தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்லை பிரபாகரன் பிறந்தநாள் இன்று. சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கிய பிரபாகரன் தமிழர்களுக்கென தனி நாடு என்ற கோரிக்கையுடன் போராடத் தொடங்கினார். இவரின் பிறந்தநாளான இன்று அரசியல் பிரமுகர்கள் பலரும் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பிரபாகரன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா
சீறும் புலி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வெங்கடேஷ் குமார்.ஜி இயக்குகிறார். இதில் பிரபாகரனாக நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார். ‘ஸ்டுடியோ 18' என்ற நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.
November 2018
பிரபாகரனின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாபு சிம்ஹா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது தமிழ் தேசியவாதிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்' படத்துக்கு பிறகு நடிகர் பாபி சிம்ஹா கைவசம் ரஜினிகாந்தின் ‘பேட்ட', JPR (ஜான்பால் ராஜ்)-வுடன் இணைந்து ஷாம் சூர்யா இயக்கும் ‘அக்னி தேவ்', விஜய் தேசிங்குவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்' என அடுத்தடுத்து படங்களிலும் நடித்து வருகிறார்.