தில், பாபா, பகவதி ஆகிய படங்களில் வில்லனாகவும் கில்லி படத்தில் விஜய்-க்கு தந்தையாகவும் நடித்த பிரபல நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தனது 60 வயதில் அஸ்ஸாமைச் சேர்ந்த பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவருக்கு சினிமா ரசிகர்கள், நெட்டிசன்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி திரைப்படத்தின் மூலம் கடந்த 1991 ஆம் ஆண்டு குணச்சித்திர நடிகராக அறிமுகமான ஆசிஷ் வித்யார்த்தி, தமிழ் சினிமாவுக்கு விக்ரம் ஹீரோவாக நடித்த தில், படத்தின் மூலம் மிரட்டலான வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தில் படத்தைத் தொடர்ந்து, பாபா, ஏழுமலை, பகவதி, தமிழன் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்தார். பிறகு, விஜய்யின் கில்லி படத்தில் விஜய்க்கு தந்தையாக போலீஸ் கதாபாத்திரத்தில் குணச்சித்திர நடிகராகவும் மிளிர்ந்தார்.
தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த ஆஷிஷ் வித்யார்த்தி, சமீபகாலமாக தமிழ் படங்களில் அதிகம் நடிப்பது இல்லை. ஆனால், ஹிந்தி தெலுங்கு மலையாளம் பெங்காலி படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி தன்னுடைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, ஏற்கனவே ரஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆஷிஷ் வித்யார்த்தி, பிரிந்து வாழ்ந்து வந்தார்.
தற்போது 60 வயதாகும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, அஸ்ஸாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்கிற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவா ஜோடி மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமணம் (மே 25) கல்கத்தாவில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆஷிஷ் வித்யார்த்தி, திருமணம் செய்து கொண்டுள்ள ரூபாலி கௌஹாத்தியில் பேஷன் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“