Advertisment

ஸ்மார்ட் முடிவெடுத்த ம.ம.க: அதைச் செய்யாத முஸ்லிம் லீக் வாஷ் அவுட்!

Indian Union Muslim League got washed out in all 3 constituency Tamil News: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்லவியை தழுவியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu assembly election 2021: Indian Union Muslim League got washed out in all 3 constituency

Tamilnadu assembly election 2021: தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று ஞாயிற்று கிழமை நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளோடு களம் கண்ட திமுக 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் பெற்று வெற்றி பெற்றது.

Advertisment

மதவாத சக்திகளுக்கு எதிராக 12 கட்சிகளுடன் திமுக அமைத்த கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய இரண்டு முஸ்லீம் கட்சிகள் இடம்பெற்று இருந்தன. நீண்ட நெடிய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 3 தொகுதிகள் வேண்டும் என பிடிவாதம் பிடித்த, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் 2 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி, (மணப்பாறை - அப்துல் சமத் 98,077, பாபநாசம் - எம்.எச். ஜவஹிருல்லா 86,567) அந்த இரண்டு தொகுதியையும் கைப்பற்றியது. ஆனால் கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் (ஏணி) போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எதிர்த்து போட்டியிட்ட அதிகமுகவிடம் தோல்வியை தழுவியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Tamilnadu News Update Tamilnadu Election 2021 Tamilnadu Latest News Tamilnadu Assembly Election Manithaneya Makkal Katchi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment