Advertisment

பாலியல் கல்வி குறித்து அதிகப் படங்கள் வெளியாக இந்தப் படம் வழிவகுக்கும்: அக்ஷரா ஹாசன்

பாலியல் கல்வி குறித்து அதிக படங்கள் வெளியாக இந்தப் படம் வழிவகுத்து கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று அந்தப் பேட்டியில் அக்ஷரா ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாலியல் கல்வி குறித்து அதிகப் படங்கள் வெளியாக இந்தப் படம் வழிவகுக்கும்: அக்ஷரா ஹாசன்

பாலியல் கல்வி குறித்து அதிகப் படங்கள் வெளிவருவதற்கு அச்சம் மடம் நாணம் படம் வழி அமைத்துக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன் தெரிவித்தார்.

Advertisment

நடிகை அக்ஷரா ஹாசன் விவேகம், கடாரம் கொண்டான் ஆகிய தமிழ் படங்களில் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் நேரடியாக ஓ.டி.டி தளமான அமேஸான் பிரைமில் வெளியானது.

அந்தப் படம் தான் அச்சம் மடம் நாணம். ராஜா ராமமூர்த்தி என்ற அறிமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

அவர் பிரபல ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில், இதுபோன்ற பாலியல் சம்பந்தப்பட்ட கதைகள் எடுக்கப்பட வேண்டும். ஒரு நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தப் படம் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற கதைகள் அதிகம் எடுக்கப்பட்டால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.

தியேட்டரில் ராம் சரண் மனைவி செய்த காரியம்.. வித்தியாசமான லுக்கில் பிக் பாஸ் இல்லம்.. மேலும் செய்திகள்

இந்தப் படம் கொரோனாவுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் ரிலீஸ் ஆக காலதாமதம் ஆகிவிட்டது. பாலியல் கல்வி குறித்து அதிக படங்கள் வெளியாக இந்தப் படம் வழிவகுத்து கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று அந்தப் பேட்டியில் அக்ஷரா ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment