Advertisment

2019 Election Results Tamil Nadu : தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி திமுக

Tamil Nadu Election 2019 Result: தமிழக மக்களவை தேர்தல் முடிவுகள் லைவ்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN local body election News Live Updates

TN local body election News Live Updates

Tamil Nadu Election Result 2019:  தமிழ்நாடு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37-ஐ திமுக அணி வாரிச் சுருட்டியது. அதிமுக.வுக்கு ஒரே ஒரு இடம் கிடைத்தது.

Advertisment

மக்களவை தேர்தல் முடிவு வாக்குகள்(மே.23) நேற்று எண்ணப்பட்டன. திமுக தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வந்தது. அதிமுக பெரும் சரிவை சந்தித்துள்ளது. தவிர, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் வெற்றி பெறவில்லை.

மேலும் படிக்க - Tamil Nadu Assembly By Election 2019 Results Live : ஆட்சியை தக்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தைப் பொறுத்தவரை 38 மக்களவைத் தொகுதிகளில் திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க - நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் குறித்த துல்லியமான முழு விவரத்தை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தமிழக மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் பற்றிய லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் இதோ,

Live Blog

2019 Election Results Tamil Nadu: Lok Sabha Election 2019 Results in Tamil Nadu - தமிழக மக்களவை தேர்தல் முடிவுகள் 2019 லைவ்



























Highlights

    12:29 (IST)24 May 2019

    தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி திமுக

    தமிழ்நாட்டில் திமுக போட்டியிட்ட 19 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நின்ற விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிகுமார், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், கொமதேக வேட்பாளர் சின்னராஜ், மதிமுக.வின் கணேசமூர்த்தி ஆகிய 4 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    எனவே மக்களவையில் திமுக.வின் அலுவல்பூர்வ எண்ணிக்கை 23 ஆகிறது. இதன் மூலமாக தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி ஆகிறது திமுக.

    10:31 (IST)24 May 2019

    பொன்னாரை வென்ற வசந்தகுமார்

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் 6,27,235 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிகாலை 1.10 மணிக்கு கன்னியாகுமரி கலெக்டரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரசாந்த் மு.வடநேரே தேர்தல் முடிவை அறிவித்தார். இங்கு போட்டியிட்ட பாஜக.வின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவினார்.

    10:20 (IST)24 May 2019

    64,000 வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி தோல்வி

    தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் 64,424 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை தோற்கடித்தார்.

    09:58 (IST)24 May 2019

    76,000 வாக்குகளில் தேனியில் அதிமுக வெற்றி

    தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

    இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

    09:14 (IST)24 May 2019

    Tamil Nadu Election Results 2019: தமிழகத்தில் கட்சி வாரியாக பெற்ற இடங்கள்

    தமிழக மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

    தமிழகத்தில் கட்சி வாரியாக பெற்ற இடங்கள் வருமாறு:

    திமுக - 19, காங்கிரஸ் - 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2, இந்திய கம்யூனிஸ்ட் - 2, விசிக - 2, மதிமுக - 1, இ.யூமு.லீக் - 1, ஐ.ஜே.கே - 1, கொ.ம.தே.க - 1

    அதிமுக - 1

    08:48 (IST)24 May 2019

    நீண்ட இழுபறிக்கு பிறகு வென்ற திருமாவளவன்

    சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

    நீண்ட இழுபறிக்கு பிறகு நள்ளிரவில் முடிவு அறிவிக்கப்பட்டது.

    21:20 (IST)23 May 2019

    திருநாவுக்கரசர் வெற்றி

    திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசர் 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

    21:02 (IST)23 May 2019

    Election Result: தேனி மக்களவை தொகுதி நிலவரம்

    ரவீந்திரநாத் குமார் - அதிமுக - 3,53,708

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - காங்கிரஸ் - 2,99,273

    தங்க தமிழ்ச்செல்வன் - அமமுக - 96,919

    சாகுல் அமீது - நாதக - 19,089

    ராதாகிருஷ்ணன் - மநீம - 11,411

    20:59 (IST)23 May 2019

    TN LS Election Results: சிக்கல் சிதம்பரம்!

    சிதம்பரத்தில் திருமாவளவன் மீண்டும் 2000 வாக்குகள் பின்னடைவு!

    20:32 (IST)23 May 2019

    TN Election Final Results 2019: கடலூர் தொகுதி இறுதிக்கட்ட நிலவரம்,

    ஸ்ரீரமேஷ் - திமுக - 5,07,106

    ஆர்.கோவிந்தசாமி - பாமக - 3,68,098

    காசி.தங்கவேல் - அமமுக - 43,766

    சித்ரா - நாதக - 33,676

    வி.அண்ணாமலை - மநீம - 23,240

    20:30 (IST)23 May 2019

    மீண்டும் சிக்கலில் திருமா

    சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாலை இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த திருமா, இப்போது இறுதிக் கட்டத்தில் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும் முன்னிலையில் உள்ளார்.

    20:12 (IST)23 May 2019

    TN Election Results 2019: 4 சதவிகித வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி

    தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ( சுமார் 15 லட்சம் வாக்குகள்) 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

    20:00 (IST)23 May 2019

    Election Results 2019: மக்களவை தேர்தல் முன்னிலை நிலவரம்

    19:52 (IST)23 May 2019

    தென்சென்னை இறுதிக் கட்ட நிலவரம்

    தமிழச்சி தங்கபாண்டியன் - திமுக - 5,03,393

    ஜெயவர்தன் - அதிமுக - 2,73,180

    ரங்கராஜன் - மநீம - 1,23,220

    ஷெரின் - நாதக - 43,667

    இசக்கி சுப்பையா - அமமுக - 27,087

    19:39 (IST)23 May 2019

    22 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

    வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

    மொத்தம் பதிவான 9,44,205 வாக்குகளில் வடசென்னை தி.மு.க வேட்பாளர் தற்போது வரை அதிகபட்சமாக 5,60,464 வாக்குகளை பெற்றுள்ளார் இதன் மூலம் அவரை எதிர்த்து போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

    19:38 (IST)23 May 2019

    TN Election Results 2019: இறுதிக் கட்டத்தில் திருமாவளவன் முன்னிலை

    திமுக கூட்டணி - 4,26,128

    அதிமுக - 4,10,096

    அமமுக 52,013

    நா.த - 32,444

    மக்கள் நீதி மய்யம் - 13,856

    19:23 (IST)23 May 2019

    தயாநிதி மாறன் வெற்றி

    மத்திய சென்னை திமுக கூட்டணி வேட்பாளர் தயாநிதி மாறன் 4,47,150 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறார்.

    பாமக  - 1,46.713

    மக்கள் நீதி மய்யம் - 91,775

    நாம் தமிழர் - 30,703

    எஸ்.டி.பி.ஐ - 23,584

    19:16 (IST)23 May 2019

    Tamil Nadu Election Results 2019: கரூர் மக்களவை தொகுதி இறுதி நிலவரம்

    ஜோதிமணி - காங்கிரஸ் - 6,30,742

    தம்பிதுரை - அதிமுக - 2,50,084

    கருப்பையா - நாதக- 35,307

    தங்கவேல் - அமமுக - 26,474

    ஹரிஹரன் - மநீம - 13,261

    19:13 (IST)23 May 2019

    TN Election Results: திருவள்ளுர் தொகுதி இறுதிக் கட்ட நிலவரம்

    கே.ஜெயகுமார் - காங்கிரஸ் - 5,48,156

    டாக்டர் வேணுகோபால் - அதிமுக - 2,92,559

    லோகரங்கன் - மநீம - 50,808

    வெற்றிச்செல்வி - நாதக - 45,856

    பொன்.ராஜா - அமமுக - 25,969

    18:55 (IST)23 May 2019

    TN Election Result 2019: தஞ்சையில் திமுக வெற்றி

    தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 3,63,047 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். 

    திமுக கூட்டணி - 5,80,652

    அதிமுக கூட்டணி - 2,17,615

    18:46 (IST)23 May 2019

    தென்காசியில் திமுக வெற்றி

    தென்காசி திமுக வேட்பாளர் தனுஷ்.எம்.குமார் 1,16,130 வாக்குகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றிப் பெற்றுள்ளார். 

    18:33 (IST)23 May 2019

    TN Lok Sabha Election Result 2019: அரக்கோணம் இறுதிக்கட்ட நிலவரம்,

    அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி :

    சுற்று: 14

    எண்ணப்பட்ட மொத்த வாக்கு - 7,98,568

    ஏ கே மூர்த்தி பாமக : 2,31,819

    ஜெகத்ரட்சகன் திமுக : 4,55,621

    பார்த்திபன் அமமுக: 46,079

    ராஜேந்திரன் மநீம : 17,302

    பாவேந்தன் நாம் தமிழர்: 19,553

    நோட்டா : 8,410

    முன்னிலை : திமுக

    வாக்கு வித்தியாசம்: 2,23,802

    18:30 (IST)23 May 2019

    TN Election Results 2019: ஈரோட்டில் மதிமுக வெற்றி

    ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி, 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

    18:22 (IST)23 May 2019

    தலைவணக்கம் தமிழகமே - மு.க.ஸ்டாலின்

    18:10 (IST)23 May 2019

    ஆரணியில் காங்கிரஸ் வெற்றி

    ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் வெற்றிப் பெற்றுள்ளார்.

    மொத்தம் 6,13,390 வாக்குகள் பெற்று விஷ்ணு பிரசாத் வெற்றிப் பெற்றார்.

    17:59 (IST)23 May 2019

    TN Election Results 2019: இறுதிக் கட்டத்தில் மதுரை நிலவரம்...

    மதுரை மக்களவை தொகுதி வாக்குகள் நிலவரம்,

    சு.வெங்கடேசன் - சிபிஎம் - 3,61,959

    ராஜ்சத்யன் - அதிமுக - 2,40,373

    அழகர் - மநீம - 65,435

    டேவிட் அண்ணாதுரை - அமமுக - 68,037

    பாண்டியம்மாள் - நாதக - 34,214

    17:46 (IST)23 May 2019

    மோடி வெற்றி; இந்தியா தோல்வி

    செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, "இத் தேர்தலில் மோடி ஜெயித்துவிட்டார்; இந்தியா தோற்றுவிட்டது. ஒரு தவறான பிரச்சாரம் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    17:32 (IST)23 May 2019

    இடைத் தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் அதிர்ச்சி

    தமிழக மக்களவை தேர்தலில் திமுக பெரும் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. 37 இடங்களை திமுக கைப்பற்றும் என்பதையே முன்னிலைகள் உணர்த்துகின்றன. ஆனால், இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவால் பாதிக்கு பாதி இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது எனில், மக்கள் சட்டமன்ற தேர்தலில் திமுகவை புறக்கணித்து இருக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது.

    மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்கள், சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவின் ஆட்சி கனவிற்கு வேட்டு வைத்திருக்கிறார்கள்.

    17:20 (IST)23 May 2019

    TN Election Result 2019: மத்திய சென்னை நிலவரம்

    தயாநிதிமாறன் - திமுக - 4,24,164

    சாம்பால் - பாமக - 1,39,157

    கமீலா நாசர் - மநீம - 86,595

    கார்த்திகேயன் - நாதக - 28,971

    தெஹ்லான் பாகவி - எஸ்டிபிஐ - 22,047

    17:16 (IST)23 May 2019

    சிதம்பரம் திருமாவளவன் முன்னிலை

    பிற்பகலில் 5000 வாக்குகள் பின் தங்கியிருந்த திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் தற்போது மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.

    திருமாவளவன் - 257931

    சந்திரசேகர் - 255361

    விசிக முன்னிலை 2570 வாக்குகள்.

    17:13 (IST)23 May 2019

    சிதம்பரம் அதிமுக முன்னிலை

    சந்திரசேகர் - அதிமுக - 243199

    திருமாவளவன் -  விசிக -  238409

    16:49 (IST)23 May 2019

    Tamil Nadu Election Results: பெரும் வெற்றியை நோக்கி கனிமொழி

    தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழியை விட 2,39,392 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    திமுக - 3,82,992 வாக்குகள்

    பாஜக - 1,43,600 வாக்குகள்

    16:37 (IST)23 May 2019

    திராவிட இயக்கக் கோட்டை

    'தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதைப் பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி' - வைகோ

    16:33 (IST)23 May 2019

    ஆ.ராசா வெற்றி

    நீலகிரி மக்களவை தேர்தல் முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் ஆ.ராசா 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். 

    ஆ.ராசா - 5,46,496

    எம்.தியாகராஜன் - 3,41,136

    16:21 (IST)23 May 2019

    மீண்டும் மீண்டும் அடி வாங்கும் பாஜக

    'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' , 'மலர்ந்தே தீர வேண்டும்' என்று பாஜக மிக மிக உறுதியாக இருந்தது. ஆனால், 2019 மக்களவையில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது பாஜக. போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பாஜக தோல்வி முகத்தை சந்தித்து இருக்கிறது. 

    நாடு முழுவதும் பாஜக அலை வீசினாலும், தமிழகத்தில் ஏனோ அக்கட்சியால் தலைகீழ் நின்றும் தண்ணீர் குடிக்க முடியவில்லை. 

    16:10 (IST)23 May 2019

    தோல்வியை நோக்கி அன்புமணி?

    40,270 வாக்குகள் வித்தியாசத்தில் தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    15:57 (IST)23 May 2019

    TN Election Results: நாம் தமிழரை முந்திய மக்கள் நீதி மய்யம்

    தென் சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மய்யம் 46,918 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது!

    நாம் தமிழர் கட்சி - 23,762 வாக்குகள்

    மக்கள் நீதி மய்யம் - 70,680 வாக்குகள்

    15:48 (IST)23 May 2019

    இரண்டேகால் லட்சம் வித்தியாசம்...

    கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி 12வது சுற்றில் தேமுதிக வேட்பாளர் சுதீஷை விட 2,25,745 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    15:47 (IST)23 May 2019

    Tamil Nadu Election Results Live: திருப்பூர் தொகுதி நிலவரம்

    திருப்பூர் மக்களவை தொகுதியில் 11 சுற்றுகள் முடிவில்,

    சுப்புராயன் - சிபிஐ- 3,57,737

    எம்.எஸ்.எம்.அனந்தன் - அதிமுக - 2,82,668

    சந்திரகுமார் - மநீம - 43,791

    ஆர்.பி.செல்வம் - அமமுக - 29,071

    ஜெகநாதன் -நாதக - 28,644

    15:41 (IST)23 May 2019

    TN Election Results 2019: கோயம்புத்தூர் - 11 சுற்றுகள் முடிவில்....

    பி.ஆர்.நடராஜன் - சிபிஎம் - 2,66,423

    சி.பி.ராதாகிருஷணன் - பாஜக - 1,89,869

    மஹேந்திரன் - மநீம - 71,135

    கல்யாண சுந்தரம் - நாதக - 28,671

    அப்பாதுரை - அமமுக - 17,075

    15:34 (IST)23 May 2019

    திருநாவுக்கரசர் வெற்றி

    திருச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.திருநாவுக்கரசர் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

    திருநாவுக்கரசர் - 5,04,022

    இளங்கோவன்(dmdk) - 1,33,907

    15:20 (IST)23 May 2019

    TN Election Results 2019: 13வது சுற்றுக்கு பிறகு திருச்சி நிலவரம்....

    திருநாவுக்கராசர் - காங்கிரஸ் - 3,98,539

    வி.இளங்கோவன் - தேமுதிக- 1,06,653

    சாருபாலா தொண்டைமான் - அமமுக - 65,223

    வினோத் - நாதக - 40,986

    ஆனந்தராஜா - மநீம - 30,576

    15:15 (IST)23 May 2019

    திருமாவளவனுக்கு மீண்டும் பின்னடைவு

    சிதம்பரம் ( தனி) நாடாளுமன்றத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் 5,517 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு!

    15:01 (IST)23 May 2019

    Election Result 2019: சுற்று 7 முடிவில் சிவகங்கை நிலவரம்...

    கார்த்தி சிதம்பரம் - காங்கிரஸ் - 1,83,751

    ஹெச்.ராஜா - பாஜக - 76,914

    பாண்டி - அமமுக - 38,521

    சக்திபிரியா - நாதக - 21,187

    ஸ்நேகன் - மநீம - 8,531

    14:58 (IST)23 May 2019

    விருதுநகர் மக்களவை தொகுதி நிலவரம்...

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

    12 வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் 98,191 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை .

    14:48 (IST)23 May 2019

    Tamil Nadu Election Result 2019: பெரும் வெற்றியை நோக்கி ஆ.ராசா

    நீலகிரி தொகுதியில் ஆ.ராசா வெற்றி முகத்தில் இருக்கிறார். இன்னும் 2 சுற்றுகள் மீதமிருக்கும் நிலையில், எண்ணப்படும் வாக்குகளின் எண்ணிக்கை, ஆ.ராசாவின் வாக்கு வித்தியாசத்தை விட குறைவாகவே உள்ளது. 

    14:42 (IST)23 May 2019

    Anbumani Ramdoss Result: அன்புமணிக்கு பெரும் பின்னடைவு

    திமுக - 2,19,352

    பாமக - 2,00,143

    19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அன்புமணி பின்னடைவு

    14:27 (IST)23 May 2019

    Election Results 2019: மீண்டும் சறுக்கும் அன்புமணி

    தர்மபுரியில் அன்புமணிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், 37 மக்களவை தொகுதிகளில் திமுக மீண்டும் முன்னிலை பெறுகிறது. அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலை.

    13:51 (IST)23 May 2019

    Election Results Live: புதுச்சேரி மூன்றாவது சுற்று முடிவில்

    வைத்திலிங்கம்- காங்கிரஸ் - 1,64,591கே.நாராயணசாமி - என்.ஆர்.காங்கிரஸ் - 86,758சுப்ரமணியன் - மநீம - 13,770ஷர்மிளா பேகம் - நாதக - 7,756தமிழ்மாறன் - அமமுக - 1,371

    13:48 (IST)23 May 2019

    Election Results 2019: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

    மக்களவை தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    13:39 (IST)23 May 2019

    நாகப்பட்டினம் (தனி) சுற்று 4 நிலவரம்

    செல்வராஜ் - சிபிஐ - 1,10,967

    சரவணன் - அதிமுக - 64,645

    செங்கொடி - அமமுக - 15,100

    மாலதி - நாதக - 10,068

    குருவைய்யா - மநீம - 2,514

    13:31 (IST)23 May 2019

    TN Lok Sabha Result 2019: மயிலாடுதுறை - சுற்று 5 நிலவரம்

    ராமலிங்கம் - திமுக - 1,38,193

    ஆசைமணி - அதிமுக - 88,012

    செந்தமிழன் - அமமுக - 16,196

    சுபாஷினி - நாதக - 9,002

    ரிஃபாயுதீன் - மநீம - 2048

    13:28 (IST)23 May 2019

    சிதம்பரம் (தனி) தொகுதி - சுற்று 3

    பி.சந்திரசேகர் - அதிமுக - 1,45,617

    தொல்.திருமாவளவன் - விசிக - 1,40,153

    இளவரசன் - அமமுக - 17,204

    சிவஜோதி - நாதக - 12,486

    ரவி - மநீம - 3,210

    13:16 (IST)23 May 2019

    TN Election Results: தேனியில் ஓ.பி.எஸ். மகன் லீடிங்

    அதிமுக - 73,511

    காங்கிரஸ் - 59,800

    தங்க தமிழ்ச்செல்வன் - 22,109

    நாம் தமிழர் - 3,966

    13:11 (IST)23 May 2019

    Election Results: டெல்டாவில் ஆதிக்கம் செலுத்திய திமுக

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பின் போது, பிரதமர் மோடி வரவில்லை என்ற கோபம் மக்களிடையே மிகக் கடுமையாக இருப்பது அப்படியே வாக்கு தளத்தில் எதிரொலித்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, திமுகவுக்கு டெல்டாவில் மிகப்பெரிய வெற்றியையும் தேடித் தரவிருக்கிறது.

    13:00 (IST)23 May 2019

    BJP Lok Sabha Election Results: கோயம்புத்தூர் சுற்று 6 முடிவில்....

    பி.ஆர்.நடராஜன் - சிபிஎம் - 1,45,732

    சி.பி.ராதாகிருஷணன் - பாஜக - 1,05,008

    மஹேந்திரன் - மநீம - 37,935

    கல்யாண சுந்தரம் - நாதக - 15,734

    அப்பாதுரை - அமமுக - 10,545

    12:47 (IST)23 May 2019

    திருவண்ணாமலை தொகுதி சுற்று - 5

    அண்ணாதுரை - திமுக - 4,84,871

    அக்ரி க்ருஷ்ணமூர்த்தி - அதிமுக - 2,75,904

    ஞானசேகர் - அமமுக - 26,088

    ரமேஷ்பாபு - நாதக - 22,762

    ஆர்.அருள் - மநீம - 19896

    12:44 (IST)23 May 2019

    லீடிங் பெறும் நாம் தமிழர் கட்சி

    சீமானின் நாம் தமிழர் கட்சி, மக்களவை தொகுதிகளில் நிறைய இடங்களில் மூன்றாவது கட்சியாக முன்னிலையில் உள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது,

    12:40 (IST)23 May 2019

    TN Election Result 2019: மத்திய சென்னை நிலவரம் என்ன?

    தயாநிதிமாறன் - திமுக - 81,281

    சாம்பால் - பாமக - 30,680

    கமீலா நாசர் - மநீம - 15,439

    தெஹ்லான் பாகவி - எஸ்டிபிஐ - 6,365

    கார்த்திகேயன் - நாதக - 6,217

    12:34 (IST)23 May 2019

    தென்சென்னை - சுற்று 3

    தமிழச்சி தங்கபாண்டியன் - திமுக - 84,977

    ஜெயவர்தன் - அதிமுக - 49,543

    ரங்கராஜன் - மநீம - 24,411

    ஷெரின் -நாதக - 7,477

    இசக்கி சுப்பையா - அமமுக - 4,569

    12:14 (IST)23 May 2019

    தூத்துக்குடி - நான்காம் சுற்றின் முடிவில்...

    தூத்துக்குடி மக்களவை தொகுதி, நான்கு சுற்றின் முடிவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்,

    கனிமொழி - திமுக - 1,06,545

    தமிழிசை சவுந்தரராஜன் - பாஜக - 35,240

    எம்.புவனேஷ்வரன் - அமமுக - 19,687

    க்றிஸ்டண்டைன் ராஜசேகர் - நாதக - 7,719

    பொன் குமரன் - மநீம - 3,653

    12:12 (IST)23 May 2019

    TN election result 2019: அன்புமணிக்கு பின்னடைவு

    தர்மபுரி மக்களவை தொகுதியில் மீண்டும் அன்புமணி ராமதாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் முன்னிலை பெறுகிறார். 

    11:58 (IST)23 May 2019

    Tamil Nadu Election Results: ஸ்ரீபெரும்புதூர் நிலவரம்

    ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்,

    டி.ஆர்.பாலு - திமுக - 90,105

    வைத்தியலிங்கம் - பாமக - 29,061

    ஸ்ரீதர் - மநீம - 13,056

    மகேந்திரன் - நா.த - 9,838

    நாராயணன் - அமமுக - 4,806

    11:50 (IST)23 May 2019

    சி.பி.ஐ, சி.பி.எம் நிலைமை என்ன?

    சிபிஐ 

    திருப்பூர் - முன்னிலை

    நாகை - முன்னிலை

    சிபிஎம்

    கோவை - முன்னிலை

    மதுரை - முன்னிலை

    11:47 (IST)23 May 2019

    Election Results 2019: திருமாவுக்கு மீண்டும் சறுக்கல்

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து 2 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருந்த அதிமுக, இப்போது 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவளவன் 2000 வாக்குகள் பின் தங்கியுள்ளார். 

    11:38 (IST)23 May 2019

    நாகப்பட்டினம் (தனி)

    நாகை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்,

    செல்வராஜ் - சிபிஐ - 56,686

    சரவணன் - அதிமுக - 32,319

    செங்கொடி - அமமுக - 7,660

    மாலதி - நாதக - 4,599

    குருவைய்யா - மநீம - 1,026

    11:27 (IST)23 May 2019

    Election Results 2019: தஞ்சை நிலவரம்

    தஞ்சை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்,

    திமுக - 90, 112

    தமாகா - 33,932

    அமமுக - 14,853

    நாம் தமிழர் - 5,403

    மக்கள் நீதி மய்யம் - 1,971

    11:14 (IST)23 May 2019

    Decision 2019: பெரும்பான்மை பெரும் கனிமொழி, ஆ.ராசா

    திமுக வேட்பாளர்களில் தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசையை விட 41,000 வாக்குகள் வித்தியாசத்திலும், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா அதிமுகவின் எம்.தியாகராஜனை விட 38,000 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளனர்.

    11:07 (IST)23 May 2019

    Election Results 2019: கள்ளக்குறிச்சி நிலவரம்

    கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி

    கெளதமசிகாமணி (திமுக) - 93,817

    சுதீஷ்(தேமுதிக) - 43,627

    திமுக வேட்பாளர் கெளதமசிகாமணி தேமுதிக வேட்பாளரை விட 50,190 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    10:46 (IST)23 May 2019

    TN Election Result 2019: தர்மபுரி நிலவரம்

    பாமக - 4,552

    திமுக - 3,868

    அமமுக - 239

    நாம் தமிழர் - 119

    10:37 (IST)23 May 2019

    புதுச்சேரி நிலவரம்

    காங்கிரஸ் - 1,15,789

    என்.ஆர். காங்கிரஸ் - 62,643

    மக்கள் நீதி மய்யம் - 10,205

    நாம் தமிழர்  - 5,570

    அமமுக - 983

    10:29 (IST)23 May 2019

    TN Election Result 2019 Live: வட சென்னை நிலவரம்

    வடசென்னை

    கலாநிதி வீராசாமி -திமுக- 32,266 வாக்குகள்

    மோகன்ராஜ் தேமுதிக - 8,319

    மெளர்யா - மநீம - 6,519

    காளியம்மாள் நாதக - 3216

    சந்தான கிருஷ்ணன் - அமமுக - 1094

    10:19 (IST)23 May 2019

    மத்திய சென்னையில் திமுக

    மத்திய சென்னை தொகுதி வாக்குகள் நிலவரம்,

    திமுக - 29,755

    அதிமுக கூட்டணி - 9,700

    மத்திய சென்னை முக்கிய வேட்பாளர்கள் விபரம்

    திமுக – தயாநிதி மாறன்

    எஸ்.டி.பி.ஐ(அமமுக கூட்டணி) – தெஹ்லான் பாகவி

    மக்கள் நீதி மய்யம் – கமீலா நாசர்

    பாமக (அதிமுக கூட்டணி) – சாம் பால்

    10:15 (IST)23 May 2019

    Lok Sabha Tamil Nadu Results 2019: முதல்வர் தொகுதி நிலைமை?

    சேலத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

    திமுக - 27,348

    அதிமுக - 18,805

    மக்கள் நீதி மய்யம் - 2,423 

    10:08 (IST)23 May 2019

    பெரும் லீடிங்கில் கனிமொழி

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 30,424 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை....!

    தமிழிசை சௌந்தரராஜன் 20,000 வாக்குகள் பின்னடைவு...!

    10:03 (IST)23 May 2019

    TN Election Results 2019: ஆ.ராசா முன்னிலை

    நீலகிரி மக்களவை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.ராசா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

    திமுக - 27.529

    அதிமுக - 2,948

    09:54 (IST)23 May 2019

    அன்புமணி முன்னிலை

    அதிமுக கூட்டணி வேட்பாளர் பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

    முதல் சுற்று எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், 

    பாமக - 4552

    திமுக - 3868

    அமமுக - 239

    09:52 (IST)23 May 2019

    Election Result Live: ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி முன்னிலை

    ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் முஸ்லீக் லீக் கட்சியின் நவாஸ் கனி முன்னிலையில் உள்ளார்.

    09:50 (IST)23 May 2019

    Elections Result 2019 Live: பொன்னர் பின்னடைவு

    கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட 5705 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

    09:35 (IST)23 May 2019

    Election Results Live: திருமா மீண்டும் முன்னிலை

    சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை பெறுகிறார். 

    முதல் சுற்று தொடர்ந்து எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,

    திமுக கூட்டணி - 20,867

    அதிமுக - 20,686

    09:32 (IST)23 May 2019

    Election Results 2019: ஜோதிமணி முன்னிலை

    கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 

    கரூர் தொகுதி இதர வேட்பாளர்கள்

    அதிமுக – எம்.தம்பிதுரை

    அமமுக – என்.தங்கவேல்

    மக்கள் நீதி மய்யம் – ஹரிஹரன்

    09:29 (IST)23 May 2019

    கிருஷ்ணசாமி லீடிங்

    தென்காசி மக்களவைத் தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அவர் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

    09:26 (IST)23 May 2019

    Decision 2019: மதிமுக முன்னிலை

    ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை.

    09:21 (IST)23 May 2019

    Election Results 2019: 31 இடங்களில் திமுக முன்னிலை

    இதுவரை 31 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தேனியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார். 

    09:17 (IST)23 May 2019

    TN LS Election Results: ஓ.பி.எஸ். மகன் முன்னிலை

    தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் முன்னிலை பெற்றுள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பின்னடைவு அடைந்துள்ளார்.

    09:12 (IST)23 May 2019

    TN Lok Sabha Election Results: 4 தொகுதிகளில் அதிமுக

    முதல் சுற்று எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை திமுக 28 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    09:08 (IST)23 May 2019

    Election Results Live: திருமா பின்னடைவு

    சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் பின்னடைவு. அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை பெற்றுள்ளார்.

    09:02 (IST)23 May 2019

    Election Results 2019: திருப்பூரில் அதிமுக....

    திருப்பூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் முன்னிலை பெற்றுள்ளார்.

    08:58 (IST)23 May 2019

    TN LS Election Results 2019: பூண்டி கலைவாணன் முன்னிலை

    திருவாரூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பூண்டி கலைவாணன் முன்னிலையில் இருக்கிறார். 

    08:55 (IST)23 May 2019

    2019 Election Results 2019: ஆதிக்கம் செலுத்தும் திமுக

    நாமக்கல், ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, ஆரணி, அரக்கோணம், மதுரை, தென்காசி, மத்திய சென்னை, தென் சென்னை, தஞ்சை தொகுதிகளிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

    08:50 (IST)23 May 2019

    Tamil Nadu Election Result: தென் சென்னையில் திமுக முன்னிலை

    தென் சென்னை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் இருக்கிறார். இதுவரை 16 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.

    08:48 (IST)23 May 2019

    TN Election Result 2019: தஞ்சையில் திமுக முன்னிலை

    தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் முன்னிலையில் உள்ளார்.

    08:46 (IST)23 May 2019

    Election Results 2019: வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் பழுது

    கடலூர் மக்களவை தொகுதியில் இரண்டு வாக்கு எண்ணும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

    08:38 (IST)23 May 2019

    Election Result 2019: 9 இடங்களில் திமுக

    தமிழக மக்களவை தேர்தல் முடிவுகளில், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உட்பட 9 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதில், 2 இடங்கள் காங்கிரஸ் தொகுதியாகும்.

    08:26 (IST)23 May 2019

    TN Verdict 2019: முதல் சுற்று முடிவில்...

    நாமக்கல் மக்களவை தொகுதி முதல் சுற்று முடிவில்

    திமுக - 5407

    அதிமுக - 2766

    வாக்குகள் பெற்றுள்ளன.

    08:21 (IST)23 May 2019

    Verdict 2019: கனிமொழி முன்னிலை

    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜனும் அங்கு களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    08:18 (IST)23 May 2019

    Election Results 2019: காஞ்சியில் திமுக முன்னிலை

    நாமக்கலை தொடர்ந்து, காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது.

    08:13 (IST)23 May 2019

    Lok Sabha Election Results 2019: திமுக முன்னிலை

    தமிழக மக்களவை தேர்தலில், நாமக்கலில் திமுக முன்னிலை வகிக்கிறது.

    08:07 (IST)23 May 2019

    Election Results 2019 Live: வாக்கு எண்ணிக்கை பணியில் அதிகாரிகள் தீவிரம்

    வாக்குகள் எண்ணும் பணியில் 17 ஆயிரத்து 128 பேர் ஈடுபட்டுள்ளனர். அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் ஆகலாம்.

    08:02 (IST)23 May 2019

    Election Results Live: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    தமிழகம் உட்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.

    2019 Election Results Tamil Nadu Live: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் அமோக வெற்றி பெற்றிருக்கின்றன. தேனி தொகுதியைத் தவிர மொத்தமாக சுருட்டியிருக்கிறது திமுக அணி.
    General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment