Advertisment

இறுதி நிலவரம்: 133 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த திமுக

Tamilnadu Election : தமிழக சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் வாக்கு சதவீதம் எவ்வளவு?

author-image
WebDesk
New Update
இறுதி நிலவரம்: 133 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த திமுக

தமிழக சட்டசபை தேர்தலில் தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள திமுக விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது.

Advertisment

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக புதிதாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.  கடந்த 10 ஆண்டுகளாக நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட திமுக இந்த முறை பெரும்பான்மையடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் இரு பெரும் தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதாஇல்லாத இந்த தேர்தலில் 5 முதல்வர் வெட்பாளர்கள் 4 கூட்டணியில் போட்டியிட்டனர். இதில் திமுக கூட்டணியில், திமுக 173 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் வழங்கப்பட்டது. இதில் திமுக 133 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதில் திமுக கூட்டணியில், திமுக 37.70% வாக்குகளும், காங்கிரஸ் 4.28% வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1.3% வாக்குகளும், சிபிஐ 1.09% வாக்குகளும், சிபிஎம் 0.85% வாக்குகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.48% வாக்குகளும் பெற்றுள்ளன.

ஆனால் இந்த தேர்தலில் கட்டாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றிவாகை சூடியுள்ளது. இதில் அதிமுக 65 தொகுதிகளிலும், பாமக 5, பாஜக 4, இதர கட்சிகள் 1 ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  அதிமுகவின் முக்கிய அமைச்சர்களான ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன், சி.வி சண்முகம், ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

முக்கியமாக அதிமுக கூட்டணியில், அதிமுக 33.29% வாக்குகளும், பாமக, 3.80% வாக்குகளும், பாஜக 2.63% வாக்குகளும், பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 5 முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்கினாலும், அதிமுக மற்றும் திமுகவுக்கு மட்டுமே உண்மையான போட்டி நிலவியது. இதில பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு திமுக வேட்பாளர்கள் கடுமையாக போட்டி கொடுத்தனர். குறிப்பாக காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அதிமுக வேட்பாளர் ராமு கடும் போட்டியாக இருந்தார். வெற்றி பெறும் நிலையில் இருந்த ராமு இறுதியில் 750 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

திமுக அதிமுக நேரடி போட்டி இருந்தாலும், மற்ற கட்சிகளும் கனிசமான வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 3-வர் பெரிய கட்சியாக உறுவெடுத்துள்ளது. 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் 6.6% சதவீத வாக்குகள் பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் முதல்முறையாக களம் கண்ட கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் அதிக வாக்குகள் பெற்றுள்ளது.

இதில் அனைத்து தொகுதிகளிலும் தோல்விடைந்தாலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில், கடுமையான போட்டி கொடுத்த நிலையில், இறுதியில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தமிழத்தின் அனைத்து தொகுதிகளிலும் இருமுணை போட்டி நிலவிய நிலையில், கோவை தெற்கு தொகுதியில் மும்முனை போட்டி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது 133 தொகுதியில் தனித்து வெற்றி பெற்றுள்ள திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதில் நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் ஸ்டாலின் சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அதன்பிறகு ஆளுநரை சந்திக்கும் அவர் அமைச்சரவை பட்டியலை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும் கூறப்படுகிறது. இதில் வரும் 7-ந் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment