நடிகர் அமீர்கானுக்கு பன்றிக் காய்ச்சல்: வீடியோ மூலம் தகவல்

பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை வீடியோ மூலம் அமீர்கான் உறுதி படுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை வீடியோ மூலம் அமீர்கான் உறுதி படுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் பானி என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அமீர்கான் பங்கேற்போதாக இருந்தது. ஆனால், திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக அவர் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்ற மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோரது ரத்த மாதிரிகளையும் மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். அதில், இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உடல்நலக் கோளாறு காரணமாக தொண்டு நிறுவன விழாவை புறக்கணித்த அமீர்கான், அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது, தனக்கும், தனது மனைவிக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பதை அவர் உறுதிபடுத்தினார்.

மேலும், வீட்டில் இருந்தபடியே அமீர்கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிகிச்சை பெறுவார்கள் என்றும், இன்னும் ஒரு வாரகாலத்துக்கு எந்தவொரு நிகழ்ச்சியில் அமீர்கான் பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அமீர்கான் பங்கேற்காததால் அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

`ஹெச்1என்1’ என்ற வைரஸால் ஏற்படக்கூடிய இந்த பன்றிக் காய்ச்சலுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. காய்ச்சல், உடல்வலி, சளி என சாதாரண வைரஸ் காய்ச்சலைப் போலவே இதன் அறிகுறிகளும் இருக்கும்.

×Close
×Close