Advertisment

வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள பிப்ரவரி 23,24 தேதிகளில் சிறப்பு முகாம்

இந்த முகாம் காலை 09:30 மணிக்கு துவங்கி மாலை 05:30 மணி வரை நடைபெறும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha election nomination begins tomorrow

Lok Sabha election nomination begins tomorrow

சிறப்பு முகாம் : பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  பொதுத்தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மற்றும் இதர திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

Advertisment

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்திருக்கும் வாக்குசாவடிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் இதற்கான முகாம்கள் நடைபெற உள்ளது.

எந்தெந்த படிவங்கள் எதற்காக சமர்பிக்க வேண்டும் ?

இந்த முகாம் காலை 09:30 மணிக்கு துவங்கி மாலை 05:30 மணி வரை நடைபெறும். தங்களின் பெயரை சேர்ப்பதற்கான படிவம் 6யும், நீக்குவதற்கான படிவம் 7யும், திருத்தங்களுக்கு படிவம் 8யும், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8ஏவையும் பூர்த்தி செய்து தருவதற்கு இந்த முகாமை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 31ம் தேதி பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment