குஷ்பு மற்றும் சுகாசினி கேரள முதல்வரை சந்தித்தது இதற்குத்தான்!

குஷ்பு, சுகாசினி, லிசி ஆகியோர் 40 லட்சம் நிதி வழங்கினர்.

குஷ்பு மற்றும் சுகாசினி இருவரும் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து கேரளாவிற்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

குஷ்பு மற்றும் சுகாசினி:

கேரள மாநிலம் இதுவரை சந்தித்திராத மாபெரும் இழப்பை இந்தாண்டு சந்தித்தது. வரலாறு காணாத மழை பாதிப்புகளால் கேரள மாநிலம் சோகத்தில் ஆழ்ந்தது. நமது அண்டை மாநிலமான கேரளாவை இந்த மாபெரும் துயரத்தில் இருந்து நீக்க அனைத்து நாடுகளும் முன் வந்தன.

அவர்களுக்கு தேவையான வெள்ள நிவாரண நிதி, உணவு போன்ற பல்வேறு உதவிகளும் அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் உதவியால் அவர்களிடம் சேர்க்கப்பட்டது. கேரள வெள்ள நிவாரண நிதிக்கு திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் நிதி உதவி அளித்தனர்.

1980களில் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகர் நடிகைகள் இணைந்து கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கினர். நேற்று (31.8.19) திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த இந்த அமைப்பை சேர்ந்த குஷ்பு, சுகாசினி, லிசி ஆகியோர் 40 லட்சம் நிதி வழங்கினர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close