Advertisment

விஜயகாந்துக்கு திடீர் மவுசு: மு.க.ஸ்டாலின் சந்திப்பால் அதிரடி திருப்பம்

DMDK Chief Vijayakanth In Alliance Politics: தேமுதிக மறுபடியும் கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijayakanth, mk stalin, விஜயகாந்த், மு.க.ஸ்டாலின்

vijayakanth, mk stalin, விஜயகாந்த், மு.க.ஸ்டாலின்

Vijayakanth Alliance with AIADMK Or DMK: விஜயகாந்துக்கு தமிழக அரசியலில் மீண்டும் மவுசு எகிறியிருக்கிறது. இரு பெரிய கட்சிகளும் அவரை தங்கள் கூட்டணிக்கு இழுக்க முயற்சித்து வந்த நிலையில், மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று சந்தித்தது புதிய திருப்பத்தை உருவாக்கியிருக்கிறது.

Advertisment

விஜயகாந்த், தமிழக அரசியலில் 3-வது சக்தியாக உருவெடுத்தார். 2006 தேர்தலில் தனியாக களம் கண்ட அவரது தேமுதிக 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, மிரள வைத்தது.

Read More: ‘நல்ல மனிதர், ஆரோக்கியமா இருக்கணும்’ விஜயகாந்தை சந்தித்து உருகிய ரஜினிகாந்த்

பின்னர் 2011 தேர்தலில் அதிமுக அணியில் போட்டியிட்ட விஜயகாந்த், 2014 மற்றும் 2016 தேர்தல்களில் தனி அணி அமைத்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதற்கிடையே விஜயகாந்தின் உடல் நலம் பழைய மாதிரி வேகமான சுற்றுப்பயணங்களுக்கும், பிரசாரத்திற்கும் உகந்ததாக இல்லை. எனவே ஆரம்பத்தில் அவரை எந்தக் கட்சியும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்தை சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். அதன்பிறகு அதிமுக தரப்பில் மட்டும் வெவ்வேறு நபர்கள் மறைமுகமாக தேமுதிக.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வந்தனர்.

விஜயகாந்த் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பதாகவும், அதிமுக அதிகபட்சமாக 5 தொகுதிகள் தரத் தயாரானதாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று (பிப்ரவரி 21) காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென விஜயகாந்தை சந்தித்தார். அப்போது உடல்நலம் விசாரித்ததாகவும், நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் திருநாவுக்கரசர் கூறினார்.

vijayakanth health, mk stalin, dmdk alliance, dmdk news, விஜயகாந்த்

இன்று பகலில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சந்தித்தார். விஜயகாந்தை உடல் நலம் குறித்து விசாரிக்க சந்தித்ததாகவும், இதில் துளிகூட அரசியல் கிடையாது என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

Read More: திமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் குழுவுடன் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். விஜயகாந்திற்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக சுமூக உறவு இல்லை. கருணாநிதி மறைவையொட்டி வெளிநாட்டில் இருந்த விஜயகாந்த், கதறி அழுத வீடியோ வெளியானது. சென்னை திரும்பியதும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த், அப்போதும் மு.க.ஸ்டாலினை சந்திக்கவில்லை.

இந்தச் சூழலில் விஜயகாந்தை இழுக்க அதிமுக முயன்றுகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஸ்டாலின் நேரில் சென்று விஜயகாந்தை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. சுமார் 20 நிமிடங்கள் விஜயகாந்துடன் பேசி, உடல்நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்கள், ‘உங்கள் அணிக்கு விஜயகாந்த் வந்தால் வரவேற்பீர்களா?’ என ஸ்டாலினிடம் கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ‘உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துகள்’ என்றார். மேலும் வயதில் என்னைவிட அதிகமான விஜயகாந்த், என்னை மரியாதையாக ‘அண்ணன், அண்ணன்’ என அழைத்தார்’ என குறிப்பிட்டார் ஸ்டாலின்.

vijayakanth health, mk stalin, dmdk alliance, dmdk news, விஜயகாந்த்

பாமக.வை இழுப்பதில் திமுக சோடை போனதாக ஒரு விமர்சனம் இருக்கிறது. அதை சரிகட்ட விஜயகாந்தை இழுக்கும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. திமுக இப்படியொரு முயற்சியில் இறங்கியதை தொடர்ந்து, அதிமுக தரப்பில் தேமுதிக.வுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் தேமுதிக.வுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கிக் கொடுக்க வற்புறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக மறுபடியும் கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

 

Mk Stalin Aiadmk Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment