Advertisment

குண்டு கல்யாணம் முதல் கஞ்சா கருப்பு வரை... அதிமுக அணிக்கு களமாட சினிமா படை தயார்!

Tamilnadu Election 2021 : சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக தரப்பில், பிரச்சாரம் மேற்கொள்ளும் சினிமா நட்சத்திரங்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
குண்டு கல்யாணம் முதல் கஞ்சா கருப்பு வரை... அதிமுக அணிக்கு களமாட சினிமா படை தயார்!

Tamilnadu Assembly Election 2021 AIADMK Election Campaign : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்று 3 வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளன. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் சீமான் என 5 முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.  தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சார்ஙகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் சினிமா பிரபலங்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாராரம் மேற்கொள்ளும் சினிமா நட்சத்திரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து நட்சத்திரங்களும், வரும் 20-ந் தேதி பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி நிறைவு செய்யவுள்ளனர்.

அதன்படி இந்த பட்டியலில், கழக கலைப்பிரிவு செயலாளர் இயக்குநர் ஆர்வி உதயக்குமார், திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலா, இயக்குநர் மற்றும் நடிகர் சி.ரங்கநாதன், இயக்குநர் மற்றும் நடிகர் அனுமோகன், கழக செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, நட்சத்திர பேச்சாளர் பாத்திமாபாபு, இயக்குநர் மற்றும் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன், நடிகர் பி.அஜய்ரத்தினம், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் குண்டுகல்யாண், நடிகர் வையாபுரி,  நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா, நடிகர் சிங்கமுத்து, நடிகர் தியாகு,  நடிகர் சரவணன், நடிகை ஜெயதேவி, நடிகர் போண்டா மணி, திரைப்பட இயக்குநர் பவித்ரன், காதல் சுகுமார், நடிகர் கிங்காங், ஆகியோர் இடமபெற்றுள்ளனர்.

தொடர்ந்து அதிமுகவின் கூட்டணி கட்சியாக பாஜகவும், தமிழகத்தில் தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  தமிழக பாஜகவின் முக்கிய தலைவர் கே.டி.ராகவன், சசிகலா புஷ்பா, ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், திரைத்துறையினர் சார்பில், நடிகர் ராதாரவி, செந்தில், கவுதமி, சிவாஜி மகன் ராம்குமார் கணேசன், நடிகை விஜய சாந்தி, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் சினிமா பிரபலங்கள் அனைவரும் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu Assembly Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment