Tamilnadu Assembly Election MNM Election Election statement : தமிழக அரசியலில் மற்றம் கொண்டுவர வேண்டும் என்று சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்காக பரபரப்பாக இயங்கி வரும் நிலையில். நாளுக்கு நாள் அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் கனிசமான வாக்குகளை பெற்றனர்.
இதில் பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கு சக்தியாக மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகள் இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் தலைமையை ஏற்று சமத்துவமக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளும் கூட்டணியில் இணைந்த்து. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 80 தொகுதிகள் ஒதுக்கிய மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு செல்லும் கமல்ஹாசன் அவ்வப்போது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வந்தார். இதில் காஞ்சிபுரத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழக மக்களிடம் பெரும்வரவெற்பை பெற்ற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின், அடுத்து முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இதனை இணைத்துக்கொண்டனர். இதனால் கழகங்கள் மக்கள் நீதி மய்யத்தில் வாக்குறுதிகளை காப்பியடித்துவிட்டதாக கமல்ஹாசன் குற்றம் சட்டினார்.
இந்நிலையில் திமுக, அதிமுக சார்பில், தேர்தல் அறிக்கைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் மக்களை கவரும் பல திட்டங்கள் கூறப்பட்ட நிலையில், 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்தில் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்துவது, ராணுவத்தில் உள்ள கேண்டீன்கள் போன்று நியாயமான விலையில் பொருட்கள் விற்பதற்கு மக்கள் கேண்டீன் அமைக்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை குறித்த விபரங்கள் :
ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி கொடுக்கப்படும். விவசாயம் தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை உறுதி செய்து ரூ.60-70 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். 1 முதல் 2 கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உறுதி செய்து, தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
நதி நீர் இணைப்பு அதிதிறன் நீர்வழிச்சாலை, நீர் நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் நீலப்புரட்சி விவசாயம், இயற்கையும், அறிவியலும் சார்ந்த நிரந்தரப் பசுமைப் புரட்சி, விவசாய பொருட்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் ஏற்றுமதி வரை உலக சந்தை மயமாக்கல், காடு வனம் அடர்த்தியாக வளர்க்கப்படும். மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி செய்யப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி.
கிராமப்புற சுய சார்பிற்கும், தொழிலுக்கும், விவசாயத்திற்கும் மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதிக்கும், வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும், ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்த அப்துல்கலாம் புறா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அரசு பள்ளிகல்வி உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும். அடிப்படை கல்வி, சீர்த்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைக்கல்வி 9-10 வரை சீர்திருத்தம் செய்யப்படும். மாணவர்களின் படிப்பு சுமையும் குறைக்கப்படும். உயர்கல்வி- உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றம், உலகத்தோடு போட்டி போடும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்.
தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ‘சீட்’ தேர்வு (SEET), அனைவருக்கும் உலக தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவ கல்வி, உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும். யுஎன்ஓ- அனைத்து தொழிலாளர் நல வாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக மாற்றியமைத்து அவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு உறுதி செய்யப்படும். நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்க அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி, ஒரு வருடத்தில் ஆங்கில மொழி புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு செய்யப்படும். தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கை அமல்படுத்துவதே எங்கள் இலக்கு.அரசு வேலை வாய்ப்பில் 69 சதவீதம் உறுதி. கடனில்லா தமிழகம், வரிகுறைப்பு, நீடித்த வளர்ச்சி, வரிக்கு நிகரான வருமானம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”