தமிழ் சினிமா என்றாலே  திரைப்படங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக திரைப்பட வெளியீடுகள் குறைந்தே  காணப்பட்டது. இருந்த போதிலும் ஒடிடி தளங்களின் மூலம் நிறைய  திரைப்படங்கள் வெளியானது. அதிலும் சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
பொதுவாகவே தமிழ் திரைப்படங்கள் சமூகத்தில் நடக்கும் பிளவுகள் மற்றும் பிரச்சனைகள் பற்றியே பெரிதும் பேசி வருகின்றன. அதே போல,  இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களும் முதலாளித்துவத்தை எதிர்த்தும், அரசு ஊடகங்களை எதிர்த்தும், சமூகத்தில் நடக்கும் சாதி ஆணவக் கொலைகளை சுட்டிக் காட்டும் கதைகளுடன் வெளியாயின.