Advertisment

News Highlights : திருவாரூரில் ஸ்டாலின் பிரச்சாரம் இன்று தொடக்கம்

Tamil nadu assembly election updates மக்கள் நீதி மய்யம் விருப்பமனு விண்ணப்பத்தில் சாதி என்ற பிரிவை நீக்கிவிட்டதாக கமல்ஹாசன் கூறினார்.

author-image
WebDesk
New Update
News Highlights : திருவாரூரில் ஸ்டாலின் பிரச்சாரம் இன்று தொடக்கம்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அவர்களில் யாரையும் தாம் ஆதரிக்கப் போவதில்லை என்றும் மூன்றாவது அணி தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும்,தங்களை பாஜகவின் B டீம் என விமர்சிக்கும் திறமை படைத்த திரைக்கதை ஆசிரியர்கள் திமுக-வில் இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சாதி பார்த்து வாக்களிப்பது குறைந்து வருகிறது என்றும் மக்கள் நீதி மய்யம், விருப்பமனு விண்ணப்பத்தில் சாதி என்ற பிரிவை நீக்கிவிட்டதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

Advertisment

21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. துரை சந்திரசேகர் பொன்னேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

publive-image

Tamil nadu assembly election live updates

தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சி, வேட்பாளர்களை இன்னும் முடிவு செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் தேர்தல் பணிக்குழு நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையிலான இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ. 86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"



  • 23:38 (IST) 14 Mar 2021
    குறிஞ்சிபாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்

    அதிமுக சார்பில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமி மாற்றப்பட்டதாக அதிமுக தலைமை அற்வித்துள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.



  • 23:11 (IST) 14 Mar 2021
    2வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கேப்டன் கோலி அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார்.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது அடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



  • 21:13 (IST) 14 Mar 2021
    தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டி

    அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:49 (IST) 14 Mar 2021
    காட்டுமன்னார்கோவிலில் சிந்தனைச் செல்வன் போட்டி; விசிக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

    விசிக வேட்பாளர்கள் பட்டியல்:

    காட்டுமன்னார்கோவில் (தனி) - சிந்தனைச் செல்வன்

    வானூர் (தனி) - சிந்தனைச் செல்வன்

    அரக்கோணம் (தனி) - கௌதம சன்னா

    செய்யூர் (தனி) - பனையூர் பாபு

    திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி

    நாகை - ஆளூர் ஷா நவாஸ்



  • 18:54 (IST) 14 Mar 2021
    வீடுகளுக்கு வாஷிங்மெஷின் வழங்கப்படும் - அதிமுக தேர்தல் அறிக்கை

    *பெண்களுக்கு பேருது பயண சலுகை வழங்கப்படும்

    *ஓய்வூதிய உதவித் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்

    *அரசு கேபிள் இணைப்பு விலையில்லாமல் வழங்கப்படும்

    *ஆண்டு முழுவதும் 2ஜி டேட்டா இலவசம்

    *உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும்

    *பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்

    *ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்

    *வீடுகளுக்கு இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும்

    *மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்

    *வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்

    *பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்



  • 18:37 (IST) 14 Mar 2021
    ‘அனைவருக்கும் வீடு... அம்மா இல்லம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்’ - அதிமுக தேர்தல் அறிக்கை

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்டனர்.

    அதிமுக தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா இல்லம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.



  • 18:23 (IST) 14 Mar 2021
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் அணையில், குளித்த பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நடந்துள்ளது.



  • 16:39 (IST) 14 Mar 2021
    அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

    வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் சற்றுமுன் கையெழுத்தானது. இன்று, மாலை இதுகுறித்து தேமுதிக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வ வெளியாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது



  • 16:30 (IST) 14 Mar 2021
    பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிடப்பட்டது.

    முதல்பட்டியல் விவரம்:

    ஆயிரம் விளக்கு- குஷ்பு

    கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

    நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

    தாராபுரம் ( தனி தொகுதி)- எல்.முருகன்

    அரவக்குறிச்சி- அண்ணாமலை

    காரைக்குடி - எச்.ராஜா



  • 15:25 (IST) 14 Mar 2021
    பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    முதல்பட்டியல் விவரம்:

    ஆயிரம் விளக்கு- குஷ்பு

    கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

    நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

    தாராபுரம் ( தனி தொகுதி)- எல்.முருகன்

    அரவக்குறிச்சி- அண்ணாமலை

    காரைக்குடி - எச்.ராஜா



  • 15:09 (IST) 14 Mar 2021
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு :

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு :

    1. திருத்துறைபூண்டி - மாரிமுத்து

    2. தளி - ராமச்சந்திரன்

    3. திருப்பூர் வடக்கு - ரவி (எ) சுப்பிரமணியன்

    4. பவானிசாகர் - சுந்தரம்

    5. வால்பாறை - ஆறுமுகம்

    6. சிவகங்கை - குணசேகரன்



  • 14:50 (IST) 14 Mar 2021
    மு. க ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் சுற்றுப்பயணம் துவங்குகிறார்.

    மு. க ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் சுற்றுப்பயணம் துவங்குகிறார். நாளை திருவாரூர் தெற்கு வீதியில், திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.



  • 14:25 (IST) 14 Mar 2021
    திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்.

    திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சரவணன் அக்கட்சியிலிருந்து விலகி இன்று பிஜேபியில் இணைந்தார்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 14:22 (IST) 14 Mar 2021
    ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

    ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19க்கான தடுப்பு மருந்தை அனைத்து நாடுகளும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

    ஒரு தவணை தடுப்பு மருந்தான இதனை பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.



  • 14:12 (IST) 14 Mar 2021
    அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப் பதிவு

    கோவில்பட்டியில் பறக்கும்படை தலைமை அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



  • 14:08 (IST) 14 Mar 2021
    செலுலாய்டு புத்தகத்தின் ஓர் இலக்கியப் பக்கம் கிழிந்துவிட்டது என்பேனா? - வைரமுத்து

    இயக்குநர் ஜனநாதன் இறப்பு

    ஒரு கெட்டியான துக்கம்.

    அவருக்கு நானெழுதிய

    ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’

    மறக்கவியலாது.

    செலுலாய்டு புத்தகத்தின்

    ஓர் இலக்கியப் பக்கம்

    கிழிந்துவிட்டது என்பேனா?

    வானவில்லில் முற்போக்குச் சிவப்பு

    அழிந்துபட்டது என்பேனா?

    வருந்துகிறேன்;இரங்குகிறேன்.

    என கவிஞர் வைரமுத்து மறைந்த இயக்குநர் ஜனநாதனுக்கு இரங்கல் வாழ்த்து தெரிவித்தார்.



  • 14:06 (IST) 14 Mar 2021
    அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகி உள்ளதாக தகவல்

    வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு, இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • 13:42 (IST) 14 Mar 2021
    சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை நிராகரிக்கப்படும் - மு. க ஸ்டாலின்

    2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.கழகத்தின் அறிக்கையில் சில திருத்தங்களை அக்கட்சி அறிவித்தது.



  • 13:39 (IST) 14 Mar 2021
    அகில இந்திய உரிமம் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

    சுற்றுலா வாகன உரிமையாளர்கள் அகில இந்திய உரிமம் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.



  • 13:38 (IST) 14 Mar 2021
    மூன்றாவது கட்ட பிரச்சாரம் இன்று முதல் துவங்குகிறது - கமல்ஹாசன்

    உயிரே உறவே தமிழே, வணக்கம். எனது மூன்றாவது கட்ட பிரச்சாரம் இன்று (14-03-2021) முதல் துவங்குகிறது. இன்று மாலை 6:15 மணிக்கு காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகே மண், மொழி, மக்கள் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். வருக என கமல்ஹாசன் பதிவிட்டார்.



  • 13:18 (IST) 14 Mar 2021
    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு

    இன்று மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்நிகழ்வில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், திமுக 13 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் களமிறங்க ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.



  • 12:16 (IST) 14 Mar 2021
    தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள் உள்ளன - ஸ்டாலின்

    சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது என வாக்குறுதி 43-ல் சேர்க்கப்பட்டிருக்கிறது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை நிராகரிக்கப்படும் என்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்படாது என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் இந்த 3 வாக்குறுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



  • 12:16 (IST) 14 Mar 2021
    முதலமைச்சர் பழனிசாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்

    எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் நாளை மதியம் 1 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.



  • 11:34 (IST) 14 Mar 2021
    ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராக உள்ளனர்

    திமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.



  • 11:11 (IST) 14 Mar 2021
    திரைப்பட இயக்குநர் ஜனநாதன் மரணம்

    மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்தார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பூலோகம்' திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 10:55 (IST) 14 Mar 2021
    அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியாகிறது!

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து இந்து மாலை வெளியிட உள்ளனர்.



  • 10:50 (IST) 14 Mar 2021
    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது

    அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட போட்டியின் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலைமுன்னிலையில் உள்ளது.



  • 10:25 (IST) 14 Mar 2021
    மதிமுக தேர்தல் அறிக்கை வரும் 17-ம் தேதி வெளியீடு

    சட்டப்பேரவை தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை வரும் 17-ம் தேதி வெளியிடப்படுகிறது. சென்னை தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.



Tamil Nadu Politics Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment