அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

‘காலா’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி மும்பையில் இருந்து அவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்

அமெரிக்காவிற்கு சென்றிருந்த ரஜினிகாந்த் திங்கள்கிழமை சென்னை திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் 2.O திரைப்படத்தைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காலா’ திரைப்படத்தில் நடித்து கவனம் செலுத்தி வந்தார். இதற்காக மும்பை சென்ற ரஜினி அங்கு படப்பிடிப்பில் நடித்து வந்தார். ‘காலா’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி மும்பையில் இருந்து அவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் தங்கி மருத்துவ பரிசோதனைகளை ரஜினி செய்து கொண்டார்.

இதடையே ரஜினிகாந்த் அமெரிக்காவில் சூதாட்ட கிளப் ஒன்றில் இருக்கும் படம் சமீபத்தில் வெளியானது. இதேபோல, காரில் செல்லும் ரஜினிகாந்தின் செல்ஃபி வீடியோவும் வெளியானது. இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். சென்னையில் நடைபெறும் காலா படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

×Close
×Close