டியும் இழுப்பறியும் நீடித்து வருகிறது.

துரைமுருகன் திமுக – காட்பாடி

தொடர்ந்து 13-வது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கட்டாயம் வெற்றி பெறுவார் என்று திமுக தரப்பில் பலமான நம்பிகை வைத்திருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே துரைமுருகன் பின்னடைவை சந்தித்தார். அந்த தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இடையில் துரைமுருகன் முன்னிலை அவ்வப்போது முன்னிலை பெற்றாலும் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. தற்போது அந்த தொகுதியில், 22 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், 73981 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராமு 70990 வாக்குகள் பெற்று பின்தொடர்ந்து வந்த நிலையில், இறுதியாக 745 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றுள்ளார்.

ஓ.பி.எஸ் – தங்க தமிழ்செல்வன் – போடிநாயக்கனூர்

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான தங்க தமிழ்செல்வன் தற்போது திமுகவில் இணைந்து போடி நாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். இதில் வாக்கு எண்ணிக்கையில் தொடக்க்த்தில் முன்னிலையில் இருந்த ஒ.பன்னீர்செல்வம் அதன்பிறகு பிறகு பின்தங்கினார். ஆனாலும் வாக்கு எண்ணிக்கையில் சுற்றுகள் அதிகரிக்க அதிகரிக்க இருவருக்குள்ளும் முன்னிலை பெறுவது யார் என்பது குறித்து கடும் போட்டியில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர். இதனால் இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த தொகுதியில், தற்போது 10 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பன்னீர் செல்வம், 34209 வாக்குகளும், தங்க தமிழ்ச்செல்வன் 29981 வாக்குகளும் பெற்றுள்ள்னர்.

டிடிவி தினகரன் – கடம்பூர் ராஜூ – கோவில்பட்டி தொகுதி

2-வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக கட்சி பொதுக்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தோகுதியில் களமிறங்கினார். இவரை எதிர்த்து அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இந்த தொகுதியில் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்து வந்தார். ஆனாலும் சில நிமிடங்கள் டிடிவி தினகன் முக்கிலை பெற்றார். தற்போது 14-வது கட்ட வாங்கு எண்ணிக்கை முடிவில் இந்த தொகுதியில், 39154 வாக்குகள் பெற்று கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ள நிலையில், டிடிவி தினகரன், 33127 வாக்குகள் பெற்று பின்தங்கிய நிலையில், இறுதியாக 12403 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் தோல்வியை சந்தித்தார். இந்த தொகுதியில் கடம்பூர் ராஜூ 68556 வாக்குகளும், டிடிவி தினகரன் 56153 வாக்குகளும் பெற்றுள்னர்.

எல்.முருகன் – கயல்விழி செல்வராஜ் – தாராபுரம்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்டார். தொடக்கத்தில் முன்னிலை பெற்ற கயல்விழி, அதற்கடுத்து சில சுற்றுகளில் பின்னடைவை சந்தித்தார். ஆனாலும், அடுத்த சில சுற்றுகளில் முன்னிலை பெற்றதால் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் பலத்த இழுபறி நீடித்து வருகிறது. இதில் தற்போது கயல்விழி 63434 வாக்குகளும், எல்.முருகன் 61697 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில், கயல்விழி முன்னிலை வகித்து வந்த நிலையில் சற்று முன்வரை கயல்விழி 85513 வாக்குகளும், எல்.முருகன் 84905 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில், இருவருக்கும் இடையே 608 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. தற்போது வாக்கு எந்திரம் பழுது காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் – மயூரா ஜெயக்குமார் – கோவை தெற்கு

கோவை தெற்கு தொகுதியில், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கரஸ் தரப்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கு போட்டியாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் களத்தில் இறங்கினார். தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இருமுனைப்போட்டி நடைபெற்ற நிலையில், கோவை தெற்கு தொகுதியில், மும்முனைபோட்டி நடைபெற்று வருகிறது. இதில் மூன்று வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்து வரும் நிலையில், எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் என்று கணிக்க முடியாத இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் எழுச்சி பெற்ற வானதி சீனிவாசன் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment