சுடிதார், சல்வார் என்று எத்தனை உடைகள் வந்தாலும் எதுவும் நம்ம ஊர் பாவாடை தாவணிக்கு நிகராகாது இதனை ரகுல்ப்ரீத் சிங்குக்கு உணர்த்தியுள்ளார் நாகார்ஜுனா.
நாகார்ஜுனா தயாரிப்பில் அவரது மகன் நாகசைதன்யா நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘ராரண்டோய் வேதுகா சுதஹாம்’. இந்த படத்தில்பாவாடை தாவணியில் வரும் கிராமத்து பெண் வேடம் ஏற்றிருந்தார் ரகுல். பாவாடை தாவணியில் ரகுல் அழகாக இருப்பதை பார்த்த நாகார்ஜுனா படத்தையும் கதாபாத்திரத்தையும் புரமோட் செய்வதற்காக படத்தில் அணிந்த அதே காஸ்டியூமில் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்ற ஐடியா கொடுத்தாராம்.
இதனாலேயே இந்த படத்தின் புரமோஷன்களில் தாவணி, கைநிறைய வளையல், தலைநிறைய மல்லிகைப்பூ என அசல் கிராமத்து பெண்போல் பங்கேற்றார்.
சமந்தா ஜாக்கிரதை!