கல்லூரிக்கே செல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிபார்க்க வைத்த 11 பிரபலங்கள்

பல உதாரங்கள் உள்ளன. அப்படி, பட்டப்படிப்பை முடிக்காமல், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சில பிரபலங்கள் இதோ:

இந்தியாவை பொறுத்தவரை பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறுவார்களா? இல்லையா என்பதை அவர்களின் ரேங்க் கார்டை பார்த்துதான் கணிப்பார்கள். ஆனால், பள்ளிப்படிப்போ, கல்லூரிப் படிப்போ நிச்சயம் ஒருவரது முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் கருவி இல்லை என்பதற்கு பல உதாரங்கள் உள்ளன. அப்படி, பட்டப்படிப்பை முடிக்காமல், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சில பிரபலங்கள் இதோ:

1. தீபிகா படுகோனே:

பாலிவுட் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையே அதிசயிக்க வைக்கும் நடிகை தீபிகா படுகோனே, கல்லூரிக்குள் நுழையாதவர் என்பது உங்களுக்கு தெரியுமா? சிறு வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், அவர் படிப்பை தொடரவில்லை. அவருடைய பெற்றோருக்கு இதில் வருத்தம்தான் என்றாலும், தீபிகாவின் லட்சியம் சினிமா என்பதால் அவரது போக்கிலேயே விட்டுவிட்டார்கள். அவருடைய முடிவின்படி பெற்றோர் விட்டதால்தான், நமக்கு தீபிகா கிடைத்திருக்கிறார்.

2. கபில் தேவ்:

கபில் தேவ், கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிரிக்கெட்டில் கால் பதிக்காவிட்டால், 1983-ஆம் ஆண்டு இந்திய உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்றிருக்காது.

3. ஆமிர் கான்:

குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆமிர் கான், கல்லூரி படிப்புக்குள் செல்லாமல் முழுவதுமாக திரையுலகம் பக்கம் திரும்பினார். தனது உறவினர் நசீர் ஹூசைனுடன் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றினார். இப்போது, அவர் நடிகராக எந்த எல்லையை தொட்டிருக்கிறார் என்பதை சொல்ல தேவையில்லை.

4. சச்சின் டெண்டுல்கர்:

‘கிரிக்கெட்டின் கடவுள்’ என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார் என்பது பெரும்பாலானோர் அறிந்த செய்தியே.

5. மேரி கோம்:

ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மேரிகோம், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவருடைய வெற்றிகளுக்கு, படிப்பு எந்தவிதத்திலும் தடையாக இல்லை.

6. ஐஸ்வர்யா ராய்:

உலக அழகி ஐஸ்வர்யா ராய், கல்லூரி படிப்பெல்லாம் முடிக்கவில்லை. ஆனால், பாலிவுட்டின் டாப் நாயகிகளில் என்றைக்குமே இவர்தான் டாப்.

7. சல்மான் கான்:

பல கோடி மக்களை ரசிகர்களாக கொண்டுள்ள சல்மான் கான், கல்லூரிக்கே சென்றதில்லை.

8. கௌதம் அதானி:

இந்தியாவில், எந்த ஆட்சி அமைந்தாலும் இவருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அப்படிப்பட்டவர், பி.காம் படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

9. பிரியங்கா சோப்ரா:

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு பறந்த பிரியங்கா சோப்ரா, கல்லூரி படிப்பை முடிக்காதவர். இந்தியா மற்றும் அமெரிக்காவில் பள்ளி படிப்பை முடித்தார். கிரிமினல் சைக்காலஜிஸ்ட்டாக வேண்டும் என்ற ஆசை கொண்ட பிரியங்கா, மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், மாடலிங் வேலைகள் நிறைய வந்ததால், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

10. கரீஷ்மா கபூர்:

90-களில் பாலிவுட்டில் கனவுக்கன்னியாக விளங்கிய கரீஷ்மா கபூர், ஆறாம் வகுப்பை முழுமையாக முடிக்காதவர். அவர் முதல் படம் நடிக்கும்போது கரீஷ்மாவுக்கு வயது 16.

11. அக்‌ஷய் குமார்:

கல்வி தனக்கு முதன்மையானது அல்ல என பல நேர்காணலில் கூறியுள்ள அக்‌ஷய் குமார், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close