Advertisment

கேரளா கோவிலில் பாரம்பரிய உடையில் நடிகர் அஜித் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Tamil Cinema Update : தற்போது இயக்குந எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிக்க உள்ளார்

author-image
WebDesk
New Update
கேரளா கோவிலில் பாரம்பரிய உடையில் நடிகர் அஜித் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Actor Ajith Blessing In Kerala Temple With Traditional Dress : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இவர்கள் இருவரும் தொடர்ந்து 3-வது முறையாக இணையும இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

பொதுவாக நடிகர்கள் பலரும் தங்களது படம் தொடர்பான அப்டே்களை வெளியிட சமூகவலைதளங்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. ஆனால் அஜித் இதுவரை எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்தவில்லை. ஆனால் அவர் குறித்து வெளியாகும் தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது அஜித் கேரளாவில் ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கும் புதிய படத்திற்காக தனது தொற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ள நடிகர் அஜித் முகம் நிறைய தாடியுடன், பாரம்பரியத்தை அடையாளமாக வேட்டி மேலே ஒரு துண்டு என மிகவும் எளிமையாக காட்சி அளிக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களில், அஜித் ஒரு சில கோவில் பிரதிநிதிகளுடன் போஸ் கொடுப்பதையும், ஆரத்தி எடுப்பதைபோலவும் உள்ளது.

பாலக்காட்டில் உள்ள ஒரு ஆயுர்வேத நிலையத்தில் குருகிருபா ஹெரிடேஜ் ஆயுர்வேத சிகிச்சைகள் என்ற நிலையத்தில் இருக்கும் நடிகர் அஜித், பாலக்காட்டில் உள்ள பெருவெம்பா கோவிலில் பிரார்த்தனை செய்ததாக ஆயுர்வேத நிலைய வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போதும்போல அழகான முகம், ஃபிட்டான உடலமைப்பு சால்ட் அன்ட் பெப்பர்  லுக என அஜித் தனது வழக்கமான தோற்றத்திலேயே காட்சியளிக்கிறார். சமீபத்தில் தனது மனைவி ஷாலினியுடன், அஜித் எடுத்துக்கொண்ட அழகான போட்டோஷூட் இணையதளத்தில் வைரலாக பரவியது. இந்த கோட்டோ ஷூட்டிலும் அஜித் தனது 61-வது படத்தின் சிறப்பு தோற்றத்திலேயே காட்சியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குந எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிக்க உள்ளார். தற்காலிகமாக ஏகே 62என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், அனிருத் இசையமைப்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர் தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment