படம் ஃபுல்லா புதுமுகமா? இதுல ரொம்ப பழைய முகம் ரஜினி தான்; பா.ரஞ்சித்திடம் சொன்ன ராதாரவி!

’கபாலி’ படத்தில் நடிப்பதை தான் நிராகரித்தது தொடர்பான தகவலை நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.

’கபாலி’ படத்தில் நடிப்பதை தான் நிராகரித்தது தொடர்பான தகவலை நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
radha

படம் ஃபுல்லா புதுமுகமா? இதுல ரொம்ப பழைய முகம் ரஜினி தான்; பா.ரஞ்சித்திடம் சொன்ன ராதாரவி!

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதா ரவி. இவர் ஏராளமான படங்களில் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் உள்ளார். 1970-களின் இறுதியில் சினிமாவில் அறிமுகமான ராதா ரவி, 1980 மற்றும் 1990-களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கினார். 

Advertisment

அவரது தனித்துவமான குரலும், மேடை போல் பேசும் பாணியும், பல படங்களில் அவரது பாத்திரங்களை மறக்க முடியாதவையாக மாற்றின. ‘வைத்தேகி காத்திருந்தாள்’, ‘புலன் விசாரணை’, ‘அமைதி படை’, ‘பாஷா’, ‘சேதுபதி ஐ பி எஸ்’, ‘சின்ன தம்பி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 

இவர் ஒரு திறமையான டப்பிங் கலைஞராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்; மலையாளம் மற்றும் தெலுங்கில் இருந்து தமிழுக்கு பல நடிகர்களுக்கான குரலை கொடுத்துள்ளார். திரையரங்க சங்கங்களில் இயங்கிய அனுபவம், அவரது தொழில்முறை அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் இவர் அந்த சங்கங்களுக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவருடைய நேரடியான பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், தனது கருத்துகளில் உறுதியுடன் நிலைத்திருந்தவர். வில்லனாக, தந்தையாக, அதிகாரியாக, அரசியல்வாதியாக என பலவிதமான கதாபாத்திரங்களில் பணியாற்றிய  ராதா ரவியின் சினிமா பயணம், தமிழ் திரையுலகத்தில் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. இவர் ஒரு நேர்காணில் ‘கபாலி’ படத்தை தன்னை ஒரு நாள் நடிக்க அணுகிய அனுபவம் குறித்து பேசியுள்ளார்

Advertisment
Advertisements

அவர் பேசியதாவது, "ஒரு நாள் நான் ரஜினி படத்தில் நடித்தது இல்லை. நடித்தால் 10 நாட்கள் 15 நாட்கள் தான் நடிப்பேன். நீ ஒரு நாளைக்கு கூப்பிடுகிறாயே என்று என் பாணியில் அன்பாக பேசினேன். அப்பறம் மேடையில் இயக்குநர் பா. இரஞ்சித் அமர்ந்திருந்தார். அப்போது என்னிடம் பேசிய நபர் இயக்குநர் தான் எல்லாம் புதுமுக இருக்க வேண்டும் என்று கூறினார் என்றார். அதற்கு நான் இருக்கிறதுலேயே பழைய முகம் ரஜினி தான் என்று கூறினேன்” என்றார்.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கபாலி’. இந்த படத்தில் சாய் தன்ஷிகா, ராதிகா ஆப்தே, அட்டகத்திட் தினேஷ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: