Advertisment

96 Review: 96 விமர்சனம்- காதல் கவிதை!

Vijay Sethupathi, Trisha Krishnan's Powerful Romantic Movie 96 Review: திரிஷா-சேதுபதியை நிஜ காதலர்களாகவே ரசிகர்கள் நினைத்துவிடும் அளவிற்கு ஒன்றியிருப்பது இன்னும் பலம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
96 Movie Review, 96 சினிமா விமர்சனம்

96 Movie Review, 96 சினிமா விமர்சனம்

Vijay Sethupathi, Trisha Krishnan Romantic Flick '96' Review: சமீபகாலமாக மாஸ் ஹீரோ பட்டியலில் ரஜினி, விஜயகாந்த் பட்டியலில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என்கிற நியூ லிஸ்ட் பார்ம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சேதுபதியின் காதல் ட்ராக் மீண்டும் 96 வடிவில் வந்திருக்கின்றது.

Advertisment

பிரேம்குமார் இயக்கத்தில் திரிஷா நாயகியாகவும், கோவிந்த்மேனன் இசையில் மகேந்திரன் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவில் வெளிவந்திருக்கக்கூடிய படம் 96. பள்ளியில் படிக்கும் போது ஏற்படும் காதலை அழகாக என்றெல்லாம் சொல்லக்கூடாது, மிக அழகாக என்றும்கூட சொல்லமுடியாத அளவு எக்சலண்ட் பிக்சரைஷன் என்று சொல்லகூடிய அளவிலே படத்தை வார்தெடுத்திருக்கின்றார் இயக்குநர் பிரேம். ஹாட்ஸ் ஹாப் பிரேம்.

காதல் கதைகளுக்குரிய சிறப்பே தொல்காப்பிய காலத்திலிருந்து தொலைபேசி, அலைபேசி, வாட்ஸ் அப் காலம் மட்டுமல்ல இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் சினிமாவில் ஹிட்பார்முலா என்றால் அது காதல் கதைதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம் 96.

போட்டோகிராபரான ராம், ஆம் அப்படித்தான் குறிப்பிட்டாகவேண்டும்( விஜய்சேதுபதி) ராம்-ஜானு(திரிஷா) ஜோடியை. போட்டோ கிராபரான ராம் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று தான் படித்த பள்ளியை பார்க்க விரும்புகின்றார். பின்பு தன்னுடன் பள்ளியில் படித்த 96-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பேட்ஜை சேர்க்க முயன்று அனைவரும் குதூகலமாக கலந்து கொள்கின்றனர்.

அங்கே தன்னுடைய முன்னாள் காதலியான ஜானுவும் வந்த பிறகு கவிதயாக செல்கின்றது படம். திரிஷா ப்ரெஷ் ரோஸ் போல் பளிச்சிடுகின்றார். இளவயது கதாபாத்திரங்களும் சூப்பர் செலக்ஷன். தேவதர்ஷினியும் கதையில் கலந்து இயல்பான கதாபாத்திரமாக மாறிவிடுகிறார்.

திரிஷா-சேதுபதியை நிஜ காதலர்களாகவே ரசிகர்கள் நினைத்துவிடும் அளவிற்கு ஒன்றியிருப்பது இன்னும் பல வருடங்களுக்கு 96 லவ் டிரெண்ட் செட் படமாக‌ மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. படத்திற்கு அனைத்துமே பலம் இயக்கம், காஸ்டிங் உட்பட! ஆனால் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணியில் கம்போஸர் கோவிந்த் மெனக்கெட்டிருக்கிறார்.

மகேந்திரன், சண்முக சுந்தரம் இருவரின் ஒளிப்பதிவும் சூப்பர். சினிமா ரசிகர்களின் ஆதரவு 60% ஆர்டினரி ரசிகர்கள் 70% பொதுமக்கள் 80%! ரசனையான 96!

திராவிட ஜீவா

:

Tamil Cinema Vijay Sethupathi Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment