Advertisment

நடிகர் அப்பாஸ்க்கு என்ன ஆச்சு? மருத்துவமனை புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாக காதல்தேசம் படத்தின் மூலம தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அப்பாஸ்.

author-image
WebDesk
New Update
நடிகர் அப்பாஸ்க்கு என்ன ஆச்சு? மருத்துவமனை புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற அறிமுகத்துடன் பல படங்களில் நடித்த நடிகர் அப்பாஸ் தற்போது மருத்துவமகையில் சிகிச்சை பெற்று வருவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாக காதல்தேசம் படத்தின் மூலம தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அப்பாஸ். சாக்லெட் பாய் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவருக்கு முதல் படத்திலேயே பெண் ரசிகர்கள் பலர் உருவாகினார்கள். விஐபி பூச்சூடவா, ஜாலி. கமலுடன் ஹேராம், பம்மல் கே சம்மந்தம், ரஜினியுடன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ள அப்பாஸ் ஒரு கட்டத்தில் போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சகல்லம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அப்பாஸ் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ததாக அறிவித்திருந்தார்.

இதனிடையே தற்போது சிகிச்சை முடிந்து விட்டதாக கூறி ஹாஸ்பிடல் பெட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment