இனி திரையரங்குகளில் செல்ஃபோன் வீடியோ எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திரைத்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

திரையரங்குகளில் திருட்டுத் தனமாக செல் ஃபோனில் படம் எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

திருட்டுத் தனமாக திரைப்படங்களை இணையத்தில் உலவ விடுவதும், திரையரங்குகளில் செல்ஃபோனில் படம் பிடித்து மற்றவர்களுக்கு பகிர்வதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இதனை எதிர்த்து திரைத்துறையினர் குரல் கொடுத்து வரும் நிலையில், ஒளிப்பதிவு சட்டம் 1952-ன் படி திரையரங்கில் செல்ஃபோன் மூலம் வீடியோ எடுப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் மசோதாவுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் திருட்டு வி.சி.டி போன்ற திரைத்துறையினருக்கு எதிரான குற்றங்கள் படிப்படியாகக் குறையும் எனத் தெரிகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திரைத்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக நடிகர் விஷால், “மத்திய அரசின் இந்த சட்டம் மகிழ்ச்சி தருகிறது. விரைவில் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, திருட்டு வி.சி.டி பிரச்னை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என நம்புகிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: %e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf %e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d %e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d

Next Story
திடீரென கிளம்பிய வதந்தி… முற்றுப்புள்ளி வைத்த ஜான்வி கபூர்jhanvi kapoor, ஜான்வி கபூர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com