Advertisment

5 முறை மிஸ்டர் மதுரை பட்டம்.. பலருக்கும் தெரியாத ரோபா ஷங்கரின் வெற்றிப்பயணம்!

அன்றிலிருந்து இன்று வரை தனது மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை ரோபா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5 முறை மிஸ்டர் மதுரை பட்டம்.. பலருக்கும் தெரியாத ரோபா ஷங்கரின் வெற்றிப்பயணம்!

actor robo shankar family : காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் காமெடியனாக கலக்கிவருகிறார். ரோபோ ஷங்கர் முதன் முதலாக டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

Advertisment

கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையால் இன்று மிகப் பெரிய இடத்தை தன்க்கென அமைத்திருக்கும் ரோபாவின் கடின உழைப்பு இன்றியமையாதது. ரோபாவை தொடர்ந்து அவரின் மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா எல்லாரும் பெரிய திரையில் கலக்கி வருகின்றனர்.

publive-image

நட்சத்திர தம்பதியின் மகள் என்பதையும் தாண்டி, பிகில் படத்தின் மூலம் கிடைத்த புகழால் சோசியல் மீடியாவில இந்திரஜாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் தனது தந்தை ரோபோ சங்கருடன் சேர்ந்து டிக் டாக் செய்து அடிக்கடி ஷேர் செய்வார். அனைத்துமே லைக்ஸ்களை அள்ளும். இந்த டிக் டாக் வீடியோவை பார்த்த பின்பு தான் இந்திரஜாவுக்கு பிகில் படவாய்ப்பு கிடைத்தது. ரோபோ ஷங்கர் தனது மகள் மற்றும் மனைவி குறித்து அனைத்து மேடைகளிலும் பதிவு செய்து உள்ளார்.அவரின் வெற்றிக்கு காரணமாக தனது காதல் மனைவி பிரியங்காவை தான் குறிப்பிடுவார்.

publive-image

 

ரோபோ ஷங்கரின் திருமணம் காதல் திருமணம் ஆகும். கடந்த 2002 ஆம் ஆண்டு நடன கலைஞரான பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அன்றிலிருந்து இன்று வரை தனது மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை ரோபா.

நடிகைகளை மிஞ்சும் அழகில் ஷிவானி.

நடிகரா, மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாதான் ரோபோ ஷங்கரை பலருக்கும் தெரியும். ஆனால் அவர், அடிப்படையில் ஒரு ஜிம் கோச்சர். ஐந்து முறை மிஸ்டர் மதுரை பட்டம் வாங்கியிருக்கார். மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கார்.ஜிம் கோச்சரா வேலை பார்த்து கொண்டே மேடையில் மிமிக்ரி செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். நடிப்பு மேல் அவர் வைத்திருந்த காதல் தான் இன்று அவரை இந்த இடத்திற்கு வர வைத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment