Advertisment

இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு : கன்னட படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு

கன்னட சினிமாவின் இளம் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியான படம் காந்தாரா.

author-image
WebDesk
New Update
Tamil News Update: கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழக்கும் விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தற்போது தமிழ் தெலுங்கு, மலையாளம் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ஹிட் அடித்துள்ள காந்தாரா படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisment

கன்னட சினிமாவின் இளம் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியான படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டியே நாயகனாக நடித்த இந்த படத்தில், சப்தமி கௌடா நாயகியாகவும், கிஷோர், ப்ரமோத் ஷெட்டி, அச்சுயுத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மன்னர்கள் காலத்தில் தானம் செய்யப்பட்ட நிலத்தை மன்னர் குடும்பத்தினர் திரும்ப பெற முயற்சிக்கும்போது நடக்கும் விபரீதங்களை ரசிகர்களுக்கு விறுவிறுப்பு குறையாமல் கொடுத்த இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தற்போது இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 என பிரம்மாண்ட வெற்றிப்படங்களை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் 16 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் தற்போதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் பலரின் பாராட்டுக்களை பெற்ற காந்தாரா படத்திற்க தற்போது நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,

தெரிந்ததை விட தெரியாதது அதிகம்" இதை விட சினிமாவில் யாரும் சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. கந்தாரா திரைப்படம் மூலம் நீங்கள் எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தி விட்டீர்கள். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பை கொடுத்த இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment