Advertisment

2031 வரை வாய்ப்பில்லை: சசிகலா எதிர்கொள்ளும் தேர்தல் சிக்கல்

சசிகலா மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் 2031 சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் ஏன்?

author-image
WebDesk
New Update
sasikala, tamil nadu election, விகே சசிகலா, சசிகலா, தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல் 2021, tamil nadu election 2021, tamil nadu politcs, ammk, aiadmk, dmk, mk stalin, அதிமுக, ஜெயலலிதா, டிடிவி தினகரன், திமுக, அமமுக, jayalalithaa legacy, j jayalalithaa confidante sasikala, tamil nadu allaince news, dhinakaran

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்று கூறும் சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-க்கும் இடையேயான மோதலைக் காண தமிழகம் தயாராகி வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா, அவர் பொதுச்செயலாளராக இருந்த அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசமையை எதிர்ப்பதன் மூலம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, 2016-ல் ஜெயலலிதாவின் (அம்மாவின்) மறைவைத் தொடர்ந்து கட்சியையும் ஆட்சியைக் கைப்பற்றத் தொடங்கினார். சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தமிழக முதல்வராக ஆவதறு முயன்றார். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததால் அவருடைய முயற்சி முறிந்துபோனது. இதையடுத்து, அவர் 2021 ஜனவரி வரை 4 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சசிகலா சிறையில் இருந்தபோது, ​​ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது. இதைத் தொடர்ந்து, சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு புதிய கட்சியை நிறுவி சசிகலாவை அமமுகவின் பொதுச் செயலாளராக நியமித்தார். இப்போது சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதால் இரண்டு விஷயங்கள் நடக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.அமமுக - அதிமுக இடையே ஒரு கூட்டணி அல்லது சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தங்களுடைய முன்னாள் கட்சிக்கு திரும்புவது ஆகும்.

இருப்பினும், அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனுக்கு இடமில்லை என்பதை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகதான் சசிகலாவுடன் எந்தவித இணக்கத்துக்கும் எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வரும் துணை முதல்வரும் கட்சியில் தங்களுடைய அதிகாரம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். ஏனெனில் சசிகலா இன்னும் ஆறு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. 2017 ஆம் ஆண்டில் தண்டனை பெற்ற பின்னர் 10 ஆண்டுகளாக அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. சசிகலா தேர்தலில் போட்டியிட விரும்பினால், அவர் 2027 வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்குள் அவருக்கு 72 வயது ஆகியிருக்கும். அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2026ல் வர உள்ளது. அதற்கு ஒரு ஆண்டு கழித்து 2027ம் ஆண்டில்தான் அவருக்கு கட்டுப்பாடு நீக்கப்படும். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் 2031 சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

அதிமுக தேர்வாக இல்லாத நிலையில், சசிகலா இப்போது அமமுகவின் தலைவராக இருப்பார். அமமுக இதுவரை தனது வேட்பாளர்களை 2019 மக்களவைத் தேர்தலில் மட்டும் நிறுத்தியுள்ளது. போட்டியிட்ட 37 இடங்களில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், அக்கட்சி 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அந்த வாக்குகள் சிதறவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலில் அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். கூடுதலாக வாக்குகளை ஒருங்கிணைந்தாலும்கூட அது அமமுக ஆட்சிக்கு வருவதற்கு போதுமானதாக இருக்காது. ஏனெனில் 2019 மக்களவைத் தேர்தலில், அமமுகவின் 8 சதவீத வாக்குககளுன் ஒப்பிட்டால் திமுகவுக்கு 32.76 சதவீதமும், அதிமுகவுக்கு 18.48 சதவீதமும், காங்கிரஸ் கட்சிக்கு 12.76 சதவீதமும் பெற்றன.

சசிகலா இல்லாத நிலையில் அமமுகவின் பொறுப்பாளரான டிடிவி தினகரன் கணிசமான புகழ் பெற்றுள்ளார். அவர், டிசம்பர் 2017ல் முன்னதாக ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் தேர்தல் அலை ஆளும் அதிமுக-பாஜகவுக்கு எதிரானது என்றாலும், அதிமுக அரசு மு.க.ஸ்டாலினின் திமுக, டிடிவி தினகரனின் அமமுக மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுடன் பல முனைகளில் போராடுவதற்கு தயாராக உள்ளது. அறிக்கைகள் ஸ்டாலின் மேல் விளிம்பில் இருப்பதாகவும், தேர்தலை பரந்த வித்தியாசத்தில் வீழ்த்தக்கூடும் என்றும் தெரிவிக்கின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக 234 தொகுதியில் போட்டியிட்டு 136 இடங்களில் 40.88 சதவீத வாக்குகளுடன் வென்றது. திமுகவுக்கு 178 இடங்களில் 89 இடங்கள் கிடைத்தது. திமுக 31 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட 41 இடங்களில் 8 இடங்களில் வென்றது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Ops Eps Aiadmk Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment