Advertisment

Tamil Nadu Lok Sabha Constituencies List: தமிழக மக்களவை தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு? ஓர் அலசல்

Full List of Tamil Nadu Lok Sabha Constituencies: தமிழக மக்களவை தொகுதிகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha Election 2019 Result Social Reactions, Lok Sabha Election 2019 Result

Tamilnadu Lok Sabha Constituencies

Tamil Nadu Parliamentary Constituencies List: தமிழக மக்களவை தொகுதிகளில் கட்சிகளின் நிலைமை குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் சிறிய அலசல்,

Advertisment

தஞ்சாவூர் (Thanjavur Constituency)

திமுக - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

தமிழ் மாநில காங்கிரஸ்(அதிமுக கூட்டணி) - என்.ஆர்.நடராஜன்

அமமுக - பி.முருகேசன்

மக்கள் நீதி மய்யம் - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ்

தஞ்சை தொகுதியைப் பொறுத்தவரை, திமுக -அதிமுக முதன்மைப் போட்டியாளர்களாக உள்ளனர். திமுக,  தமாகா, அமமுக வென்று மூன்று கட்சி வேட்பாளர்களும் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் திமுக சார்பில் தொடர்ந்து 9வது முறையாக களம் காண்கிறார். தஞ்சையில் மொத்தம் 72.46 சதவிகித வாக்குகள் பதிவானது.

தஞ்சை தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

திருவள்ளூர் (Tiruvallur Constituency)

அதிமுக - பி.வேணுகோபால்

காங்கிரஸ் (திமுக கூட்டணி) - டாக்டர்.ஜெயக்குமார்

அமமுக - பொன்.ராஜா

மக்கள் நீதி மய்யம் - எம்.லோகரங்கன்

திருவள்ளூர் மக்களவை தொகுதியில் சிட்டிங் எம்.பி.அதிமுகவைச் சேர்ந்த பி.வேணுகோபால். கடந்த 2014 தேர்தலில், 628499 வாக்குகளுடன் வெற்றிப் பெற்றார். விசிகவின் டி.ரவிகுமார் 305069 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இம்முறை விசிக, திமுக கூட்டணியில் இருப்பதால், மற்றொரு திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு திருவள்ளூரில் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இங்கு அதிமுக-வுக்கும் - அமமுகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

திருவள்ளூர் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

வட சென்னை (Chennai North Constituency)

திமுக - கலாநிதி வீராசாமி

தேமுதிக - அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்

அமமுக - சந்தானகிருஷ்ணன்.பி

மக்கள் நீதி மய்யம் - ஏஜி மௌர்யா

1996 - 2014 வரை திமுகவின் கோட்டையாக விளங்கிய வடசென்னை தொகுதியை, அதிமுக 2014ல் கைப்பற்றியது. நடப்பு தேர்தலில் 63.47 சதவிகித வாக்குகள் மட்டுமே இங்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வட சென்னை தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென் சென்னை (Chennai South Constituency)

திமுக - தமிழச்சி தங்கபாண்டியன்

அதிமுக - டாக்டர்.ஜே.ஜெயவர்தன்

மக்கள் நீதி மய்யம் - ஆர்.ரங்கராஜன்(ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி)

அமமுக- இசக்கி சுப்பையா

தென் சென்னை தொகுதி நட்சத்திர வேல்யூ குவிந்த தொகுதிகளில் ஒன்று. தமிழச்சி தங்கபாண்டியனுக்கு முதன் முதலாக திமுக சார்பில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கும் அதிமுக சார்பில் முதன் முதலாக சீட் கொடுக்கப்பட்டுள்ளதால் திமுக vs அதிமுக இங்கு தான் முதன்மை போட்டியாளர்கள் என்பது சொல்லி புரியவேண்டியதில்லை. அதேசமயம், வெறும் 56.41 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி, 38 மக்களவை தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்குகள் பதிவான தொகுதி என்ற அவப் பெயரை தாங்கி நிற்கிறது இந்த தென் சென்னை.

தென் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

மத்திய சென்னை (Chennai Central Constituency)

திமுக - தயாநிதி மாறன்

எஸ்.டி.பி.ஐ(அமமுக கூட்டணி) - தெஹ்லான் பாகவி

மக்கள் நீதி மய்யம் - கமீலா நாசர்

பாமக (அதிமுக கூட்டணி) - சாம் பால்

நட்சத்திர தொகுதி எனும் பெயர் கொண்ட மற்றொரு தொகுதி மத்திய சென்னை. திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் ஆகியோர் இங்கு போட்டியிடுகின்றனர். அமமுகவுடன் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இருந்தே கைக்கோர்த்து நிற்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு இங்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு தேர்தலில் இங்கு 59.25 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

மத்திய சென்னை தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ஸ்ரீபெரும்புதூர் (Sriperumbudur Constituency)

திமுக - டி.ஆர்.பாலு

பாமக (அதிமுக கூட்டணி) - ஏ.வைத்திலிங்கம்

மக்கள் நீதி மய்யம் - எம்.ஸ்ரீதர்

அமமுக - ஜி.தாம்பரம் நாராயணன்

மற்றொரு குறைவான வாக்குப்பதிவு கொண்ட தொகுதி இது எனலாம். வெறும் 61.61 சதவிகித வாக்குகள் மட்டுமே இங்கு பதிவானது. திமுகவுக்கும் - அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கும் இங்கு கடும் போட்டி நிலவுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

காஞ்சிபுரம் (Kancheepuram Constituency)

திமுக - ஜி.செல்வம்

அதிமுக - கே.மரகதம்

அமமுக - ஏ.முனுசாமி

நாம் தமிழர் கட்சி - டி.சிவரஞ்சினி

இத்தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் கே.மரகதம், திமுகவின் ஜி.செல்வத்தை தோற்கடித்தார். இத்தேர்தலிலும், இரு கட்சியின் சார்பாக, இவ்விருவருமே கோதாவில் இருப்பதால், முதன்மை போட்டியாளர்களாக வலம் வருகின்றனர். நடப்பு தேர்தலில் இங்கு 73.82 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.

காஞ்சிபுரம் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

அரக்கோணம் (Arakkonam Constituency)

திமுக - எஸ்.ஜெகத்ரட்சகன்

பாமக (அதிமுக கூட்டணி) - ஏ.கே.மூர்த்தி

அமமுக - என்.ஜி.பார்த்திபன்

மக்கள் நீதி மய்யம் - என்.ராஜேந்திரன்

நடப்பு தேர்தலில் 76.64 சதவிகித் வாக்குகள் இங்கு பதிவாகியுள்ளது. அபாரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல எண்ணிக்கையில் இங்கு வாக்குகள் பதிவானது. 2014 தேர்தலில், அதிமுகவின் ஜி.ஹரி 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் என்.ஆர்.இளங்கோவை தோற்கடித்தார். இம்முறையும், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

அரக்கோணம் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

கிருஷ்ணகிரி (Krishnagiri Constituency)

அதிமுக - கே.பி.முனுசாமி

காங்கிரஸ் (திமுக கூட்டணி) - ஏ.செல்ல குமார்

அமமுக - எஸ்.கணேசகுமார்

மக்கள் நீதி மய்யம் - எஸ்.ஸ்ரீகாருண்யா

அதிமுக சார்பில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான கே.பி.முனுசாமி இந்த காண்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 தேர்தலில், அதிமுகவின் கே.அசோக் குமார், 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தி இருந்தார். தற்போது, திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 75.59 சதவிகித வாக்குகள் இத்தேர்தலில் பதிவாகியுள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தர்மபுரி (Dharmapuri Constituency)

பாமக (அதிமுக கூட்டணி) - மருத்துவர்.அன்புமணி ராமதாஸ்

திமுக - மருத்துவர் எஸ்.செந்தில் குமார்

அமமுக - ஆர்.பழனியப்பன்

மக்கள் நீதி மய்யம் - டி.ராஜசேகர்

திமுகவுக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய தொகுதிகளில் ஒன்று தர்மபுரி. சிட்டிங் எம்.பி. அன்புமணி ராமதாஸ், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 80.49 சதவிகித வாக்குகளை அளித்து, வாக்குப்பதிவில் தனியாக கெத்து காட்டி நிற்கிறது தர்மபுரி தொகுதி.

தர்மபுரி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

திருவண்ணாமலை (Tiruvannamalai Constituency)

அதிமுக - எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திமுக - சி.அண்ணாதுரை

அமமுக - ஞானசேகர்

மக்கள் நீதி மய்யம் - ஆர்.அருள்

நடப்பு தேர்தலில் 77.51 சதவிகித வாக்குகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திருவண்ணாமலை தொகுதியின் தற்போதைய எம்.பி. அதிமுகவின் வனரோஜா. கடந்த தேர்தலில், திமுக சி.அண்ணாதுரை இரண்டாம் இடம் பெற்று தோற்றாலும், இம்முறையே அவரே திமுக சார்பில் மீண்டும் களம் காண்கிறார்.

திருவண்ணாமலை தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ஆரணி (Arani Constituency)

அதிமுக - வி.ஏழுமலை

காங்கிரஸ்(திமுக கூட்டணி) - எம்.கே.விஷ்ணு பிரசாத்

அமமுக - செந்தமிழன்

மக்கள் நீதி மய்யம் - வி.ஷாஜி

கடந்த 2014 மக்களவை தேர்தலில், அதிமுக இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை துவம்சம் செய்த தொகுதி ஆரணி. அதிமுக சார்பில் கடந்தமுறை போட்டியில் வி.எழுமலையே இம்முறையும் களம் காண்கிறார். அவரை நேரடியாக எதிர்ப்பது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியாகும். 78.80 சதவிகித வாக்குகள் இம்முறை ஆரணியில் பதிவாகியுள்ளன.

ஆரணி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

விழுப்புரம் (Vilupuram Constituency)

பாமக (அதிமுக கூட்டணி) - எஸ்.வடிவேல் ராவணன்

வி.சி.க.(திமுக கூட்டணி) - டி.ரவிக்குமார் (பொதுச் செயலாளர்)

அமமுக - என்.கணபதி

மக்கள் நீதி மய்யம் - எஸ்.அன்பின் பொய்யாமொழி

78.22 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ள தொகுதி விழுப்புரம். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது அதிமுக. இரண்டாம் இடம் பிடித்தது திமுக. இம்முறை, அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான பாமகவுக்கு சீட் கொடுக்கப்பட, திமுக தனது கூட்டணி கட்சியான விசிகவுக்கு சீட் கொடுக்க பாமக vs விசிக-வாக மாறியிருக்கிறது விழுப்புரம்.

விழுப்புரம் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

கள்ளக்குறிச்சி (Kallakurichi Constituency)

திமுக - கௌதம சிகாமணி

தேமுதிக - எல்.கே.சுதீஷ்

அமமுக - கோமுகி மணியன்

மக்கள் நீதி மய்யம் - ஹெச்.கணேஷ்

தேமுதிக நேரடியாக திமுகவுடன் மல்லுக்கட்டும் தொகுதி கள்ளக்குறிச்சி. அதுவும் நட்சத்திர வேட்பாளருடன். விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ், திமுக வேட்பாளருக்கு கடும் போட்டி தருவார் என்பதால், கவனத்தை ஈர்க்கும் தொகுதிகளில் முதல் வரிசையில் ஒன்றாக அமைந்திருக்கிறது. மொத்த வாக்குப்பதிவு 78.38.

கள்ளகுறிச்சி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சேலம் (Salem Constituency)

திமுக - எஸ்.ஆர்.பார்த்திபன்

அதிமுக - கே.ஆர்.எஸ்.சரவணன்

அமமுக - எஸ்.கே.செல்வம்

மக்கள் நீதி மய்யம் - எம்.பிரபு மணிகண்டன்

திமுக, அதிமுக நேரடியாக மலுக்கட்டும் தொகுதிகளில் முக்கியமான தொகுதி சேலம். நம்ம சி.எம். ஊராச்சே.. 2009லிருந்து அதிமுக வசமிருக்கும் சேலம், இம்முறை ஜெயலலிதா இல்லாமல் கடும் போட்டியை காணவிருக்கிறது. மொத்தம் பதிவான வாக்குகள் 77.33.

சேலம் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

நாமக்கல் (Namakkal Constituency)

திமுக - ஏ.கே.பி.சின்ராஜ்

அதிமுக - பி.காளியப்பன்

அமமுக - பி.பி.சாமிநாதன்

மக்கள் நீதி மய்யம் - ஆர்.தங்கவேலு

இதுவும் திமுக vs அதிமுக களமே. கடந்த 2014 தேர்தலில் அதிமுக சார்பில் கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர் சுந்தரம் பி.ஆர். ஆனால், இம்முறை பி.காளியப்பன் அதிமுகவில் களம் காண, 2009 போல் மீண்டும் திமுக வெற்றிப் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 79.98 வாக்குப்பதிவை படிப்பாளிகள் நிறைந்த நாமக்கல் தொகுதி வாக்காளர்கள் கொடுத்துள்ளனர்.

நாமக்கல் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ஈரோடு (Erode Constituency)

அதிமுக - ஜி.மணிமாறன்

மதிமுக(திமுக கூட்டணி) - ஏ.கணேச மூர்த்தி

அமமுக - கே.சி.செந்தில்குமார்

மக்கள் நீதி மய்யம் - ஏ.சரவணகுமார்

கடந்த 2014 மக்களவை தேர்தலில், மதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கணேச மூர்த்தி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். வெற்றிப் பெற்றவர் அதிமுகவின் செல்வகுமார சின்னையன். தற்போது, மீண்டும் கணேச மூர்த்தி போட்டியிட, அவருக்கு டஃப் கொடுப்பது அதிமுக சார்பில் ஜி.மணிமாறன். ஈரோடு மொத்த வாக்குப்பதிவு 72.67

ஈரோடு தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

திருப்பூர் (Tiruppur Constituency)

அதிமுக - எம்.எஸ்.எம்.ஆனந்தன்

சிபிஐ(திமுக கூட்டணி) - கே.சுப்பராயன்

அமமுக - எஸ்.ஆர்.செல்வம்

மக்கள் நீதி மய்யம் - வி.எஸ்.சந்திரகுமார்

கடந்த 2014 மக்களவை தேர்தலில் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தொகுதி திருப்பூர். இதன் சிட்டிங் எம்.பி. அதிமுகவின் சத்தியபாமா. ஆனால், இம்முறை எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிட, அவரை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ-யின் கே.சுப்பராயன் எதிர்கொள்கிறார். திருப்பூரில் நடப்பு தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 72.93.

திருப்பூர் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

நீலகிரி (Nilgiri Constituency)

திமுக - ஆ.ராசா

அதிமுக - எம்.தியாகராஜன்

அமமுக - எம்.ராமசாமி IAS (ஓய்வு பெற்ற அதிகாரி)

மக்கள் நீதி மய்யம் - ராஜேந்திரன்

கடந்த முறை 2014 தேர்தலில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆ.ராசா இம்முறை மீண்டும் போட்டியிட்டு நீலகிரியையே உஷ்ணமாக்கும் அளவிற்கு கடும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறார். இதுவும் திமுக vs அதிமுக தொகுதி என்றால் அது மிகையல்ல. இம்முறை 73.70 வாக்குப்பதிவை நீலகிரி பெற்றிருக்கிறது.

நீலகிரி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

கோயம்புத்தூர் (Coimbatore Constituency)

சிபிஐ(எம்) (திமுக கூட்டணி) - பி.ஆர்.நடராஜன்

பாஜக (அதிமுக கூட்டணி) - சி.பி.ராதாகிருஷ்ணன்

மக்கள் நீதி மய்யம் - ஆர்.மஹேந்திரன்

கோவை எப்போதுமே புரிந்து கொள்ள முடியாத, எளிதில் கணிக்க முடியாத தொகுதியாகும். பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் இடதுசாரிகளும் அங்கே வெற்றிப் பெறுவார்கள், பாஜகவும் வெற்றிப் பெறும். கடந்த 2014 தேர்தலில், அதிமுக வேட்பாளர் நாகராஜனிடம், வெறும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார். நடப்பு தேர்தலில் வெறும் 63.99 வாக்குப்பதிவை மட்டுமே கோவை வாக்காளர்கள் கொடுத்திருக்கின்றனர்.

கோவை தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

பொள்ளாச்சி (Pollachi Constituency)

திமுக - கே.சண்முகசுந்தரம்

அதிமுக - சி.மஹேந்திரன்

அமமுக - எஸ்.முத்துக்குமார்

மக்கள் நீதி மய்யம் - ஆர்.மூகாம்பிகை

ரம்மியமான பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக நேரடியாக அதிமுகவை எதிர்கொள்ளும் மற்றொரு தொகுதியாகும். அதேசமயம், கடந்த மக்களவை தேர்தலில், கோவையைப் போல இங்கும் பாஜக இரண்டாமிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை திமுக, அதிமுகவுக்கு பொள்ளாச்சியில் சவால் அளிக்க காத்திருக்கும் மற்றொரு கட்சி அமமுக. மேலும், இத்தேர்தலில் 70.78 சதவிகித வாக்குப்பதிவு பொள்ளாச்சியில் பதிவாகியுள்ளது.

பொள்ளாச்சி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

திண்டுக்கல் (Dindigul Constituency)

திமுக - பி.வேலுச்சாமி

பாமக (அதிமுக கூட்டணி) - கே.ஜோதி

அமமுக - ஜோதி முருகன்

மக்கள் நீதி மய்யம் - எஸ்.சுதாகர்

நாம் தமிழர் கட்சி - நடிகர் மன்சூர் அலிகான்

திண்டுக்கல் தொகுதியும் சாதகமான ரிசல்ட்டுக்காக அமமுக வலிமையாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தொகுதியாகும். நாம் தமிழர் கட்சி சார்பில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். 75.00 சதவிகித வாக்குகள் இங்கு பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

கரூர் (Karur Constituency)

காங்கிரஸ் (திமுக கூட்டணி) - ஜோதி மணி

அதிமுக - எம்.தம்பிதுரை

அமமுக - என்.தங்கவேல்

மக்கள் நீதி மய்யம் - ஹரிஹரன்

பெயர்களை பார்த்தவுடனேயே இது நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதி என்பதை உணர்ந்திருப்பீர்கள். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும், அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் போட்டியிடுவதால், கேமராக்களின் மொய்ப்பு வழக்கத்தை விட இங்கு அதிகம். அமமுகவும் இங்கு சவால் அளிக்க காத்திருக்கும் கட்சியாக உள்ளது. 79.11 சதவிகித வாக்குகள் இங்கு பதிவாகியுள்ளது.

கரூர் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

திருச்சி (Trichy Constituency)

காங்கிரஸ் (திமுக கூட்டணி) - எஸ்.திருநாவுக்கரசர்

தேமுதிக (அதிமுக கூட்டணி) - வி.இளங்கோவன்

அமமுக - சாருபாலா தொண்டைமான்

மக்கள் நீதி மய்யம் - வி.ஆனந்த ராஜ்

நட்சத்திர அந்தஸ்து பெறும் மற்றொரு தொகுதி திருச்சி. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இங்கு களமிறங்கி இருக்கிறார். இங்கு காங்கிரஸுக்கும் அமமுகவுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சுவாரஸ்யம் என்னவெனில், கடந்த 2014 தேர்தலில், காங்கிரஸ் சார்பில் திருச்சியில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான், அதிமுக வேட்பாளரிடம் வெறும் 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன்பிறகு 2016ல் அதிமுகவில் இணைந்த சாருபாலா தொண்டைமான், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமமுக அணியில் இணைந்து, இப்போது அதே திருச்சி தொகுதியில், அமமுக சார்பில் களம் காண்கிறார்.

நடப்பு தேர்தலில் திருச்சியில் 68.89 வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருச்சி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

பெரம்பலூர் (Perambalur Constituency)

திமுக கூட்டணி - டி.ஆர். பச்சமுத்து (பாரிவேந்தர் - எஸ்ஆர்எம் குழுமத் தலைவர்)

அதிமுக - என்.ஆர்.சிவபதி

அமமுக - எம்.ராஜசேகரன்

78.70 சதவிகிதம் வாக்குப்பதிவு பெற்றிருக்கும் பெரம்பலூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி. அதிமுகவின் மருதராஜா. இவர் கடந்த தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்து இருந்தார். ஆனால், இந்த தேர்தலில் திமுக சார்பில் பச்சைமுத்து பாரிவேந்தர் களமிறங்கி இருப்பதால், போட்டியில் அனல் பறக்கிறது.

பெரம்பலூர் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

கடலூர் (Cuddalore Constituency)

திமுக கூட்டணி - டி.ஆர்.வி.எஸ். ரமேஷ்

பாமக (அதிமுக கூட்டணி) - ஆர். கோவிந்தசாமி

அமமுக - கே.ஆர்.கார்த்திக்

மக்கள் நீதி மய்யம் - வி.அண்ணாமலை

கடலூரில் திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 73.64 வாக்குகள் பதிவாகியுள்ள கடலூரில், பாமக வேட்பாளரை ஆதரித்து த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்ய வந்த போது, பாமக தொண்டர்கள் ஒருவர் கூட அவ்விடத்தில் இல்லை. வேட்பாளர் கோவிந்தசாமியே லேட்டாக பிரச்சாரத்திற்கு வர, அதுவரை அங்கே பொறுமையாக வாசன் காத்திருந்தது வரலாறு. இவ்வளவு கூட்டணி பூசல்களை கடந்து கடலூரில் வெற்றிப் பெறப் போவது யார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

கடலூர் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சிதம்பரம் (Chidambaram Constituency)

வி.சி.க - தொல்.திருமாவளவன்

அதிமுக - பி. சந்திரசேகர்

அமமுக - ஏ.இளவரசன்

மக்கள் நீதி மய்யம் - டி.ரவி

சிதம்பரத்தில் நடந்த கூத்து அவ்வளவு சீக்கிரத்தில் நாம் மறந்துவிட முடியாது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இங்கு களமிறங்கி உள்ளார். பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, கடந்த ஏப்ரல் மாதம் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில் பல வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. சிதம்பரம் தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குப்பதிவு 77.72

சிதம்பரம் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

மயிலாடுதுறை (Mayiladuthurai Constituency)

திமுக - எஸ்.ராமலிங்கம்

அதிமுக - எஸ்.ஆசைமணி

அமமுக - எஸ்.செந்தமிழன்

மக்கள் நீதி மய்யம் - எம்.ரிபயுதீன்

மயிலாடுதுறை தொகுதியில் திமுக, அதிமுக நேரடியாக மோதுகின்றன. இதுவரை இங்கு காங்கிரஸ் 9 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், திமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 75.87% ஆக இருந்தது. தற்போது, எண்ணிக்கை குறைந்து 73.56ஆக பதிவாகியுள்ளது.

மயிலாடுதுறை தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

நாகப்பட்டினம் (Nagapattinam Constituency)

சி.பி.ஐ (திமுக கூட்டணி) - எம்.செல்வராசு

அதிமுக - எம்.சரவணன்

அமமுக - டி.செங்கொடி

மக்கள் நீதி மய்யம் - கே.குருவைய்யா

தலித்துகள் அதிகம் வசிக்கும் நாகப்பட்டினம் தொகுதியில் விவசாயம் தலையாய தொழிலாகும். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாகை தொகுதியில் பதிவாகியுள்ள மொத்த வாக்குப்பதிவு 76.49. அமமுக-வும் இங்கு மற்ற கட்சிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் முக்கியத்துவம் பெறும் கட்சியாக வலம் வருகிறது.

நாகப்பட்டினம் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சிவகங்கை (Sivaganga Constituency)

காங்கிரஸ் (திமுக கூட்டணி) - கார்த்தி சிதம்பரம்

பாஜக (அதிமுக கூட்டணி) - ஹெச்.ராஜா

மக்கள் நீதி மய்யம் - பாடகர் சிநேகன்

அமமுக - வி.பாண்டி

பெயர்களை பார்க்கும் போது ஜிவ்வுன்னு இருக்குதா!! யெஸ்... நட்சத்திரங்கள் குவிந்திருக்கும் தொகுதி இந்த சிவகங்கை. இங்கு, காங்கிரசும், பாஜகவும் நேருக்கு நேர் மோதுவது கூடுதல் சுவாரஸ்யம். 'பிக்பாஸ்' ஷோவில் கலந்து கொண்டு, பின் மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியமான சிநேகனுக்கு சீட் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் கமல்ஹாசன். வெகுஜன மக்கள் கூட தேர்தல் முடிவை எதிர்பார்க்கும் தொகுதியாக உள்ள சிவகங்கையில் பதிவாகி இருக்கும் மொத்த வாக்குப்பதிவு 69.34

சிவகங்கை தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

மதுரை (Madurai Constituency)

அதிமுக - வி.வி.ஆர். ராஜ் சத்யன்

சி.பி.ஐ.(எம்) (திமுக கூட்டணி) - எஸ்.வெங்கடேசன்

அமமுக - கே.டேவிட் அண்ணாதுரை

மக்கள் நீதி மய்யம் - எம்.அழகர்

மிக முக்கியமான மக்களவை தொகுதியில் குறிப்பிடத்தக்க ஒன்று மதுரை. சுதந்திர போராட்டங்களின் ஊற்றாய் விளங்கும் மதுரையில் திமுக, மார்க்சிஸ்ட், அமமுக பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். மதுரை தொகுதியில் ஒரு ஆச்சர்ய சம்பவம் இத்தேர்தலில் அரங்கேறியது. பொதுவாக, மார்க்சிஸ்ட் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்துக்கு திரை பிரபலங்களை அழைக்க மாட்டார்கள். ஆனால், இம்முறை நடிகை ரோகிணி, இயக்குனர் கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் எஸ்.வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. நடப்பு தேர்தலில் மதுரையில் 65.83.சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

மதுரை தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தேனி (Theni Constituency)

அதிமுக - ரவீந்திரநாத் குமார்

காங்கிரஸ் (திமுக கூட்டணி) - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அமமுக - தங்க தமிழ்செல்வன்

மக்கள் நீதி மய்யம் - எஸ்.ராதாகிருஷ்ணன்

துணை முதல்வர் ஒ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் vs முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் vs அமமுகவின் தங்க தமிழ் செல்வன்.

இனி இத்தொகுதியைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. மெகா நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதி இது என்பதற்கு மற்றொரு அடையாளம், பிரதமர் நரேந்திர மோடியே தேனிக்கு நேரடியாக வந்து ஓ.பி.எஸ் மகனுக்கு வாக்கு சேகரித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அமமுக-வும் இங்கு கடுமையான போட்டியை உருவாக்கி இருக்கிறது. இருக்கு... செம காட்சிகள் இங்கு இருக்கு. தேனியில் பதிவான மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 74.75.

தேனி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

விருதுநகர் (Virudhunagar Constituency)

தேமுதிக (அதிமுக கூட்டணி) - ஆர்.அழகர்சாமி

காங்கிரஸ் (திமுக கூட்டணி) - மாணிக்க தாகூர்

அமமுக - எஸ் பரமசிவா ஐயப்பன்

மக்கள் நீதி மய்யம் - வி முனியசாமி

விருதுநகரிலும் கூட்டணி பூசல் சம்பவங்களை காண முடிந்தது.  தேமுதிக வேட்பாளர் ஆர்.அழகர்சாமி பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்கள் குறித்து எங்களுக்கு முறையாக சொல்வதில் அதிமுக நிர்வாகிகள் புகார் கூறினார். இதனால், பெரும்பாலும் தேமுதிக வேட்பாளர் தனித்தே பிரச்சாரம் செய்யும் சூழல் உருவாகி உள்ளது. விருதுநகரில் பதிவான மொத்த வாக்கு சதவிகதம் 72.01

விருதுநகர் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ராமநாதபுரம் (Ramanathapuram Constituency)

பாஜக (அதிமுக கூட்டணி) - நயினார் நாகேந்திரன்

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (திமுக கூட்டணி) - நவாஸ் கனி

அமமுக - வி.டி.என்.ஆனந்த்

மக்கள் நீதி மய்யம் - விஜய பாஸ்கர்

சோடா பாட்டில், மண்டை உடைப்பு, தையல் என்று பல கலவர சம்பவங்களை நிகழ் தேர்தலில் சந்தித்த தொகுதி ராமநாதபுரம். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இங்கே தீவிரமாக பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்த போது நபர் வீசிய சோடா பாட்டில் அதிமுக நிர்வாகி தலையில் உடைய, அவருக்கு 12 தையல்கள் போடப்பட்டது. பாஜகவுக்கும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் இங்கு நேரடிப் போட்டி நிலவுகிறது. பதிவான மொத்த வாக்கு சதவிகிதம் 67.85

ராமநாதபுரம் தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தூத்துக்குடி (Thoothukudi Constituency)

பாஜக (அதிமுக கூட்டணி) - தமிழிசை சவுந்திரராஜன்

திமுக - கனிமொழி

அமமுக - டாக். எம்.புவனேஸ்வரன்

மக்கள் நீதி மய்யம் - டி.பி.எஸ். பொன் குமரன்

இத்தொகுதியை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் எனலாம். தமிழிசை vs கனிமொழி. இதில் யார் மும்பை, யார் சென்னை என்பதை நீங்களே முடிவு செய்து  கொள்ளவும். தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தின் போது, கனிமொழி வீட்டில் இரவு 8.30 மணிக்கு மேல் ஐடி ரெய்டு நடத்தினர். அப்போது பேசிய கனிமொழி, 'தமிழிசை வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கே போய் ரெய்டு நடத்த முடியுமா?-னு அதிர வைக்க, தூத்துக்குடியில் வெல்லப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இங்கு பதிவான மொத்த வாக்கு சதவிகிதம் 69.03.

தூத்துக்குடி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி (Tenkasi Constituency)

புதிய தமிழகம் (அதிமுக கூட்டணி) - கே.கிருஷ்ணசாமி

திமுக - தனுஷ் எம் குமார்

அமமுக - எஸ்.பொன்னுத்தாய்

மக்கள் நீதி மய்யம் - கே முனீஸ்வரன்

70.98 வாக்கு சதவிகிதம் பதிவாகி இருக்கும் தென்காசி தொகுதியில் திமுகவுக்கும், புதிய தமிழகம், அமமுக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. கிருஷ்ணசாமி ஒவ்வொரு முறையும் இதே தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று வருகிறார். திமுக, இந்த தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக களமிறங்குகிறது.

தென்காசி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

திருநெல்வேலி (Thirunelveli Constituency)

அதிமுக - பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன்

திமுக - எஸ். ஞானதிரவியம்

அமமுக - மைக்கேல் ராயப்பன்

மக்கள் நீதி மய்யம் - எம் வென்னிமலை

திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதும் மற்றொரு களம் நெல்லை. ஓ.பி.எஸ்.ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் இங்கு போட்டியிட, திமுகவின் ஞானதிரவியம் அவருக்கு கடும் சவால் அளிக்கிறார். அமமுக சார்பில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுகிறார். பதிவான மொத்த வாக்கு சதவிகிதம் 66.68

திருநெல்வேலி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

கன்னியாகுமரி (Kanniyakumari Constituency)

பாஜக (அதிமுக கூட்டணி) - பொன்.ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ் (திமுக கூட்டணி ) - ஹெச்.வசந்தகுமார்

அமமுக - லக்ஷ்மன்

மக்கள் நீதி மய்யம் - ஜே.எபினேசர்

நட்சத்திர வேட்பாளர்கள் கொண்ட மற்றொரு தொகுதி கன்னியாகுமரி.

தேர்தல் வரலாற்றில் கன்னியாகுமரி பகுதி தனித்துவமும், சிறப்பும் பெற்று திகழ்கிறது.சட்டப்பேரவை தேர்தலானாலும் சரி, மக்களவை தேர்தலானாலும் சரி இங்கு வெற்றி வாகை சூடும் கட்சியே ஆட்சியை பிடித்து வருவது இதுவரையிலான நடைமுறை. காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இங்கே செல்வாக்கு அதிகம். அந்த வகையில் இது பாஜக vs காங்கிரஸ் களமாகும். 69.62 சதவிகித வாக்குகள் இங்கு பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி பற்றிய முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment