Advertisment

“கொங்கின் சங்க நாதம் கோட்டையில் முழங்கட்டும்” - நட்சத்திர தொகுதியாக மாறிய கோவை தெற்கு

2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, கோயம்புத்தூர் மேற்கு என அழைக்கப்பட்டு வந்த சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் தெற்கு என்று மாற்றப்பட்டது

author-image
WebDesk
New Update
“கொங்கின் சங்க நாதம் கோட்டையில் முழங்கட்டும்”  - நட்சத்திர தொகுதியாக மாறிய கோவை தெற்கு

Tamil Nadu assembly elections 2021 Coimbatore South candidates : அதிமுகவுக்கும் பாஜகவிற்கும் மனக்கசப்பை உருவாக்கிய தொகுதி பங்கீடு என்றால் அது நிச்சயமாக கோவை தெற்கு தொகுதி தான். கோவையில் பாஜகவிற்கு கொஞ்சம் வரவேற்பு இருந்தாலும் கூட அங்கிருக்கும் 10 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதி மட்டும் தான் பாஜகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் தற்போது எம்.எல்.ஏவாக செயல்பட்டு வரும் அம்மன். கே. அர்ஜூனனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவருடைய ஆதரவாளார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத நிலையில் வார்டு அளவில் சென்று அவர் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

கோவை தெற்கு தொகுதி

2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, கோயம்புத்தூர் மேற்கு என அழைக்கப்பட்டு வந்த சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் தெற்கு என்று மாற்றப்பட்டது. கோவை மாநகராட்சி வார்டு எண் 21 முதல் 47 வரை உள்ள பகுதிகளை கோவை தெற்கு என்று கூறுகின்றோம்.

2011ம் ஆண்டு முதலே அதிமுகவின் கோட்டையாக அமைந்திருக்கிறது கோவை தெற்கு. 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் வேலுச்சாமி போட்டியிட்டார். 80637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அந்த தேர்தலில் போட்டியிட்டவர் திமுக வேட்பாளார் கந்தசாமி. அவருக்கு 52841 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

2016ம் ஆண்டு அம்மன் கே அர்ஜூனன் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மயூரா எஸ். ஜெயக்குமார் களம் இறக்கப்பட்டார். அதிமுக வேட்பாளர் 59,788 வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூரா எஸ் ஜெயக்குமார் 42369 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் நிச்சயமாக மும்முனை தேர்தலாகவே அமையும். திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் மீண்டும் மயூரா எஸ் ஜெயக்குமாரை களம் இறக்குகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் களம் காண்கிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் களம் காண்கிறார். மேலும் அமமுக கட்சியின் சார்பில் சேலஞ்சர் துரையும் நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாபும் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க : அம்மாவின் விருப்ப தொகுதி; களத்தில் நிற்கும் மூன்று முன்னாள் அதிமுக உறுப்பினர்கள்

நட்சத்திர தொகுதியாக மாறிய கோவை தெற்கு தொகுதி

publive-image

கோவை தெற்கில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த கமல் ஹாசன்

2019ம் ஆண்டு தேர்தலில் 40 இடங்களில் களம் இறங்கியது. ஆனால் பெரம்பலூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பல்வேறு தொகுதிகளில் கணிசமான வாக்குகளை மநீம பெற்றிருந்தாலும் கூட, கவனத்தை ஈர்க்க வைத்தது கோவை நகர்புற மக்களின் வாக்குகள். கோவை தொகுதியில் அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் போட்டியிட்டார். 1,44,829 வாக்குகளை அவர் பெற்றார். அந்த வாக்கு வங்கியை அப்படியே நிலை நிறுத்திக் கொள்ள மநீம முயன்று வருகிறது. அதனால் தான் அக்கட்சி தலைவர் கோவை தெற்கிலும், துணைத்தலைவர் ஆர். மகேந்திரன் சிங்காநல்லூரிலும் போட்டியிடுகின்றனர்.

பாஜகவிற்கு வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது?

publive-image

கோவை தெற்கில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த வானதி சீனிவாசன்

தொழில்நகரமான கோவை பாஜகவின் பல்வேறு கொள்கைகளால் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற நடைமுறைகளால் பல்வேறு குறுந்தொழில்கள் முற்றிலுமாக முடங்கியது. நடைபட்டறைகள், கிரைண்டர் கம்பெனிகள், மோட்டார் கம்பெனிகள் என அனைத்து தொழில்களும் சற்றும் மந்த நிலையிலேயே உள்ளது. அதனால் அதிமுகவின் கூட்டணி கட்சிக்கு வாக்குகள் செல்வது சற்று சந்தேகமாகவே உள்ளது. அதே போன்று அம்மன் அர்ஜூனனின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதும் பல்வேறு சிக்கல்களை பாஜக தரப்பிற்கு ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா கொள்கைகளோடு பாஜக களம் காணும் இதே தொகுதியில் சிறுபான்மையினர் அதிகம் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் நபர்கள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வேண்டும் - மயூரா ஜெயக்குமார்

publive-image

சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்ற மயூரா எஸ். ஜெயக்குமார்

கோவை தெற்கில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், தேர்தல் முடியவும் டெல்லிக்கு கிளம்பிவிடுவார். கமல் ஹாசனுக்கு இந்த தொகுதி பற்றி என்ன தெரியும்? இந்த தொகுதியில் பிறந்து வளர்ந்த ஒருவர் தான் வெற்றி பெற வேண்டும். என்னுடைய எண் இந்த தொகுதியில் இருக்கும் அனைத்து நபர்களிடமும் இருக்கிறது. ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே என்னிடம் புகார் அளிக்க முடியும். கமல் ஹாசனுக்கு தெரிவிப்பது சாத்தியமாகுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Bjp Makkal Needhi Maiam Tamil Nadu Assembly Elections 2021 Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment