Advertisment

90ML Trailer : நடிகை ஓவியா படத்திற்கு கடும் எதிர்ப்பு... சர்ச்சையில் சிக்கியுள்ள 90 எம்.எல் படம்

90ML Trailer controversy : சர்ச்சையை சந்திக்கும் ஓவியாவின் படம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
90ML Trailer controversy

90ML Trailer controversy

Actress Oviya 90ML Trailer controversy : பிக் பாஸ் புகழ் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல் டிரெய்லர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சமூக வலைத்தளத்திலும் இப்படத்திற்கு எதிர்ப்புகள் எழும்பியுள்ளது.

Advertisment

தமிழ் திரையுலகில் களவாணி, கலகலப்பு போன்ற சில கவனக்கக்கூடிய படங்களில் நடித்தவர் ஓவியா. பின் வரும் நாட்களில் பெரிதாக மக்களை கவரும் கதாபாத்திரங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும், பிக் பாஸ் மூலம் லட்சக்கணக்கானோர் மனதை வென்றவர். இவருக்காக ஒரு தனி ஆர்மி, ரசிகர்கள் கூட்டம் என அனைத்தையும் சம்பாதித்தார்.

சமீபத்தில் வெளியான சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். களவாணி 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

90ML Trailer controversy : 90 எம்.எல் டிரெய்லர் சர்ச்சை

இந்நிலையில், நடிகர் சிம்பு இசையமைப்பில், அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள 90எம்.எல் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டிரெய்லரில், அபாச வசனங்கள் பேசும் ஓவியா மற்றும் துணை நடிகர்கள், ஆபாச காட்சிகளிலும் நடித்திருக்கிறார். முன்னதாக இப்படத்தில் இருந்து ஃப்ரெண்டி டா பாடல் வெளியானப் போது நட்பின் உண்ணதத்தை உணர்த்தும் படமாக இது இருக்கும் என்று பலரும் யூகித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சை காட்சிகளை பார்த்த பின்னர் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் அடல்ட் படங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற படங்கள் வெளியாவதற்கு பொதுமக்கள் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இருட்டு அரையில் முரட்டு குத்து, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கும் போன்ற ஆபாச காட்சிகளை கொண்ட படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் இப்போது 90எம்.எல் படமும் இணைந்துள்ளது.

Tamil Cinema Oviya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment