Advertisment

நடிகராக முத்திரை பதித்த மாதவன்... இயக்குநராக ஜெயித்தாரா? ராக்கெட்ரி விமர்சனம்

Tamil Movie Review : அறிவியல் தொடர்பான காட்சிகளை முடிந்த அளவுக்கு தெளிவாக எடுத்துரைக்க மாதவன் முயற்சித்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
நடிகராக முத்திரை பதித்த மாதவன்... இயக்குநராக ஜெயித்தாரா? ராக்கெட்ரி விமர்சனம்

Rocketry The Nambi Effect Movie Review In Tamil : இந்தியாவின் புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட தேசதுரோப பழியில் இருந்து எப்படி மீண்டு வந்தார் அதன்பிறகு அவர் செய்த சாதனைகள் என்ன என்பதை விவரிக்கும் படம் தான் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்.

Advertisment

நமக்கெல்லாம் சாக்லேட் பாயாக அறிமுகமாகி பின்னளில் ஆக்ஷன் ஹீரோவாக பரிட்சயமாக நடிகர் மாதவன் இந்த படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்தள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இளம் வயதில் வழக்கமான மேடியாக தெரிந்தாலும், அடுத்தடுத்து வரும் வயதான கேரக்டர்களில் வித்தியாசம் காட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் நம்பி நாராயணனே இந்த படத்தில் நடித்துள்ளாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நடிப்பில் தனது முத்திரையை ஸ்ராங்காக பதித்துள்ளார் மாதவன். இந்தியாவின் ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக தேச துரோக வழக்கு பதிந்ததால், குடும்பத்துடன் ஊர்மக்களால் அவமானப்படுத்தப்படும் நம்பி சில வருடங்களுக்கு பிறகு டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வது போல் கதை தொடங்குகிறது.

பிரிஸ்டன் பல்கலை கழகத்தில் ஒரு ஆராய்ச்சி மாணவராக தொடங்கும் நம்பியின் பயணம், விகாஸ் எஞ்சின் உருவாக்கம், விக்ரம் சாராபாய் அப்துல்காலம் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங்குடனான நட்பு சோவியத் யூனியனில் பெரிய சாகசம் உள்ளிட்ட தொகுப்புகளுடன் தொடங்கும் ராக்கெட்ரி முதல்பாதியில் அறிவியல் தொடர்பான வசனங்களை குறைத்திருக்கலாம் என்று தொன்றுகிறது.

அதேபோல் இந்த அறிவியல் தொடர்பான காட்சிகளை முடிந்த அளவுக்கு தெளிவாக எடுத்துரைக்க மாதவன் முயற்சித்திருக்கிறார். இதனாலே ராக்கெட்ரி படத்தின் முதல் பாகம் டாக்குமென்ரி எஃபெக்டை கொடுக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட பொய்யான தேச துரோக வழக்கை பற்றி பேசும் இந்த படத்தில் அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்திருக்கலாம்.

இவர் எப்படி இந்த சதிவலையில் சிக்கினார், இதற்கு காரணம் என்ன, யார் இதை செய்தது என்பதற்கு படத்தில் தெளிவான விளக்கங்கள் இல்லை. தோல்வி, துரோகம், சர்சசை இது போன்று இந்த படத்தின் எமோஷன் காட்சிகளும் பத்தோடு பதினென்றாக கடந்து போய்விடுகிறது. இதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 நம்பி நாராயணனின் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன், கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு பிறகு அதேபோன்று ஒரு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றபடி அப்துல்கலாமாக வரும், குல்சன் குரோவர், விக்ரம் சாராபாயாக வரும் ரவி ராகவேந்திரா தங்களது பங்குக்கு வந்து செல்கின்றனர். கௌரவ வேடத்தில் வந்தாலும் சூர்யா மீண்டும் ஒருமுறை தான் நடிப்பு ரோல்க்ஸ் என்பதை நிரூபித்துள்ளார்.

சாம் சி.எஸ் இசை படத்திற்கு சற்று பலம் சேர்த்தாலும் அவரின் வழக்கமான டோன் வரவில்லை என்ற உணர்வை கொடுக்கிறது. அதேபோல் வெளிநாடுகளில் நடக்கும் காட்சிகளுக்கு உண்மை தன்மை கொடுக்கும் வகையில் ஒளிப்பதிவாளர் செர்ஷா ரே தனது பணியை செவ்வனே செய்துள்ளார். மற்றடி பிஜித் பாலா எடிட்டிங் பணிகளை குறை சொல்ல முடியாத அளவுக்கு செய்துள்ளார்.

திரைக்கதை எழுதி மாதவன் முதல்முறையாக இந்த படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். நடிகரான இந்த படத்தில் தனி முத்திரை பதித்த மாதவன் இயக்குநராகவும் முக்கால் கிணறு தாண்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் ஒரு தனி மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான இந்த படம் ஒற்றொரு இந்தியரும் கண்டிப்பான தெரிந்து கொள்ளவேண்டிய வரலாறு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Madhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment