ரஜினிகாந்த் ‘2.0’ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் டீஸர் எப்போது வெளியாக இருக்கிறது என்ற விவரம் கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் டீஸர் எப்போது வெளியாக இருக்கிறது என்ற விவரம் கிடைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் முடியாததால், ஏப்ரல் மாதத்துக்கு ரிலீஸைத் தள்ளிவைத்துவிட்டனர்.

இந்நிலையில், ‘2.0’ படத்தின் டீஸர் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். சமீபத்தில் குடியரசு தின வாழ்த்துசொன்ன ஷங்கர், விரைவில் டீஸர் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் டீஸர் ரிலீஸாகும் எனத் தெரியவந்துள்ளது.

‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்திய லைகா நிறுவனம், டீஸர் ரிலீஸை ஹைதராபாத்தில் நடத்த இருக்கிறது. இந்த விழாவுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, மலையாள முன்னணி நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லாலை அழைக்க லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close