70 வயதில் வந்து ஒன்னும் பண்ணமுடியாது; விஜய் தந்தை எஸ்.ஏ.சி

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “இளைஞர் சமுதாயத்திற்கு உள்ளேயே ஒரு மாபெரும் புரட்சி வர வேண்டும். அந்த இளைஞர்களுக்குள் ஒரு புரட்சிகர காந்தி உருவாக்க வேண்டும். அது 70, 80 வயதில் வந்துலாம் ஒன்னும் செய்ய முடியாது” என்றார்.

முன்னதாக, நடிகர் விஜய் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, “நாடு வல்லரசு ஆவதை விட, விவசாயிகளுக்கு நல்லரசாக இருக்க வேண்டியதே முக்கியம்” என்றார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 22-ஆம் தேதி விஜய்யின் 43-வது பிறந்தநாளின் போது, அட்லீ இயக்கத்தில் அவர் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், ‘இளையதளபதி’ என்பதற்கு பதில் ‘தளபதி’ விஜய் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், இந்த மாற்றம் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான அறிகுறி என்று பல விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், எஸ்.ஏ.சி. “70, 80 வயதில் வந்து ஒன்னும் செய்ய முடியாது” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close