Advertisment

நடிகர் ஆதியுடன் கல்யாணம் நிச்சயம்... நிக்கி கல்ராணி சந்தோஷ போட்டோஸ்

இல்லற வாழ்வில் இணையும் தமிழ் சினிமாவின் அடுத்த ஜோடி; ஆதி – நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த போட்டோஸ்

author-image
WebDesk
New Update
நடிகர் ஆதியுடன் கல்யாணம் நிச்சயம்... நிக்கி கல்ராணி சந்தோஷ போட்டோஸ்

Aadhi and Nikki Galrani got engaged viral photos: இல்லற வாழ்வில் இணைகிறது தமிழ் சினிமாவின் அடுத்த ஜோடி. தமிழில் ஹீரோவாக நடித்து வரும் ஆதி மற்றும் ஹீரோயின் நிக்கி கல்ராணி இருவரின் நிச்சயதார்த்தம் மார்ச் 24 அன்று நடந்துள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாக நடிகை நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisment

publive-image

தமிழில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ‘டார்லிங்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. முன்னதாக அவர் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார். டார்லிங் படத்திற்கு பிறகு யாகவராயினும் நா காக்க, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல், தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆதி. பின்னர் ஈரம் படத்தில் நடித்தார். ஆடுபுலி, அரவான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ரங்கஸ்தலம் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

publive-image

நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி யாகவராயினும் நா காக்க மற்றும் மரகத நாணயம் படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருந்து இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் அதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், மார்ச் 24 அன்று நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்: ட்ரெஸ் ஒண்ணுதான்… ஆனா கோணங்கள் பல… ரீல்ஸ் வீடியோவில் கலக்கும் சுஜிதா தனுஷ்

நிக்கி கல்ராணி தனது நிச்சயதார்த்தத்தின் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "வாழ்க்கையில் ஒருவரையொருவர் தக்கவைத்துக்கொள்வது சிறந்தது. நாங்கள் ஒருவரையொருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தோம், இப்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். 24.3.22 எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எங்கள் இரு குடும்பங்களின் முன்னிலையில், நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம். இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக மேற்கொள்ளும்போது உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோம்" என பதிவிட்டுள்ளார்.

இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், நிக்கி கல்ராணியின் அடுத்த படமான 'இடியட்', ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Nikki Galrani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment