Advertisment

News Highlights: திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளர்களாக கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி நியமனம்

Tamil Nadu assembly election live updates மநீம தொண்டர்களும் பொதுமக்களும் சேர்ந்து தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

author-image
WebDesk
New Update
News Highlights: திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளர்களாக கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி நியமனம்

ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர். தேர்தல் பரப்புரை பயணத்தையும் ஒரேநாளில் தொடங்குகின்றனர்.

Advertisment

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். காந்திரோடு பகுதியில் பரப்புரையை முடித்துவிட்டு கமல்ஹாசன் கிளம்பும்போது வாலிபர் ஒருவர் அவருடைய காரை வழிமறித்து, கார் மீது ஏறி, காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார். கமல் ஹாசனின் பவுன்சர்கள் அந்த நபரைக் கீழே இறக்கிவிட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தைவிட்டு ஹோட்டலுக்குச் சென்றார் கமல்ஹாசன். இதைப்பார்த்த மநீம தொண்டர்களும் பொதுமக்களும் சேர்ந்து தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு வாள் சண்டை பிரிவில் முதல் இந்தியராக வீராங்கனை பவானி தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை வசமாக்கியுள்ளது. 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"



  • 21:57 (IST) 15 Mar 2021
    முன்னாள் எம்எல்ஏக்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை -ஹரி நாடார்

    ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஹரி நாடார் முன்னாள் எம்எல்ஏக்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.



  • 20:28 (IST) 15 Mar 2021
    ஜெயலலிதா மரணம் தொடர்கபாக நீதி விசாரணை - ஸ்டாலின்

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்கபாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 18:42 (IST) 15 Mar 2021
    முதல்வரின் சொத்து மதிப்பு ஒரு கோடி குறைந்தது

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிச்சாமி, சொத்து மதிப்பு ஒரு கோடி குறைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில், 3.14 கோடியாக இருந்த அவரது அசையும் சொத்து தற்போது 2021-ல் 2.01 கோடியாக குறைந்துள்ளது. மேலும் 2016-ல் 3.66 கோடியாக இருந்த அசையா சொத்து 4.68 கோடியாக உயர்ந்துள்ளது.



  • 18:10 (IST) 15 Mar 2021
    சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை - தொழிலாளர் நலத்துறை உத்தரவு

    சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐ.டி. உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • 17:27 (IST) 15 Mar 2021
    2 ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை - மத்திய அரசு தகவல்

    கடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 17:14 (IST) 15 Mar 2021
    அதிமுக தேர்தல் அறிக்கை எடுபடுமா என்பது தேர்தலுக்கு பின் தெரிய வரும் - முதல்வர் பழனிசாமி

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தேர்தல் அறிக்கை எடுபடுமா என்பது தேர்தலுக்கு பின் தெரிய வரும். அடித்தட்டு மக்கள் அதிமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறார்கள். 6 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு இருந்தாலும், வளர்ச்சி பணிகள் தொடர்கிறது. எடப்பாடி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும்.” என்று கூறினார்.



  • 17:11 (IST) 15 Mar 2021
    சட்டமன்ற தேர்தல் பணிக்காக திமுக மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்

    சட்டமன்ற தேர்தல் பணிக்காக திமுக மண்டல மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்; வடக்கு மண்டலம் -ஜெகத்ரட்சகன் எம்.பி, மத்திய மண்டலம் -மு.சண்முகம் எம்.பி, தெற்கு மண்டலம் -கனிமொழி எம்.பி, மேற்கு மண்டலம் -தயாநிதிமாறன், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு -ஆ.ராசா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



  • 17:02 (IST) 15 Mar 2021
    இந்தியாவிற்கே முன்மாதிரியாக கோவை தொகுதியை மாற்றுவேன் - கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்

    சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதல்முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தியாவிற்கே முன்மாதிரியாக கோவை தொகுதியை மாற்றுவேன். கோவையில் மத நல்லிணக்கத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகள் நடக்கிறது; அதற்கு எதிராகவே இங்கே போட்டியிடுகிறேன் என்று கூறினார்.



  • 16:59 (IST) 15 Mar 2021
    இந்தியாவிற்கே முன்மாதிரியாக கோவை தொகுதியை மாற்றுவேன் - கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்

    சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதல்முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தியாவிற்கே முன்மாதிரியாக கோவை தொகுதியை மாற்றுவேன். கோவையில் மத நல்லிணக்கத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகள் நடக்கிறது; அதற்கு எதிராகவே இங்கே போட்டியிடுகிறேன் என்று கூறினார்.



  • 16:54 (IST) 15 Mar 2021
    நடிகர் அஜித்தின் 50வது பிறந்த நாளான மே 1-ம் தேதி 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    நடிகர் அஜித்குமாரின் 50வது பிறந்த நாளான மே 1-ம் தேதி 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.



  • 15:53 (IST) 15 Mar 2021
    இந்திய கிரிக்கெட் அணி வீரர் பும்ரா திருமணம்

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா, நடிகை சஞ்சனாவை மணந்தார். இன்று நடைபெற்ற திருமண நிகழ்வு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

    “Love, if it finds you worthy, directs your course.”



    Steered by love, we have begun a new journey together. Today is one of the happiest days of our lives and we feel blessed to be able to share the news of our wedding and our joy with you.



    Jasprit & Sanjana pic.twitter.com/EQuRUNa0Xc

    — Jasprit Bumrah (@Jaspritbumrah93) March 15, 2021


  • 15:49 (IST) 15 Mar 2021
    1 முதல் 9 வரை - ஆல் பாஸ்

    புதுவையில் 1 முதல் 9 வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பள்ளி செல்லும் அவர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து கோடை கால விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:31 (IST) 15 Mar 2021
    எடப்பாடி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும்

    எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடி தொகுதியின் மேம்பாட்டிற்காக கடுமையாக உழைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். சாலை, குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. விரைவில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.



  • 14:29 (IST) 15 Mar 2021
    வேட்புமனு தாக்கல் செய்தார் உதயநிதி

    சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உள்ள அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி தற்போது வேட்புமனு தாக்கல் செய்தார்.



  • 14:29 (IST) 15 Mar 2021
    வேட்புமனு தாக்கல் செய்தார் அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் தினகாரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.



  • 14:12 (IST) 15 Mar 2021
    விரும்பும் முடிவை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் எடப்பாடி - பிரேமலதா

    தேமுதிகவிற்கு 13 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று அதிமுக கூறியது. 18 இடங்களும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டோம். ஆனால் விரும்பிய முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று முதல்வர் கூறியதால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார் பிரேமலதா.



  • 13:50 (IST) 15 Mar 2021
    பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் வேட்புமனு தாக்கல்

    பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.



  • 13:35 (IST) 15 Mar 2021
    வேட்புமனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன்

    அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாஜக தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளனர். கோவை தெற்கில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் வானதி.



  • 13:28 (IST) 15 Mar 2021
    எடப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர்

    7வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 1989ம் ஆண்டு சேவல் சின்னத்திலும் 1991ம் ஆண்டு ஒருங்கிணைந்த அதிமுக சார்பிலும் அவர் போட்டியிட்டார்.



  • 13:05 (IST) 15 Mar 2021
    திமுக தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்

    கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின், அயனாவரம் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.



  • 13:03 (IST) 15 Mar 2021
    16 லட்சம் வாக்காளர் அட்டை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது

    12-ம் தேதி முதல் இதுவரை 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் அவர்களில் ஆண்கள்-58 பேர், ஒரு பெண் என்றும் சத்ய பிரதா சாகு குறிப்பிட்டுள்ளார். முதல் முறை வாக்காளர்களுக்கு இதுவரை 16 லட்சம் வாக்காளர் அட்டை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.



  • 12:25 (IST) 15 Mar 2021
    10 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சகாயம்

    ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை தேர்தலில் போட்டி போடவுள்ளது. 20 தொகுதிகளில் போட்டியிடப்படும் என்று சகாயம் அறிவித்திருக்கிறார். மேலும், 10 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டார். 15 தொகுதிகளில் போட்டியிடும் தமிழ்நாடு இளைஞர் கட்சியுடன் சகாயம் அரசியல் பேரவை கூட்டணி வைத்துள்ளார்.



  • 12:04 (IST) 15 Mar 2021
    கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

    இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.



  • 10:55 (IST) 15 Mar 2021
    வங்கிகள் தனியார்மயமாவதற்கு எதிர்ப்பு!

    கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் எதிர்த்து, இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • 10:47 (IST) 15 Mar 2021
    4-ம் கட்ட அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    4-ம் கட்ட அமமுக வேட்பாளர்கள் வேட்பாளர்கள் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டார். தினகரன் எம்எல்ஏவாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் டாக்டர்.காளிதாஸ் போட்டியிடுகிறார்.



  • 09:53 (IST) 15 Mar 2021
    மம்தா பானர்ஜி மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார்

    நந்திகிராமில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்ற மம்தா பானர்ஜி, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மீண்டும் தொடங்கினார். மம்தா பானர்ஜி பேசுவதற்கு வசதியாக சாய்வு தளத்துடன் கூடிய சிறப்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது.



Kamal Haasan Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment