சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர் மர்ம மரணம்; போலீஸார் விசாரணை!

இந்நிலையில், அங்குள்ள கல்குவாரி நீரில் அடையாளம் தெரியாத சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

நடிகர் சிவகார்த்திகேயனின் வீடி, திருச்சி காஜாமலை பகுதியில் உள்ளது. இந்த வீட்டில், சாத்தனூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தோட்ட வேலை செய்து வந்தார்.

கடந்த 3 நாட்களாக அவர் தோட்ட வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள கல்குவாரி நீரில் அடையாளம் தெரியாத சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், தண்ணீரில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, சடலமாக கிடந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆறுமுகம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்செயலாக கல்குவாரி நீரில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close