Advertisment

தமிழ் ராக்கர்ஸ் பிஸி: பிக் பாஸையும் விட்டு வைக்கவில்லை

TamilRockers vs Aadai tamil Movie: ஜூலை 19 மாலையில் ரிலீஸான ஆடை படத்திற்கும் தமிழ் ராக்கர்ஸின் மிரட்டல் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadai full Movie free download, Aadai Movie download tamilrockers, ஆடை தமிழ் ராக்கர்ஸ்

Aadai full Movie free download, Aadai Movie download tamilrockers, ஆடை தமிழ் ராக்கர்ஸ்

TamilRockers threat to Aadai tamil Movie: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அடுத்தடுத்து புதுப்படங்களை திருட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிடுகிறது. ஸ்டார் விஜய் டி.வி.யில் வெளியாகும் பிக் பாஸ் தொடரையும் விட்டு வைக்கவில்லை. கடாரம் கொண்டான், தி லயன் கிங் படங்களை ரிலீஸ் நாளிலேல்யே வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

Advertisment

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், தொடர்ந்து புதிய திரைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. ஜூலை 19-ம் தேதி ரிலீஸான கடாரம் கொண்டான், தி லயன் கிங் ஆகிய படங்களை அன்றே வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது. அமலாபால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஆடை திரைப்படம் முதல் நாளில் காலையில் வெளியாக வில்லை. அதனால் அன்று அந்தப் படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாவதில் இருந்து தப்பியது.

Aadai full Movie free download, Aadai Movie download tamilrockers, ஆடை தமிழ் ராக்கர்ஸ் Aadai tamil Movie vs TamilRockers

Aadai tamil Movie vs TamilRockers: ஆடை படத்திற்கும் மிரட்டல் இருக்கிறது

ஜூலை 19 மாலையில் ரிலீஸான ஆடை படத்திற்கும் தமிழ் ராக்கர்ஸின் மிரட்டல் இருக்கிறது. ஃபைனான்ஸ் பிரச்னையில் வெளியாவதில் சிரமத்தை சந்தித்த இந்தப் படத்தை அமலாபால் தலையிட்டு, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்து வெளியிட உதவியதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, சின்னத்திரையில் கொடிகட்டிப் பறக்கும் பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியையும் ஒவ்வொரு நாளும் உடனுக்குடன் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டு, நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. தமிழ் ராக்கர்ஸ் அவ்வப்போது தனது இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு இந்த அட்ராசிட்டியை அரங்கேற்றுவதால், அதற்கு மூக்கணாங்கயிறு போட முடியாமல் தடுமாறுகிறார்கள் சினிமா உலகினர்.

இந்தச் சூழலில் 20-ம் தேதி மாலையில் ஆடை படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டது.

 

Madras Rockers Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment