Advertisment

News Highlights: வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு; கேமரா மூலமாக கண்காணிப்பு

Tamil Nadu Election News : சென்னை 59.40% வாக்குப்பதிவுடன், வாக்குப்பதிவில் பின் தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் முதன்மை வகிக்கிறது.

author-image
WebDesk
New Update
How to download Digital voter cards election commission of india -டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி?

Tamil News Updates: வாக்கு எண்ணும் மையங்களில் இவிஎம் எந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும், கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று

நடைபெற்றது. நேற்றைய வாக்குப்பதிவில், தமிழகம் முழுவதும் 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்கு எந்திரங்கள் அனைத்தும், அந்தந்த பகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகப்படியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகளும், அடுத்தப்படியாக நாமக்கல்லில் 77.91 வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் 59.40% வாக்குப்பதிவுடன், வாக்குப்பதிவில் பின் தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் முதன்மை வகிக்கிறது. அதை தொடர்ந்து, செங்கல்பட்டு, திருநெல்வேலி, ராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு வீதம் குறைந்துள்ளது.

வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவு நிறைவுற்ற பின்னரும் சில அசம்பாவித சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்றுள்ளன. குறிப்பாக, சென்னை வேளச்சேரி விவிபேட் கருவியை இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற நபரை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போடி தொகுதியில் வாக்களிப்பதற்காக வந்த, அதிமுக எம்பி ரவீந்திரநாத்தின் காரின் கண்ணாடியை சில மர்ம நபர்கள் உடைத்தது, சர்ச்சையானது.

பெரம்பலூரை அடுத்த வேப்பூரில், கள்ள ஓட்டுப் போட முயன்ற இளைஞரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்குச்சாவடி மையத்துக்கு அருகிலேயே வாக்குச் சேகரித்த கும்மிடிப்பூண்டி அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். சென்னை தண்டையார்ப்பேட்டையில், பதட்டமான வாக்குச்சாவடியாக கருதப்பட்ட இடத்தில் காவல்துறை பாதுகாப்பு இல்லாத சூழலில், திமுக, அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றமாக காணப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:19 (IST) 07 Apr 2021
    வெற்றியை அறிவிக்கும் நாள்வரை பொறுப்பும் கடமையும் இருக்கிறது - மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நன்றிக்குரியோரே... நல் உள்ளங்களே சட்டமன்றத் தேர்தல் களத்தின் தன்மை உணர்ந்து மிகுந்த பொறுப்புடனும் ஒருங்கிணைப்புடனும் அய்ராமல் களப்பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தோழர்கள் அனைவருக்கும் நன்றி வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாள்வரை,

    நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.



  • 21:07 (IST) 07 Apr 2021
    பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு

    தேர்தல் விதிகளை மீறி பாஜக கொடி பொருத்திய காரில் வாக்களிக்கச் சென்ற ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



  • 21:04 (IST) 07 Apr 2021
    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாருக்கு பதிலளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



  • 19:36 (IST) 07 Apr 2021
    மாணவர்கள் தேர்வுக்கு தயாராவோம் - பிரதமர் மோடி பேச்சு

    பிரதமர் மோடி: “கொரோனாவால் மாணவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை எனவே, தற்போது உங்களை வீடியோ மூலம் சந்திக்கிறேன். தேர்வு மட்டுமின்றி, தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பேசுவோம். மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல... படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உண்மையான திறமை வெளிவருவதில்லை.” என்று கூறினார்.

    தேர்வுக்கு தயாராகும் போது ஏற்படும் பயத்தில் இருந்து விடுபடுவது எப்படி? என்ற மாணவர்களின் கேள்விக்கு தேர்வு என்பது மட்டும் வாழ்க்கை அல்ல. அளவுக்கு அதிகமாக யோசிப்பதால் தான் பயம் வருகிறது. மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உண்மையான திறமை வெளிவருவதில்லை.” என்று கூறினார்.



  • 19:32 (IST) 07 Apr 2021
    ஏப்ரல் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இலவச தரிசனம் ரத்து

    ஏப்ரல் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திருப்பதி கோயில் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 18:48 (IST) 07 Apr 2021
    கொரோனா தடுப்பூசி முகாம்களை பணியிடங்களில் நடத்த மத்திய அரசு அனுமதி

    அரசு, தனியார் அலுவலகங்களில் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் 100 பேருக்கு மேல் இருந்தால், தடுப்பூசி முகாம்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஏப்ரல் 11ஆம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.



  • 17:35 (IST) 07 Apr 2021
    சுஷ்மா, ஜெட்லி குறித்து அவதூறாகப் பேசவில்லை; தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி விளக்கம்

    பிரதமர் மோடியின் கொடுத்த அழுத்தத்தாலும் டார்ச்சராலும் பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி இருவரும் இறந்ததாக, தாரபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியதாக சர்ச்சையானது. இதற்கு உடனடியாக, சுஷ்மா மற்றும் ஜெட்லியின் மகள்கள் மறுப்பு தெரிவித்தனர்.

    மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா, ஜெட்லியின் மரணம் குறித்து உதயநிதி தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து உதயநிதியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் நோட்டீஸ் அளித்திருந்தது.

    இந்த நிலையில், தாராபுரம் பிரசாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசவில்லை என்று உதயநிதி தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.



  • 17:27 (IST) 07 Apr 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3986 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 17 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து 1824 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.



  • 16:53 (IST) 07 Apr 2021
    வாக்கு எண்ணும் மையங்களில் முழு பாதுகாப்பு - சென்னை காவல் ஆணையர்

    தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும், வாக்கு எண்ணும் மையங்களில் முழு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப் படுவதாகவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.



  • 16:34 (IST) 07 Apr 2021
    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

    தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.



  • 16:23 (IST) 07 Apr 2021
    தேச துரோக வழக்கில் அஸ்ஸாம் எழுத்தாளர் கைது

    சத்தீஸ்கரில் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாதுகாப்புப் படையினர் குறித்து சர்ச்சை கருத்துக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக அஸ்ஸாமின் 48 வயது எழுத்தாளர் சீகா சர்மா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 16:05 (IST) 07 Apr 2021
    முழு ஊரடங்கு தகவல் வதந்தியே - சுகாதாரத்துறை விளக்கம்

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற தகவல் வதந்திதான் என சுகாதாரத்துறை என தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஊரடங்கு பற்றி பரவும் தகவல்கள் பொய் என்றும் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.



  • 16:05 (IST) 07 Apr 2021
    முழு ஊரடங்கு தகவல் வதந்தியே - சுகாதாரத்துறை விளக்கம்

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற தகவல் வதந்திதான் என சுகாதாரத்துறை என தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஊரடங்கு பற்றி பரவும் தகவல்கள் பொய் என்றும் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.



  • 15:41 (IST) 07 Apr 2021
    "தேர்வுக்கு தயாராவோம்'' நிகழ்ச்சிக்கு பிரதமர் அழைப்பு

    "தேர்வுக்கு தயாராவோம்'' நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். இந்த கலந்துரையாடல் மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சியை காண பிரதமர் மோடி அழைப்புவிடுத்துள்ளார்.



  • 15:32 (IST) 07 Apr 2021
    கொரோனாவிலிருந்து மீண்டார் கனிமொழி எம்.பி

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி எம்.பி கனிமொழி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். வீட்டில் அடுத்த 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் உள்ளார். நேற்று இவர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்களித்திருந்தார்.



  • 15:15 (IST) 07 Apr 2021
    அமைச்சர் பென்ஜமின் மீது வழக்கு பதிவு

    மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பென்ஜமின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை அவதூறாக பேசியதுடன் அமைதியை சீர்குலைக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறை நடவடிக்கை.



  • 15:05 (IST) 07 Apr 2021
    பஞ்சாபில் ஏப்ரல் 30 வரை இரவு ஊரடங்கு

    நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக மாநில அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.



  • 14:42 (IST) 07 Apr 2021
    அரியர் தேர்வு ரத்த ஏற்க இயலாது- உயர்நீதிமன்றம்

    அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என பல்கலை. வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.



  • 14:14 (IST) 07 Apr 2021
    சரத்குமாரின் ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு

    செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாரின் ஓராண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக சரத்குமார், பங்குதாரர் லிஸ்டீன் ஸ்டீபன் கூறியதால் கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



  • 14:11 (IST) 07 Apr 2021
    நடிகை ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

    செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற ராதிகா ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது



  • 14:09 (IST) 07 Apr 2021
    நடிகை ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

    செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற ராதிகா ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது



  • 14:06 (IST) 07 Apr 2021
    கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர்

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக செல்வகுமார் நியமனம் செய்யப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.



  • 14:03 (IST) 07 Apr 2021
    கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர்

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக செல்வகுமார் நியமனம் செய்யப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.



  • 13:26 (IST) 07 Apr 2021
    தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள்

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அதிமுக முகவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.



  • 12:45 (IST) 07 Apr 2021
    சரத்குமார் - ராதிகாவுக்கு சிறை தண்டனை

    காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



  • 12:40 (IST) 07 Apr 2021
    புதுச்சேரியில் 81.70% வாக்குப்பதிவு

    புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் 81.70% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.28% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக ராஜ்பவன் தொகுதியில் 72.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.



  • 12:39 (IST) 07 Apr 2021
    தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு

    தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதிக பட்சமாக தருமபுரி மாவட்டம் பலக்கோட்டில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளது.



  • 12:03 (IST) 07 Apr 2021
    வில்லிவாக்கத்தில் குறைந்த வாக்குப்பதிவு விகிதம்!

    தமிழகத்திலேயே, குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகளே பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, பாலக்கோடு தொகுதியில் 88.33% வாக்குகள் பதிவாகியுள்ளன.



  • 12:01 (IST) 07 Apr 2021
    முதல்வர் தொகுதி வாக்குப்பதிவு நிலவரம்!

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன.



  • 12:00 (IST) 07 Apr 2021
    ஸ்டாலின் தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம்!

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52% வாக்குகள் பதிவாகியுள்ளன.



  • 11:58 (IST) 07 Apr 2021
    ஐபிஎல் வீரருக்கு கொரோனா!

    ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பெங்களூரு அணியைச் சேர்ந்த வீரர் டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 11:56 (IST) 07 Apr 2021
    நாட்டின் பொருளாதார வளர்ச்சி; ரிசர்வ் வங்கி கணிப்பு!

    2021-2022 -ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.5% ஆக இருக்கும் என, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.



  • 10:38 (IST) 07 Apr 2021
    வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்ட மநீம தலைவர் கமல்!

    சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கோவை, அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களையும், பாதுகாப்பு வசதிகளையும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் பார்வையிட்டார்.



  • 10:29 (IST) 07 Apr 2021
    நடத்தை விதிமுறைகளை மீறியதாக எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!

    அதிமுக கொடி பொருந்திய காரில் வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 10:20 (IST) 07 Apr 2021
    கொரோனா தொற்று; புதிய உச்சத்தால் மிரளும் இந்தியா

    கொரோனா வைரஸின் இரண்டாம் அலை, இந்தியாவில் உச்சமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரு நாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது, நம்மை மிரளச் செய்துள்ளது. இதுவரை இல்லாத எண்ணிக்கையாக, 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 09:29 (IST) 07 Apr 2021
    கொரோனா தடுப்பூசி, அலர்ஜி; பார்த்தீபன் கவலையுடன் ட்வீட்!

    தடுப்பூசியின் இரண்டாம் தவணையை போட்டுக் கொண்ட இயக்குனர் பார்த்தீபனுக்கு , அலர்ஜியினால் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது. முன்னரே அலர்ஜி பிரச்னைகள் இருந்ததால் இவ்வாறு ஏற்பட்டிருக்கிறது என அவர் ட்விட் செய்துள்ளார். இருப்பினும், கொரோனா தடுப்பூசியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளதோட்ய், இந்த சம்பவம் நேற்றாகி போனதே, என வாக்களிக்க முடியாத வருத்தத்தையும் வெளிபடுத்தியுள்ளார்.



  • 09:05 (IST) 07 Apr 2021
    தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்!

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி, கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • 09:00 (IST) 07 Apr 2021
    உலக சுகாதார தினம்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

    உலக சுகாதார தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை அடுத்து, இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் கையாள வேண்டும் என மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 08:49 (IST) 07 Apr 2021
    கொரோனா பரவல்; அடுத்த நான்கு வாரங்கள் முக்கியமானது!

    கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதி தீவிரமாக இந்தியாவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தொற்றை கட்டுப்படுத்த, அடுத்து வரும் நான்கு வாரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நிதி ஆயோக் உறுப்பினர் பி.கே.பால் தெரிவித்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



  • 08:41 (IST) 07 Apr 2021
    தேர்தல் விதிமீறல்; நடிகை ஸ்ருதிஹாசன் மீது புகார்!

    வாக்குச்சாவடிக்குள், வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர, மற்றவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், நடிகை ஸ்ருதிஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நுழைந்து பார்வையிட்டார். அனுமதிகப்பட்டவர்களை தவிர, ஸ்ருதிஹாசன் அத்துமீறி உள்நுழைந்ததாக பாஜக சார்பில் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



Tamilnadu Election 2021 Tn Assembly Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment