(அத பார்த்தாதான் சொல்ல முடியும்-னு நீங்க சொல்றது புரியுது…) தொடர் தோல்விகளை கொடுத்துவரும் நடிகர் கிருஷ்ணா, அதாங்க…நம்ம இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி.., ஆங்! அந்த கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன், நிதின் சத்யா, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘பண்டிகை’.
ஃபெரோஸ் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வழக்கமான கதையாக இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமான கதைக் களத்தை இப்படக்குழு கையில் எடுத்திருப்பது டிரைலரில் தெரிகிறது. கிருஷ்ணா இம்முறை மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த கதையை தேர்வு செய்துள்ளது அருமை. அதுசரி! என்ன கதை-னு கேட்குறீங்களா? அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால், டிரைலரை பார்த்தால் நீங்களே எளிதாக கெஸ் பண்ணிடுவீங்க.
ஆர்.ஹெச்.விக்ரம் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர்களது முயற்சி வெற்றிப் பெற வாழ்த்தி, அப்படியே அந்த டிரைலரையும் பார்த்துவிடுவோம்.