பெருமைமிகு ஆஸ்கர் விருது விழாவில் இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி, சசிகபூருக்கு அஞ்சலி

சமீபத்தில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், சசிகபூர் உள்ளிட்ட பல்வேறு மறைந்த நடிகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

90-வது ஆஸ்கர் விருது விழாவில் சமீபத்தில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், சசிகபூர் உள்ளிட்ட பல்வேறு மறைந்த நடிகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவி இல்ல திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்தபோது, கடந்த 24ம் தேதி நள்ளிரவு திடீரென காலமானார். ஆரம்பத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதன்பின், குளியல் தொட்டியில் உணர்வற்ற நிலையில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு சர்ச்சைகள் மற்றும் நடைமுறை சிக்கல்களுக்கு பிறகு, ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் கடந்த புதன் கிழமை மும்பை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தால் இந்திய திரையுலகமும், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கலிஃபோர்னியாவில் நடைபெற்றுவரும் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, மறைந்த பாலிவுட் நடிகர் சசி கபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சசி கபூர் பாலிவுட்டை தாண்டி, தி ஹவுஸ் ஹோல்டர், ஷேக்ஸ்பியர் வாலா, தி குரு, பாம்பே டாக்கி, இன் கஸ்டடி என சர்வதேச மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு, டிசம்பர் 4 அன்று காலமானார்.

சசி கபூர், ஸ்ரீதேவி தவிர, ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோகர் மூரே, மேரி கோல்ட்பெர்க், ஜோஹன் ஜோஹன்சன், ஜான் ஹெர்ட், சாம் ஷெப்பர்ட் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

×Close
×Close