Advertisment

2 பேருமே இன்றைய முன்னணி ஹீரோஸ்: அடையாளம் தெரிகிறதா?

அண்ணனின் 25 ஆண்டுகள் திரைப்பயணம்; தம்பி பகிர்ந்த சிறுவயது புகைப்படம்; சமூக வலைதளங்களில் வைரல்

author-image
WebDesk
New Update
2 பேருமே இன்றைய முன்னணி ஹீரோஸ்: அடையாளம் தெரிகிறதா?

நடிகர் சூர்யா திரைத்துறையில் தனது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவரது தம்பி கார்த்தி அவர்களின் சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த முன்னனி ஹீரோக்களின் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர்களை அடையாளம் கண்டு அக மகிழ்ந்து வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சூர்யா. பின்னர் நந்தா, காக்கா காக்கா, கஜினி மற்றும் சிங்கம், சிங்கம் 2 போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்திய ஆண்டுகளில், அவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. சூர்யா கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மாதவனின் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் ஆகிய படங்களிலும் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா; ஜோடியாக வந்த சித்தார்த், அதிதி ராவ்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். மேலும் ஆஸ்கர் விருது குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

இப்படியாக, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டி சிறப்பாக நடித்து வரும் சூர்யா, இன்று தனது திரை வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒரு விலைமதிப்பற்ற த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் #25YearsOfCultSuriyaism என்ற ஹேஷ்டேக்குடன், "அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப்பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார். அவர் தனது சொந்த சாதனைகளை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு மனிதராக, அவர் ஏற்கனவே தாராளமாக இருந்த தனது இதயத்தை இன்னும் பெரிதாக்கினார் மற்றும் தகுதியான ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார். அது தான் என் சகோதரர்." எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், திரைப்படங்களில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "உண்மையிலேயே அழகான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள்..! கனவு காணுங்கள் மற்றும் நம்புங்கள்... உங்கள் சூர்யா." என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் மற்றும் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment