உலக அழகியுடன் ஆடிய ஆணழகன், இன்று தெலுங்கு படத்தில் சைட் ரோலில்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களுக்கும் சீனியர் என்றால் அது பிரஷாந்த்தான்.

நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த்

தமிழ் சினிமாவின் ’ஆணழகன்’ என்று அழைக்கப்படும் நடிகர் பிரசாந்த், தெலுங்கு படம் ஒன்றில் சைட் ரோலில் நடித்திருப்பது இணையதளத்தில் ஒரு விவாதமாகவே சென்றுக் கொண்டிருக்கிறது.

உலக அழகியுடன் ஆடிய ஆணழகன்:

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர், நடிகைகளை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.  அவர்கள்  ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும்  ஏதோ ஒரு காரணத்தினால்  ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிடுவார்கள்.

ஆண்டுகள் கழித்து  அவர்களை மேடை நிகழ்ச்சிகளிலோ, சின்னத்திரையிலோ அல்லது மீண்டு பெரிய திரையிலோ பார்த்து விட்டால் நம்மையே அறியாமல் ஒரு ஆனந்தம் வந்து விடும்.   அவர்களை பார்த்ததும் நாம் சொல்லும் முதல் டைலாக் என்ன தெரியுமா? “ஒரு காலத்துல எப்படி இருந்த மனிஷன் ப்ப்பா.. இப்ப இப்படி ஆயிட்டாரு.. ஆளு அட்ரஸே தெரியல” என்பது தான்.

இந்த வாசகத்திற்கு பிறகு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அப்படித்தான்  நடிகர் பிரசாந்தை திரையில் பார்த்த தமிழ் ரசிகர்கள் இன்பம் கலந்த அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவில்  முதன்முறையாக உலக அழகியுடன்  நடித்தவர் என்ற பெயரை பெற்றவர் இவர் மட்டுமே.

அழகான, அத்தனை திறமைகளும் உள்ளடக்கிய, முக்கியமாக நன்கு நடிக்கத் தெரிந்த நடிகர் பிரசாந்த் இப்போது எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது. இன்றைய வாரிசு நடிகர்களுக்கு முன்னோடி, அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களுக்கும் சீனியர் என்றால் அது பிரசாந்த்தான்.

பிரசாந்த் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஜானி  படத்தின் டீசர்சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்திருந்தது. இந்நிலையில்  நேற்றைய தினம், ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் ‘வினய விதய ராமா’ படத்தின் டீசர் வெளியாகியது.

இந்த டீசரில் நடிகர் பிரசாந்த் இடம்பெற்றிருந்தார். அதுவும் ஹீரோ ராம் சரணுக்கு பின்னால் இருக்கும் சைட் ரோலி.  1 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் பிரசாந்த் 2 காட்சிகளில் வந்து சென்றார். இதைப் பார்த்த அவரின் ரசிகர்கள்  அதிர்ச்சி அடைந்தனர்.

இதுக்குறித்து சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்தும் வருகின்றன. ”பிரசாந்தை மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சி என்றாலும்  அவரை துணை கதாபாத்திரத்தில் பார்ப்பது வருத்தம் அளிக்கிறது” என்று கருத்து கூறியுள்ளனர்.

மாற்றம் ஒன்றே மாறாது என்பார்கள்.  ஒரு கலைஞன் தனது பணியை சிறப்பாக செய்தால் அவருக்கு பாராட்டு நிச்சயம். சில சமயங்களில் அந்த பாராட்டு  வந்து சேர்வதற்கு நேரம் எடுக்கலாம்.  ஒருவேளை  தெலுங்கில் கம்பேக் கொடுத்த பிரசாந்த் தமிழில் வந்தால், அவருக்கான வரவேற்பு வேறு மாறி இருக்கலாம். இதற்கான விடையை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor prashanth act side role in ram saran movie

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com