Advertisment

புதிய நடிகர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன் : விக்ரம் வெற்றி விழாவில் கமல் பேச்சு

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலில் பல சாதனைகளை படைத்தது.

author-image
WebDesk
New Update
Kamal Haasan congratulates Bharathiraja who returned home after treatment in the hospital

நடிகர் கமல்ஹாசன்

பி.ரஹ்மான் கோவை

Advertisment

கோவை கே.ஜி. திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி வெளியான படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வெளியான இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் நரேன் உள்ளிட்ட பல நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலில் பல சாதனைகளை படைத்தது.

publive-image

இதனிடையே விக்ரம் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு 100-வது நாளை கடந்தது. தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இந்த படத்தில் வெற்றி கமல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோவை கே.ஜி. திரையரங்கில் விக்ரம் படத்தில் 100-வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு அலங்கார வளைவுகள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக திரையரங்க ஊழியர்களை நினைவு பரிசுகளை கமல்ஹாசன் வழங்கினார்.

publive-image

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்,

சினிமாவில் நடித்த ஆரம்பத்தில் என்னை நீ தானா அந்த பிள்ளை என கேட்ட போது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுக்கவில்லை. அதை மாற்றவும் உழைத்தேன். சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை கொள்ள முடியாது. ஒடிடி காலகட்டத்தில் பழைய திரையரங்குகளை மல்டி ப்ளேக்ஸ் தியேட்டர்களாக மாற்ற இளைஞர்கள் முன் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒடிடி குறித்து முன்கூட்டியே சொல்லியிருந்தேன். இப்போது வந்துயிருக்கிறது. திரையரங்குளில் உணவகம் வரப்போகிறது. அமெரிக்காவில் வந்துவிட்டது. உணவகமும் தொழில் தான் சினிமாவின் மவுஸ் இன்னும் குறையவில்லை. வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போன்று சினிமாவும் தான். 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

publive-image

நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது. ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும். நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். மக்கள் வாழ்த்தினால் சம்பளம் இரண்டு மடங்கு ஆகும். என்னை மட்டுமல்ல. நன்றாக நடிக்கும் நடிகரை வாழ்த்துங்கள். சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும்.

வட இந்தியாவில் பயப்படுகிறார்கள், தென்னிந்திய சினிமாவின் பக்கம் அனைவரின் பார்வை திரும்பிவிட்டது. என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கிறது. புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன். கோவை எனக்கு பிடித்த ஊர்.

publive-image

கோவையில் விக்ரம் க்ளைமேக்ஸ் படம் எடுக்கும் போது எனக்கு கோவிட் வந்து விட்டது. ராஜ்கமல் நிறுவனம் 53 வது படத்தை தயாரித்து வருகிறது. குறைந்த காலக்கட்டத்தில் 100-வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் நினைக்கிறேன். அது பேராசை கிடையாது. பேன், ஏசி வந்தவுடனும், ஏரி கரையில் நடக்குறோம்ல்ல, அந்த மாதிரி தான் சினிமா. சீனாவில் 50 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் உள்ளது. அதைவிட கூட்டம் இங்கு இருக்கு சினிமா வளர அதை நாம் இங்கு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment