Advertisment

தோல்வியில் முடிந்த 2 திருமணங்கள்: 'டைவர்ஸ்' பற்றி பிரதாப் போத்தன் கூறியது என்ன?

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் கடந்த 1985-ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தோல்வியில் முடிந்த 2 திருமணங்கள்: 'டைவர்ஸ்' பற்றி பிரதாப் போத்தன் கூறியது என்ன?

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2 திருமணங்கள் செய்த பிரதாப் போத்தன் வாழ்வின் கடைசியில் தனி ஆளாக வாழந்து மரணமடைந்துள்ளார். திரைத்துரையில் வெற்றி பெற்ற அவர், திருமண வாழக்கையில் இரண்டு முறை தோல்வியையே சந்தித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து பிரதாப் போத்தன் விவரித்த நிகழ்வு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் கடந்த 1985-ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்

அதன்பிறகு அமலா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். 1990-ம் ஆண்டு நடந்த இந்த திருமணம் 22 வருடங்கள் நீடித்த நிலையில், இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு பிரிந்தனர். இந்த தம்பதிக்கு கேயா என்ற ஒரு மகள் உள்ளார். 2-வது திருமணமும் தோல்வியில் முடிந்த நிலையில் பிரதாப் போத்தன் தனிமையில் தனது வாழ்கையை கடக்க தொடங்கினார். மகளுடன் மட்டுமே பேசி வந்தார். அவர் தற்போது பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டார்.

பிரதாப் போத்தன் இயக்கிய முதல் படமான 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தில் ராதிகா கதாநாயகியாக நடித்தார். அதன் படப்பிடிப்பின் போது இருவரும் காதலித்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர், ஆனால் இரு தரப்பு குடும்பத்தினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "நான் தவறு செய்கிறேன் என்று என் உறவினர்கள் சொன்னார்கள். ராதிகாவின் உறவினர்களும் ஒத்துழைக்கவில்லை. இருப்பினும், நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம்" என்று பிரதாப் போத்தன் ஒரு பேட்டியில் கூறினார்.

"இரண்டு வருடங்கள் ஒன்றாக இருந்தோம், ஆனால் குழந்தை இல்லை. பின்னர் அந்த உறவு வறண்டு போனது. பிரச்சனைகள் உருவாகி விரைவில் பிரிந்துவிட்டோம். இந்த சூழ்நிலைக்கு நாங்கள் இருவரும் தான் காரணம். ஒருவரை மட்டும் குறை சொல்ல முடியாது" என்று அவர் அதில் குறிப்பட்ட பிரதாப் போத்தன் பின்னர் திருமணம் என்பது ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் என்று கூறினார். "காதல் இல்லை. பேரார்வம் இல்லை. நாங்கள் ஒரு பாதையை தயார் செய்து அந்த பாதையில் பயணிக்க முயற்சிக்கிறோம். ஆனால் அது சலிப்பாக இருக்கும், " என்று அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பிரதாப் போத்தனின் இரண்டாவது திருமணம் 1990 இல் நடந்தது. மும்பையில் உள்ள டாடா நிறுவனத்தில் பொது மேலாளராக இருந்த அமலா சத்யந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், 22 வருட திருமண வாழக்கை 2012-ம் ஆண்டு பிரிந்தது. பிரதாப் போத்தனுக்கு தனது திருமணங்கள் ஏன் தோல்வியடைந்தன என்பது பற்றிய தெளிவான யோசனை இருந்தது. "திருமணத்தில் இரண்டு வெவ்வேறு நபர்கள் ஒன்று சேருகிறார்கள்.

இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், அவர்கள் உண்மையில் ஒன்றாக வருவதில்லை. அவர்கள் ஒன்றாக மாறாத வரை, உறவு ஒன்றுபடாது என் உறவுகள் அனைத்தும் மற்றொரு நபருடன் இணைவதற்கான சோதனைகள். ஆனால் அந்த சோதனைகள் தோல்வியடைந்தன, "என்று அவர் கூறினார்.

பிரதாப் போத்தன் மீது மிகப்பெரிய செல்வாக்கு செலுத்திய பெண் அவரது தாயார். பிரதாப் போத்தன் தனது 29 வயதில் தனது தாயை இழந்தார் மற்றும் அவரது மரணம் அவரை அனாதையாக்கியது என்று திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கூறினார். "என் அப்பா கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால செயல்பாட்டாளர்களில் ஒருவராக இருந்தார். அந்த நேரத்திலும், அப்பா இறந்த பிறகும், மம்மி தனது கஷ்டங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்காமல் எங்களை வளர்த்தார்" என்று பிரதாப் போத்தன் கூறினார்.

மம்மி தான் இழந்ததையெல்லாம் திரும்பப் பெற கோர்ட்டுக்கு சென்று வழக்கில் வென்றார் அது அவளுடைய வெற்றி மட்டுமே " என்று பிரதாப் போத்தன் நினைவு கூர்ந்தார் . மேலும், மம்மி மட்டுமே எனது கலைத் திறமையை ஊக்குவித்தவர். அவர் பியானோவை நன்றாக வாசிக்க சொல்லிக்கொடுத்தார். சுவையான உணவுகளை சமைத்து கொடுத்தார்.வண்ணமயமான வாழக்கையை கொடுத்தார் என்று பிரதாப் போத்தன் ஒருமுறை கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment