Advertisment

வசூலில் புதிய உச்சத்தை தொட்ட 2.0... பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக ரஜினிகாந்த்!

Rajinikanth Akshay Kumar's 2.0 Movie Box Office Collection: முதல் நாள் 3000 முதல் 3500 காட்சிகள்  வெளியாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2.0 Box Office Collection

2.0 Box Office Collection

2.0 Box Office Collection : ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் வெளியான ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் வசூல் சாதனையில் புதியதொரு சாதனையை செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

Advertisment

Rajinikanth's 2.0 Box Office Collection : பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக ரஜினிகாந்த!

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெயரை பெற்றுள்ள 2.0 படம்  பெரும் எதிர்பார்ப்புக்கு  இடையில் இன்று வெளியாகியது. ஷங்கர் தெரிவித்துள்ளார். படத்தின் பொருட்செலவு சுமார் ரூ.500 கோடியைத் தாண்டியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே, விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமம் என ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியுள்ளது.

இந்நிலையில் முதல் நாள் வசூலில் 2.0 படம் புதிய சாதனை படைக்குமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது. இது பாகுபலி 2 படத்தின் 9,000 திரையரங்குகள் வெளியீட்டு சாதனையை முறியடித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 32,000 முதல் 33,000 ஷோக்கள் திரையிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று பல்வேறு நகரங்களில் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கே ஒளிபரப்பப் பட்டுள்ளது. ஆகையால் இந்தியாவில் முதல் நாள் வசூல் ரூ.70 கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் கணக்கிடுகையில் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமிர் கானின் தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் முதல் நாளில் ரூ.50.75 கோடி வசூலித்ததே சாதனையாக உள்ளது.

2.0 படத்தின் வசூல் தமிழகத்தில் எப்படி இருக்கும் என தியேட்டர் வட்டாரத்தில் விசாரித்த போது, ”வழக்கம் போல் ரஜினி படத்திற்கு  கிடைக்கும் வரவேற்பு 20.0 படத்திற்கு கிடைக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 2 .0 படம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதால் முதல் நாள் 3000 முதல் 3500 காட்சிகள்  வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான டிக்கெட்டுகள் குறைந்த பட்சம் 250 முதல் 2000 வரை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

Rajini Kanth Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment